Nationalinstitute

Nationalinstitute

Share

GOOD

Photos from Nationalinstitute's post 20/07/2023

வளஞ்சியர் என்போர் யார்?

இலங்கையைச் சேர்ந்த விஹாரஹின்ன 12 நூற்றாண்டு கல்வெட்டானது, இப்பெருநிலபரப்பில் உள்ள 18 பட்டினங்கள் (Coastal City), கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த 32 வேளாபுரங்கள் (Sea Ports), 64 கடிகைத் தாவளங்கள் எனும் சந்தைகள் (Markets) போன்றவற்றை இணைத்து வணிகம் செய்துவரும் வணிகக் குழுவினர் வளஞ்சியர் என்கிறது.

Photos from Nationalinstitute's post 14/06/2023

பெற்றோர் இருவருமே அரசு பள்ளியில் நல்ல சம்பளம் வாங்குபவர்கள்.

தம்பி, அரசு பள்ளியில் படித்ததாக தெரியவில்லை.

ஆனால் செய்தியில் அரசு பள்ளி அரசு பள்ளி என்று ஏகத்துக்கும் உருட்டுகிறார்கள்.

தங்களது சென்டரில் சேர்ந்து வெற்றி பெற்றதாக கோச்சிங் சென்டரே பெருமையோடு பறைசாற்றுகிறது.

இதைவிட காமெடி, வெற்றி பெற்ற மாணவர் நீட் தேர்வு அவசியமென்கிறார்.

ஒருத்தரை முன்னிறுத்தி ஒன்பது லட்சம் பேரை கோச்சிங் சென்டர் வரவழைக்கும் டெக்னிக்.

நீட் நடக்கும்போது அதில் வெற்றி பெற்றால் சந்தோஷம்தான். பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

அரசு வேலைக்குப் போகத்தான் கடுமையான தேர்வுகளை எழுத வேண்டும். அதற்காக வேண்டுமானால் கூட கோச்சிங் கெத்து செல்லலாம்.

ஆனால் ஒவ்வொரு படிப்புக்குமே தனித்தனி நுழைவுத் தேர்வு. கோச்சிங். இதற்காகவே வளைய வளைய வரும் கொள்ளைக்கார பயிற்சி நிறுவனங்கள்.

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கும் நீட், தேவையில்லாத ஆணியே.

கல்வி போதிக்கும் மாபெரும் கல்வி நிறுவனங்களை விட சில மாதங்களில் பெருந்தொகையை தனி ஒரு மாணவ, மாணவியரிடமிருந்து சுருட்டும் கோச்சிங் சென்டர்கள் அதிகரித்து வருவது தான் பிரச்சனை.
ஏழுமலை வெங்கடேசன் அய்யா

29/05/2023

வரலாற்றில் இன்று மே 29

1919 - ஐன்ஸ்ட்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டினைப் பரிசோதனைக்கு உட்படுத்திய முதல் ஆய்வான, எடிங்ட்டன் பரிசோதனை நடத்தப்பட்ட நாள்

