கடந்த கல்வி ஆண்டின்
🌹கருணையான நிகழ்வுகள் 🌹
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) நமது முன்னாள் மாணவர்கள், நமது பள்ளியில் பயின்று வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக் வழங்கிய கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சீருடை பற்றிய சில விவரங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
உதவி வழங்கிய முன்னாள் மாணவர்களின் எண்ணிக்கை 49
உதவி பெற்ற மாணவர்களின்
எண்ணிக்கை 400
49 முன்னாள் மாணவர்களால் 400 ஏழை மாணவர்களின் கல்விக் கனவு கடந்த ஆண்டு நிறைவேறியிருக்கிறது.
இந்த ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் முன்னாள் மாணவர்கள்
9994095426 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளவும் 🙏
நன்றிக்குரிய முன்னாள் மாணவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு.வில்லியம்ஸ் கண்ணன்
திரு.பொன்.ரவிச்சந்திரன்
1986-1993 மாணவர்கள் ( Mr.SPR Boys)
திரு.ஜெயராஜா
தெய்வத்திரு.தினேஷ்காமு
திரு.ரிச்சர்டு
திரு.தட்சிணாமூர்த்தி
( எனது நண்பர் - சென்னை)
திரு.விஷ்ணுராம்
திரு.கணேஷ்குமார்
திரு.A.U.அருண்
திரு.A.உதயசூரியன் ( முன்னாள் HM)
திரு.A.வரதராஜன்(முன்னாள் ஆசிரியர்)
திரு.Dr.இளநாகன்
திரு.ராகேஷ்
திரு.சிவகார்த்திக்
திரு.பிரபாகரன்
திரு.சதீஸ்குமார்
திரு.M.சிவப்பிரகாஷ் ( ஆசிரியர் திரு.மாகாலிங்கம் அவர்களின் உறவினர்)
திரு.மதி அண்ணன் ( பள்ளி கேண்டீன்)
திரு.சின்னு ராம்குமார்
திரு.வைரவராஜா
திரு.ராஜசேகர்
❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏
MNUJayaraj Nadar Higher Secondary School
Our School is situated on Madurai – Cochin National Highways(NH 49), just about 10 km to the west
16/04/2024
எம் பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் புலவர் சேதுராமன் இன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
ஓடி ஓடி உழைத்த நீங்கள்
இனி
ஓய்வுகொள்ளுங்கள் ஐயா
18/03/2024
🙏🙏🙏 பணி ஓய்வு ✋✋✋✋
அன்புக்குரிய முன்னாள் மாணவர்களே,
நமது பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு.P. பிரபாகர் பிரதாப் சிங் (60) இந்தக் கல்வி ஆண்டோடு (2023-2024) ஓய்வு பெறுகிறார். வரும் புதன்கிழமை (20.03.2024) மாலை நமது பள்ளியில் அவருக்கு பணிஓய்வை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
அவரைப் பாராட்டி நான் பேச இருக்கிறேன். சக ஆசிரியராக , நல்ல நண்பராக அவரைப்பற்றி நான் முழுமையாக அறிவேன். அவரின் மாணவர்களாகிய நீங்கள், அவரைப்பற்றிய உங்கள் நினைவுகளை, அவர் உங்களை கவர்ந்த விதத்தை, அவரிடம் உங்களுக்கு பிடித்த விசயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டால், உங்கள் சார்பாக பாராட்டு விழாவில் உங்கள் கருத்தை தெரிவிப்பேன். சின்சியர் அண்ட் டெடிகேட்டட் ஆசிரியருக்கு உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுக்கட்டும்.
Messenger ரிலோ, இங்கே கமெண்ட் டிலோ உங்கள் கருத்தை தெரிவியுங்கள். நன்றி 🙏
வெ. ஈஸ்வரன் 9994095426🌹 Eswaran Vellaichamy
27/06/2023
26/01/2023
🏅தமிழ்நாடு அளவில் முதலிடம் 🏅
தமிழ் நாடு அளவில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கான சிலம்பப் போட்டியில் , நமது பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் K. வெங்கடேஷ் , முதலிடம் பெற்று , தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
நமது பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவரை இன்று நமது பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நமது பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் வாழ்த்தி, பரிசு கொடுத்து பெருமைப் படுத்தினர்.
