11/11/2022
சங்கத் தமிழ் இலக்கியம்
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சங்கத் தமிழ் இலக்கியம், Education, Madurai.
11/11/2022
10/04/2022
பூ
செடியின்
கர்வம்..
தமிழ்
தன்னொடு
பூவை
தன் ஒவ்வொரு
நிகழ்விலும்
இணைத்துள்ளது..
போர்
முனையில்..
காதல் கண்
கூர் முனையில்
பூ..
'பூ'மி யின்
முதல்
எழுத்து
அல்ல..
உயிர் எழுத்து
- ஆதிரைச்சித்தன்
08/04/2022
ஈமத்தாழி ❤️
புறநானூறு 256
இறப்பின் பானை
கலையாய் சமைப்பவரே!!
நீர் இயற்றும்
சக்கரம் இசைந்த பல்லி
இருபுறம் அதனுடன்
இணங்கிச் சுழலும்!!
இதுபோல் என்னவன்
நிழலாய் எந்தன்
தினங்களும் நிகழும்!!!
என்னவன் இன்றோ
எம்மைத் தனித்து
யாம் இல்லா உலகம் ஏகத்துணிந்தான்!!!
அவன் இல்லா ஞாலம்..
அது அழிந்த கோலம்..
யானும் ஒன்றாய் அமரப் பணித்தேன்!!!
ஆதலின் செய்க.. அகன்ற பானை..
அவனுடன் இணைக்க எந்தன் ஊனை!!!
- ஆதிரைச்சித்தன்
03/04/2022
தமிழர் மெய்யியல் ❤️
“ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”
என்பது பாடல். கருத்து: “எதிரியின் யானைகளைப் போரில் வெட்டி வீழ்த்தித் தானும் மாண்டுபோன போர் மறவனது நடுகல்லை வழிபடுவதைத் தவிர, நெல் இட்டுப் படைத்து வழிபடும்படியாக வேறு கடவுள் இந்த ஊரில் இல்லை”- என்பது கருத்து ஊரில் கடவுள் என்பது, மாண்டவர்க்காக நட்ட நடுகல் மட்டுமேயாகும்; கடவுள். வழிபாடு என்பது நடுகல் வழிபாடு ஒன்றுமே யாகும்என்னும் கருத்து இப்பாடலால் பெறப்படுகிறது.
- ஆதிரைச்சித்தன்
27/03/2022
செய்த நன்றியின் பயன் ?
பலன் எதிர்பார்த்த உதவி ?
என்ன சொல்கிறாள்..
நம் பாட்டி ❤️
22/03/2022
கைமா ❤️ 🐘🐘🐘🐘
வீட்டிற்குள் சமையல் வேலையாக இருக்கின்றாள்..
வெளியே ஆரவாரம்.. கூச்சல்.. சலசலப்பு..
சமையலை விட்டு - வெளியே வந்து பார்க்க இயலாத சூழ்நிலை..
கூச்சலின் ஊடாக - கணவனின் குரல் கேட்கின்றது.. புரிந்து கொண்டாள்..
வீட்டினுள்ளிருந்தபடியே வினவுகின்றாள்..
வானளவுக்குப் பெரும் புகழ் கொண்ட வள்ளல் ராமனைப் புகழ்ந்து பாடுதற்குச் சென்றீர்களே!.. என்ன கொண்டு வந்தீர்கள்?...
வெளியில் நிற்கும் பாணன் மதிநலம் மிக்க, தனது - மனைவியின் வினாவுக்கு விடையளிக்கின்றான்..
வள்ளல் வாஞ்சையுடன் கொடுத்தது வம்பதாம் களபம்!..
ஆகா!.. நறுமணமுள்ள சந்தனமா!.. பூசிக்கொள்ளும்!..
சந்தனம் இல்லையடி.. ராசாத்தி!.. அது மாதங்கம்!..
சொக்கத் தங்கமா!.. கவலையில்லை.. இன்றுடன் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்தது!..
தங்கம் அல்ல என் தங்கமே!.. எனக்குக் கிடைத்தது பம்பு சீர் வேழம்!..
என்ன!.. கரும்புக் கட்டு தானா கிடைத்தது.. சரி.. தின்று தீர்க்கலாம்!..
கரும்பு இல்லையடி கண்மணி!.. நான் கொணர்ந்தது பகடு!..
அப்படிச் சொல்லுங்கள்!.. எருமைக் கடா.. வயற்காட்டு வேலைக்கு ஆயிற்று!..
இனியவளே!.. அது எருமையும் அல்ல!.. கம்பமா!..
கம்பு மாவு தருவதற்கா வள்ளலின் மனம் துணிந்தது?.. களி செய்து களிக்கலாம்!..
உண்டு களிக்க அல்ல.. கண்டு களிக்க!.. என்னுடன் இருப்பது கைம்மா!..
❤️ 🐘🐘🐘🐘
அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தவள் -
கணவனுடன் கம்பீரமாக நின்றிருந்த யானையைக் கண்டு கலங்கினாள்..
இதைக் கட்டி யார் தீனி போடுவது!?.. - என்று..
வம்பதாம் களபம் என்றீர்.. மணமிகு சந்தனம் என்று மகிழ்ந்தேன்..
மாதங்கம் என்றீர்.. சீர்மிகு தங்கம் எனச் சிரித்தேன்..
பம்பு சீர் வேழம் எனப் புகன்றீர்.. சுவை மிகும் கரும்பு என நினைத்தேன்..
பகடு எனப் பகன்றீர்.. உழுதற்கேற்ற எருமை என உவந்தேன்..
கம்பமா என்று நவின்றீர்.. நானும் களிக்கு ஏற்ற கம்பு மாவு எனக் களித்தேன்..
கடைசியாக கைம்மா எனக் கூறீனீர்..
காரிகை நானும் களிற்றினைக் கண்டு கலங்கினேனே!..
என்ன ஒரு ரசனை!..
கவியாகிய - கணவனுக்கும் மனைவிக்கும் இடையே - அற்புதமான தமிழ்ச் சொல் விளையாட்டு!..
இதோ அந்த இனிய தமிழ்ப் பாட்டு!..
❤️ 🐘🐘🐘🐘❤️ 🐘🐘🐘🐘❤️ 🐘🐘🐘
’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.
’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே! (வீரராகவ முதலியார், தனிப்பாடல்)
- ஆதிரைச்சித்தன்
❤️ 🐘🐘🐘🐘 ❤️
11/09/2021
பாரதி சின்னப் பயல் ?? ❤️
11/09/2021
பாரதி - 10
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
Madurai