ஆங்கிலேய வானியலாளர்களான ஆர்த்தர் எடிங்ட்டன், ப்ராங்க் டைசன் ஆகியோர், 1919 மே 29இல் ஏற்பட்ட முழுக் கதிரவ மறைப்பின்போது(சூரிய கிரகணம்), இந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர். ஒளியின் பாதையில், ஈர்ப்பு விசை விலகலை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் இந்த ஆய்வில் சோதித்தனர். நியூட்டனின் ஈர்ப்பு விதியையும், சிறப்புச் சார்புக் கோட்பாட்டையும் ஒருங்கிணைத்து, காலம், (விண்)வெளி ஆகியவற்றின் வடிவியல்(ஜியோமெட்ரிக்) பண்பாக, அதாவது, நான்கு பரிமாண கால-வெளியாக விளக்கும் பொதுச் சார்புக் கோட்பாடுதான் இயற்பியல் கோட்பாடுகளிலேயே அழகானது என்று புகழப்படுகிறது. நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது, சூரியனின் ஈர்ப்பு விசையால் சற்றே பாதை மாறுகிறது என்பதை 1911இல் அறிவித்துவிட்டாலும், அந்தக் கணக்கீடுகளில் குறையிருக்கலாம் என்று கருதிய ஐன்ஸ்ட்டீன், அதனை ஆய்வுக்கு உட்படுத்த விரும்பினார். எவ்வாறு ஆய்வு செய்வது என்று, ஜார்ஜ் ஹேல் என்ற அமெரிக்க சூரிய ஆய்வாளரிடம் ஐன்ஸ்ட்டீன் கேட்டபோது, முழுக் கதிரவ மறைப்பின்போது செய்யலாம் என்றார். இதற்கு முன்பே அமெரிக்கக் குழுவொன்று, 1912இல் ஏற்பட்ட முழுக்கதிரவ மறைப்பின் போது, பிரேசிலில் இத்தகைய ஆய்வை மேற்கொள்ள முயன்று தோற்றிருந்தது. 1914 ஆகஸ்ட்டில் ஏற்படும் முழுக் கதிரவ மறைப்பின்போது, க்ரீமியாவில் இந்த ஆய்வை மேற்கொள்வதென்று முடிவெடுத்து, குழுவினர் சென்றும்விட்டாலும் முதல் உலகப்போர் தொடங்கியது இடையூறாகியது. ஆனாலும், கைது செய்யப்பட்டவர்கள், கட்டாயத்தால் நாடு திரும்பியவர்கள் போக எஞ்சியவர்கள் காத்திருந்தாலும், மேகங்கள் மறைத்ததால் ஆய்வு வெற்றிபெறவில்லை. சரியான கணக்கீட்டுடன், 1915இல் பொதுச் சார்புக் கோட்பாட்டை ஐன்ஸ்ட்டீன் வெளியிட்டுவிட்ட பின்னணியில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற எடிங்ட்டனுக்கு, அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், 1918இல் ஒரு முழுக் கதிரவ மறைப்பில், அமெரிக்கக் குழு மீண்டும் முயன்று, மேகமூட்டத்தால் தோற்றது. 1919 மே-யில், பிரேசிலிலும், மேற்குஆஃப்ரிக்காவின் ப்ரின்சிப்பி தீவிலுமாக இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எடிங்ட்டனின் ஆய்வில், சூரியன் நிலவால் மறைக்கப்பட்டதும் ஏற்படும் இருளில் வழக்கமாகப் பகலில் தென்படாத நட்சத்திரங்களின் இடங்கள் குறிக்கப்பட்டு, இரவில் அவற்றின் வழக்கமான இடங்களுடன் ஒப்பிட்டு, ஒளியின் பாதை விலகல் கணக்கிடப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஐன்ஸ்ட்டீனின் கோட்பாட்டைச் சரியென்று நிரூபித்ததுடன், அதற்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் புகழையும் உடனடியாக ஈட்டித் தந்தன.

26/05/2023

கருணை கடலே....🙏
கந்தா போற்றி....✌️

18/05/2023

அரசியல்வாதிக மேடையிலே.. எல்லார் பேரையும் சொல்லி வணக்கம் சொல்லும்போது எம்புட்டு எரிச்சல் வரும் நமக்கு ...

ஆனா வில்லுப்பாட்டுல இந்த புள்ள ஒருத்தர் விடாம எல்லாருக்கும் நன்றி சொல்லும் பொழுது, இன்னும் வேற யாருக்கும் நன்றி சொல்லாதான்னு மனசு ஏங்குது...

பாட்டு பாடி நன்றி சொல்லக்கூடிய அழக பாருங்க.... வில்லு பாட்டு வில்லுப்பாட்டு தான்யா...

18/05/2023

#ஈழம்

14/05/2023

உலகில் கிருஸ்வ மதம் தேன்றும்
300 வருடம் முன்பே
இங்கே தமிழ் குடிகள் இருந்தார்கள்.
நீரை
அணை கட்டி விவசாயம் செய்தார்கள்.
கிருஸ்து பிறகு
7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி
கிபி 601 தொடக்கம்
கிபி 699 வரையான காலப்பகுதியில்
கிபி 632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் தான் அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது....!

