31/08/2024
ஒருவழியாக பட்டப்படிப்பை முடித்தாயிற்று. தேர்வில் தேறினாலும், வேலைக்குச் செல்லும் போது, நேர்முக தேர்வில் வெற்றி பெற வேண்டுமே..! 'எஸ்', 'நோ' சொல்லி, தமிழ் கலந்து 'தங்கிலீஸில்' பேசி சமாளிக்கலாம் என நினைத்தால், கேள்விக் கணைகளுக்கு முன், தோல் வியை தோளில் சுமந்து கொண்டு வர வேண்டும். வெள்ளைக்காரன் மொழி நமக்கு வேண்டாமென ஒதுங்கினால், வெற்றி பெறமுடியாது.
ஆங்கிலத்தை கண்டு அஞ்சுபவர்களுக்காகவே, அமெரிக்க ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் ஜப்பானிய மொழியை கற்றுத் தந்து, மாணவர்களின் மனதில், தன்னம்பிக்கையை விதைக்கிறார் மதுரையைச் சேர்ந்த செந்தில். மாநகராட்சி பள்ளியில் படித்த ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், தன் சொந்தக் காலில் நின்று, 24 ஆண்டுகளில் 12000 மாணவர்களை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறார்.
ஆசிரியர் செந்தில்: “தேர்வு என்றாலே எல்லோருக்கும் பயம் தான். முதலில் அனைவரிடமும் ஆங்கிலத்தில் ஓரளவிற்கு பேசிப் பழக வேண்டும். 'உடல் -மொழி, ஆளுமைத்திறன், நேர மேலாண்மை, திறன் வளர்ப்பு' இவற்றை படிப்படியாக தெரிந்து கொண்டு, நமக்குள் புதைந்து கிடக்கும் திறன்களை, நமக்கே அடையாளம் காட்டலாம்.
நாம் படித்த படிப்பு 'ஹாட் ஸ்கில்',. படித்ததை வெளிக் கொண்டு வந்து செயல்படுத்துவது 'ஷாப்ட் ஸ்கில்'. தமிழ் வழி கல்வி கற்றவர்கள் 'சாப்ட் ஸ்கில் லை' வெளி கொணர்வதில் சிரமப்படுவர். சிறப்புப் பயிற்சியின் மூலம், தாழ்வு மனப்பான்மையை உடைத்து, முன்னேறலாம். நேர்முகத் தேர்வில் வெற்றி கனிகளை எட்டிப் பறிக்கலாம், என்றார்.
வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 098421 89848
21/10/2022
22/09/2022
05/08/2022
25/04/2022
13/04/2021
25/03/2021
17/03/2021