13/01/2023
🍁விடுதியின் 66 வது ஆண்டு விழா 🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அன்பு மாணவர்களே,
இன்று ( 12.01.2023) நமது ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல் நிலைப் பள்ளியின் 66 ஆவது விடுதி விழா நடைபெற்றது. விழாவில் நமது பள்ளியின் முன்னாள் மாணவர் , இதய நோய் சிறப்பு மருத்துவர் திரு.ராகவன் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கு மிகச் சிறப்பானதொரு சிறப்புரை வழங்கி, தனது பேச்சால் அனைவரையும் மகிழ்வித்தார்.
இதில் எனக்கு என்ன பெரு மகிழ்ச்சி என்றால்,
நாம் கற்றுக் கொடுத்த மாணவர், நம் கண் முன்னே தனது திறமையால் வளர்ந்து, மிகச் சிறந்த மருத்துவராகி, அவர் பெரிதும் மதித்துப் போற்றிய, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளோடு இணையாக அமர்ந்து , பள்ளியின் விடுதி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுதான்.
திருவள்ளுவரின் , பெற்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளின் படி விழா முழுவதும் மகிழ்ந்திருந்தேன்.
21/07/2022
🙏🌿☘️🌹கல்விக் கொடை 🌹☘️🌿🙏
நமது பள்ளியில் படித்து, இன்று சிங்கப்பூரில் பணியில் இருக்கும் எனது அன்பு மாணவர்
🌟🌟திரு.சின்னு ராம் குமார் 🌟🌟
நமது பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்கள் ஏழு பேருக்கு கடந்த 19.07.2022 அன்று கல்வி உதவித் தொகை வழங்கி, அவர்களின் கல்விப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர் தொடர்ந்து
பல ஆண்டுகளாக ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி செய்து வருகிறார்.
ஏழ்மை எனும் அரக்கனால்
எந்த ஒரு மாணவனும்
அறிவுத் தேடலில் இருந்து
வழிதவறிச் சென்று விடக்கூடாது
என்று, நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் , கடந்த பல ஆண்டுகளாக நமது பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
என்ன தவம் செய்ததோ இப்பள்ளி
இதுபோன்ற கருணையுள்ள
மாணவச் செல்வங்களைப் பெற...
வாழ்த்துக்கள் என் அன்பு மாணவர்களே.....
எப்போதும் இதயத்தை
ஈரமாகவே வைத்திருங்கள்..🌹☘️🌹☘️
😊வெ. ஈஸ்வரன்
😊9994095426
01/06/2022
☘️☘️பணி நிறைவு பாராட்டு விழா☘️☘️
என் அன்புக்குரிய முன்னாள் மாணவர்களே, நேற்று (31.05.2022) மாலை நமது பள்ளியில் பணி நிறைவு பெற்ற நமது பள்ளி இளநிலை உதவியாளர், மனிதத்தேனீ, அண்ணன் திரு.கைலாசம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 🌹மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய திரு. கைலாசம் அவர்கள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழவேண்டும்🌹 என்று நமது பள்ளியின் மரியாதைக்குரிய தலைவர்
திரு.P. தர்மராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
🌀 இருபது ஆண்டுகள் பணிநிறைவு செய்து தொடர்ந்து நமது பள்ளியின், மாணவர்களின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள்
திரு. S. A. கணேசன்
திரு. T. ஜோசப் வினோ
திரு. D. லட்சுமணன்
திரு. A. கங்கை கொண்ட சோழன்
திரு. S. முருக பாண்டியன்
திரு. Y. ஆல்வின் மோஸஸ் ஜெயக்குமார்
ஆகியோருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் விழா நாயகர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
14/04/2022
நம் பள்ளியின் செயலாளர் திரு S. செல்வராஜ், M. A., B. Ed., அவர்கள் இன்று 14.04.2022 மாலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறுதிச்சடங்கு 15.04.2022 அன்று மதியம் 1 மணியளவில் நடைபெறும். 😭😭😭
01/04/2022
Happy Birthday Sir 🥳🎂
02/02/2022
😀
09/01/2022
😂
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Nagamalai
Madurai
625019