இதெல்லாம் உலக வரலாற்றை முந்தைய தமிழனின் வாழ்வு பற்றிய சிறு குறிப்பு.

7 நூற்றாண்டின் இறுதியில்
கோச்சடையான் என்னும்
ரண தீர பாண்டியன்
வேங்கடம் முதல் குமரி வரை ஆளுகிறான்..
சோழர்களை காட்டிற்குள் விரட்டினான்,
சேரர்களை நாடு கடத்தினான்...!

ஏயினர்கள் என்னும்
ஒரு காலத்தில் பயிர் செய்து போர்களின் பாதிப்பால் காட்டுக்குள்
வேட்டையாடும் சமூகமாய் மாறிபோன
ஒரு சிறு கூட்டம்
ரணதீர பாண்டியனை
கோயில் செல்லும் பாதையில்
நரித்தனத்தால்
கொதி என்கிற பெரும் கனவு கொண்ட இளைஞனின் தலைமையில்
தற்காலிக வெற்றி கொண்டு கோட்டையை கைப்பற்றுகிறது .
பின்புலமாய் காட்டில் இருக்கும் சோழர்கள்
வந்து உதவுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்.

ரண தீரன் பெரும் பள்ளி சமூக உதவியுடன் கோட்டையை முற்றுகையிடுகிறான்.

சோழர்கள் உதவி கிடைக்காததால்
கொதி ,ரணதீரனுடன்
தனி போருக்கு சவால் விடுகிறான்..

உக்கிர போரில். கொதி
தன் கனவை விதைத்து விட்டு மரணமடைகிறான்.

தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல் இந்த படம்.

சின்ன முதலீட்டில்
சண்டை காட்சிகள் அத்தனை நேர்த்தியாக
எடுக்கப்பட்டு இருக்கிறது..

திரைப்படம்
சமகால அரசியலையும் பேசுகிறது...!

அதிகாரத்திற்கு எந்த உணர்வும் இல்லை..!
அதிகாரம் மிகச்சிறந்த போதை..!

என்பதை அடிமட்டத்தில் இருந்து கோட்டையை பிடித்த கொதியின் மாறுதல் உணர்த்தும் செயல்...!

அதே போல
போருக்கு முன்பு அறம் நழுவாத ரணதீர பாண்டியன்
கொதியுடன் போரில் வென்றதும் அடிமட்ட நாடோடிகள் அனைவரையும் அழிக்க சொல்லும் இடத்தில்
அதிகாரத்தின் இன்னொரு பக்கம்
சமானியர்களின் பயமே உரம் என்பதை உணர்த்துகிறது.

கொதியின் நண்பர் துடியின் தனி மனித போர் உக்கிரம் 100 பாகுபாலிகளை விட சிறந்தது...!

ஆங்கில படங்களை ரசிக்கும் கூட்டம்
தமிழ் படைப்புகளை
அனுபவியுங்கள்..!

ஒளிப்பதிவு
பாலை ,நெய்தல் குறிஞ்சி முல்லை மருத நிலங்களை கண்கள் முன்பே கொண்டு வருகிறது...

அலங்கார ரூபன்களை
மன்னர்களாக பார்த்த நம் கண்களுக்கு தமிழ் குடிகளின் நிறம் உயரத்தில் ஒரு காலகட்டத்தை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள்..

யாவனர்கள் பாண்டியர்களிடம் வேலை செய்ததை காட்டுகிறார்கள்.

ஆரிய ஊடுருவலை
அதன் தந்திரத்தை
உணர்த்துகிறார்கள்.

பல்லவர்கள் காலத்தில் தோன்றி தேவரடியார்கள்
மரபு பாண்டியர் காலத்தில் அதன் தன்மையை காட்டுகிறார்க்ள்.

வழக்கம் போல ஏயினர்கள் கூட்டத்தின் குருவாக வரும் சோமசுந்தரம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கொஞ்சம் பொறுமையுடன் கால ஓட்டத்தை பின்னோக்கி கொண்டு சென்று பாருங்கள்..
இந்த படைப்பின் முழுமை புரியும்..

