11/09/2024
ஓய்வு நேரத்தை மாணவர்கள் எவ்வாறு பயனுள்ள வகையில் செலவிடுவது என்பதற்கு முன் உதாரணமாக திகழும் எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவன் திரு முகமது ரிஸ்வான் தன்னுடைய சேகரிப்பில் இருந்த பழங்கால மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நாணயங்களை இன்று காட்சிப்படுத்தினார். அவருடைய சேகரிப்பு ஆர்வம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இதை கண்டு ரசித்த மாணவர்களில் சிலர் தாங்களும் இது போன்ற ஏதேனும் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தங்களுக்குள் உறுதியேற்றனர்.
இத்தகைய நம்பிக்கை அளிப்பது ஒரு கல்வி நிலையத்தின் உண்மையான நோக்கம் அவ்விதத்தில் பெருமை கொள்கிறது அரசு மேல்நிலைப்பள்ளி புத்தாநத்தம்.