வரலாற்றை தவறவிட்டவர்கள் அனாதைகள்
ஆம் தமிழர்கள் கூட திரிக்கப்பட்ட வரலாற்றை
சுமந்து திரிகிறோம்..

வரலாற்றை ஒவ்வொரு கண்ணியாக மீட்டெடுப்போம்..

OTT; அமேசான் பிரைம்.
இயக்குனர்க்கு

வாழ்த்துகள் 💐💐💐
Chandra Rajan Sir

13/05/2023

CONGRATULATIONS.... SHRUTHI

நெற்குப்பை இரணிக்கோவிலைச் சார்ந்த திருமதி இராம ரேகா & திரு சு.இராமசாமியின் புதல்வி செல்வி இராம.சுருதி,தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேல் நிலைப் பள்ளி நிறைவாண்டுத் தேர்வினில் 600 க்கு 596 மதிப்பெண்கள் பெற்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் மாணவி...க்கு வாழ்த்துக்கள்ளும் மகிழ்ச்சி யும்.👌💐👍

12/05/2023

வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள்,

ஆண்டிற்கு 4-5 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த மருத்துவ கல்லூரி இடங்களை 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டிற்கு 470 அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க செய்த வரலாற்று சாதனை.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. மாநிலத்தின் அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் ஒரே நேரத்தில் குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரி நீர்வளத்தை செம்மைப்படுத்தியது.

மேற்கு தமிழகத்தின் அரை நூற்றாண்டு கனவான அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படத்தியது.

தமிழர் வரலாற்று பெருமையை பறைசாற்ற கீழடி அருங்காட்சியகத்தை அமைத்துக்கொடுத்தது.

அனைத்து துறைகளிலும் சிறந்த முதன்மை மாநிலமாக இந்திய அளவில் தொரட்ந்து 4 ஆண்டுகள் முதலிடம் பிடித்து சாதனை விருதை பெற்றது.

இந்திய அளவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் கிருஷி கர்மான் விருதை தமிழ்நாடு 2017-2021 வரை தொடர்ந்து பெற்றது.

போலிப் போராளிகள், எதிர்க்கட்சிகள், கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகள், அனைத்திற்கும் உச்சகட்டமாக தினமும் எதிர் பரப்புரைகளையும், மாநிலமே அழிந்தது போலவும் ஒப்பாரி வைக்கும் திமுக சிலீப்பர் செல் ஊடகங்கள் எனும் நெருப்பாற்றுக்கிடையில் நீந்தி நான்கரை ஆண்டுகால நல்லாட்சியை கொடுத்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், இன்னாள் #அதிமுக பொதுச்செயலாளர், திமுகவிடமிருந்து மக்களை காப்பாற்றும் தமிழகத்தின் எதிர்காலம் எடப்பாடியார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐

்பாடியார்

10/05/2023

உணரும் உண்மைன்னு கூட சொல்லமுடியாத பாவிகள் உலகம் இது😌

05/05/2023

🌺🌺🌺 *TN 12th Result 2023:* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன.
எத்தனை மணிக்குத் தேர்வு முடிவுகள்?

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுb முடிவுகளை, மே 8ஆம் தேதி காலை 9.30-க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

*எப்படிப் பார்ப்பது?*

மாணவர்கள்
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
*பிற வழிகள்*
மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TN Board Results

02/05/2023

தமிழ்நாடு
எஸ்கேப் ரூட்.. கொடைக்கானல். மூணாறு பாதை தெரியுமா? வீணாக 160 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் மக்கள்
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்ல ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட எஸ்கேப் சாலையை கேரள அரசு மூடிவிட்டது. வெறும் 11 கிலோமீட்டர் தூரம் பராமரிக்காமல் விட்ட சாலையை சரி செய்தால், 160 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. அதற்கு கேரள அரசு மனது வைக்க வேண்டும்.

கொடைக்கானல் நகரில் ஏராளமான ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முன்பு வசித்து வந்தார்கள்.இவர்கள் கடந்த 1944-ல், ​இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, அன்றைக்குச் சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படி உருவான பாதை தான் எஸ்கேப் பாதை.
கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும். ​​அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி, கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.

இறுதியில் அந்த வழியாக கொச்சிக்குச் சென்று இங்கிலாந்துக்குத் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் தப்பி ஓடினார்கள். அவர்கள் சென்ற அந்தப் பாதைக்கு பெயர், தப்பி ஓடிய பாதை' என்பதால் எஸ்கேப் ரோடு' என்று ஆனது.
கொடைக்கானல் செக் போஸ்ட்டில்
இந்தப் பாதையில் தான் வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்​. அந்த காலத்தில் கரடுமுரடாக இருந்த அந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் ​ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

நாடு விடுதலை அடைந்த பிறகும்கூட அந்தப் பாதை பயன்பாட்டிலேயே இருந்துவந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூர் கேரளாவுடன் இணைந்தது. அதாவது தேவிகுளம் தலுகா அப்படியே கேரளாவுடன் இணைந்தது. இதன் பின்னர் கேரளாவின் கட்டுப்பாட்டில் எஸ்கேப் பாதை வந்தது. அதாவது பசுமை பள்ளத்தாக்கு வழியாக கேரள சோதனை சாவடியை கடந்து சென்றால் 11 கிலோ மீட்டர் தூரத்தில் தேனி மாவட்டத்தின் டாப் ஸ்டேசன் உள்ளது. இங்கிருந்தும் கேரளா எளிதாக செல்ல முடியும். 1990கள் வரை அனுமதி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த சாலையை கேரள வனத்துறை மூடியது. கடத்தல் சாலையாக இருந்ததாக கூறி அதனை நிரந்தரமாக மூடிவிட்டது. இந்த பாதை தற்போது அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனவிலங்குகள் வாழும் பகுதியாக உள்ளது.
தற்போது கொடைக்கானலில் இருந்து பூண்டி கிளாவரை வந்து அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையை கடந்து சென்றால் வட்டவடை கோவிலூர் வந்துவிடும். அங்கிருந்து சாலை வழியாக எளிதாக மூணாறு செல்ல முடியும். இந்த பாதையில் ஜீப்களில் கூட போக முடியும். இந்த பாதையை சரி செய்தால் பேருந்து போக்குவரத்தையும் இயக்க முடியும். ஆனால் சாலை இன்று வரை சரி செய்யப்படவில்லை.

இது ஒருபுறம் எனில் மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் இருந்து மூணாறுக்கு பஸ் இயக்கப்பட்டது.
ஆனால் அந்த பஸ் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மூணாறு செல்வதற்கு, கொடைக்கானலில் இருந்து தேனி வந்து அங்கிருந்து போடி மெட்டு சென்று அதன் பின்னரே மூணாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதேநேரம் பூண்டி கிளாவரை வட்டவடை கோவிலூர் பாதையை திறக்க கேரள அரசும் தமிழக அரசும் மனது வைத்தால் இந்த பகுதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும். கொடைக்கானல் மூணாறு இடையே கிளாவரை முதல் சில கிலோ மீட்டர் தூரம் மோசமான நிலையில் உள்ள பாதையை சரி செய்து பேருந்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில மாற்றினால் சுற்றுலா பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

தமிழக அரசும் கேரளா அரசும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டால் இருமாநிலங்களிலும் உள்ள மூணாறு, கொடைக்கானல் பெரிய வளர்ச்சி பெறும். அத்துடன் கொடைக்கால் மூணாறு இடையில் உள்ள 28 கிராமங்கள் பயன்பெறும். விவசாயிகள், பொதுமக்கள் பல வருடங்களாக போராடியும் கடவேரி வட்டவடை பாதையை திறக்க கேரள வனத்துறை இதுவரை ஏனோ முன்வரவில்லை என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


4/732, Vandiyur Main Road, Anna Nagar
Madurai
625001