27/04/2023
Vivekananda College, Tiruvedagam - West
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vivekananda College, Tiruvedagam - West, School, solavanthan, Madurai.
27/04/2023
14/06/2021
Admission open for 2021-2022
10/01/2021
*ஸ்வாமி சித்பவானந்தரும் பசும்பொன் தேவரும்*
*(இரு தெய்வங்கள்)*
தாயுமானவர் சமாதி மன்னர் சேதுபதியால் நிர்வாகிக்கப் பட்டு வந்தது.
பின்னர் பசும்பொன் தேவர் திருமகனார் பார்த்துக் கொண்டார்.
அவர் சமரச சன்மார்க்க சங்கத்தினரிடம் அதை ஒப்படைத்து தன் அந்திம காலத்தில் சமரச சன்மார்க்க சங்க உறுப்பினர்களை அழைத்து இந்த சமாதியை கோயிலாக்கி புனிதம் சேர்க்க ஸ்வாமி சித்பவானந்தர் அவர்களால் மட்டுமே முடியும்.அதனால் அவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லி மறைந்தார்.
அதன்படி சங்க உறுப்பினர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் வந்து ஒப்படைத்தனர். சுவாமிகள் இதை தமக்கு கிடைத்த வரப் பிரசாதம் என நினைத்து திருச்சி ரயில்வேயில் பணியாற்றிய T.P. சண்முக சுந்தரம் அவர்களை அழைத்து குருகுல மாணவர்களை வரிசையாக வரச் செய்து அதில் சிலரை தேர்ந்து எடுத்து சண்முக சுந்தரத்திடம் ஒரு மாணவனை காட்டி இவனைப் போன்ற தலையும், அடுத்து ஒருவனை காட்டி இவனைப் போன்ற உடல் வாகும் ,இப்படி காது,கண்கள், நெற்றி,மூக்கு, கை கால்கள் என்ற சாமுத்ரிகா லட்சணம் கொண்ட சிலை ஒன்றை Plaster of Paris இல் உருவாக்கி வர ஆணையிட அவரும் பெரியவர் சொன்னபடி ஒரு சிறிய சிலையை உருவாக்கி கொடுத்தார்.
பிறகு சிற்பியை வரவழைத்து இந்த சிலையைக் காட்டி இதுபோல தத்ரூபமாக பெரிய சிலை செதுக்க வேண்டும் என்று சொன்னார். சண்முக சுந்தரம்,சிற்பி இருவரும் மயிலாடும் பாறை சென்று கல்லை தேர்வு செய்து சிலை உருவானது.
பெரியவர் மனத்தில் உருவானது போலவே சிலை அருமையாக அமைந்தது. கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கின.தர்ம சக்கரம் பத்திரிகையில் நிதி கேட்டு விண்ணப்பித்தார். போதுமான நிதி சேர்ந்ததும் இனி பணம் அனுப்ப வேண்டாம் அனுப்பினால் திருப்பி அனுப்பப் படும் என்று அறிக்கை வெளியிட்டார்.
1976 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட 4 Acre நிலத்தில் 1981 ஆம் ஆண்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தானே கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார் பெரியவர். பவள விழாவின் போது மீண்டும் ஸ்வாமி ஓங்காரானந்தர் தபோவன சார்பில் கும்பாபிஷேகம் செய்தார்.
இந்தக் கோயிலில் தாயுமானவர் நட்சத்திரம் விசாக நட்சத்திரத்தில் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோரும் குருபூஜை விமரிசையாக நடைபெருகிறது. 4000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப் படுகிறது. தாயுமானவர் பாடல்களுக்கு விளக்கம் அளித்து பெரியவர் நிறைய புத்தகங்கள் எழுதி உள்ளார்.
இதைப் பற்றி கேள்விப்பட்ட தாயுமானவர் பேரன் ஒருநாள் பெரியவரை சந்திக்க வந்தார். யாரும் எதிர்பார்க்காத வில்லை திடீர் என்று பெரியவர் தாயுமானவர் பேரன் பாதங்களில் விழுந்து வணங்குவார் என்று.
பேரன் ஆடிப்போய் விட்டார். அவர் பெரியவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
பெரியவர் சொன்னார் உங்கள் பாதத்தில் விழுந்து வணங்கிய காரணம் தாயுமானவர் என்னைத் தேடி வந்தார் என்று நினைத்துதான்!! என்று
நன்றி டாக்டர் சோமு
முதல் அமைச்சர் ராஜாஜியும் நம் பெரிய சாமியும்;
காரைக்குடி கம்பன் கழக விழா.அமைப்பாளர் சட்டை போடாத கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்கள்.தலைமை உரை பெரியவர்.விழா சிறப்புரை அன்றைய முதல் அமைச்சர் ராஜாஜி என்கிற சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜகோபால் ஆச்சாரியார். நிகழ்ச்சி ஆரம்பம் காலை9.25 நிறைவு 11 மணி. சா.கணேசன் காலத்தைப் பொன் போன்று மதிப்பவர். பெரியவர் காலம் தவ றாமையை அனைவரும் அறிவர். அன்று இரவு சென்னையில் புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புகைவண்டி 4 மணிநேரம் காலதாமதமாக வந்துகொண்டு இருக்கிறது.அதில்தான் முதல் அமைச்சர் முதல் வகுப்பு பெட்டியில் வந்துகொண்டு இருக்கிறார்.காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டது போல சா.கணேசன் தவித்துக் கொண்டிருந்த சமயம். வண்டி காரைக்குடி வந்து சேர்ந்த பாடில்லை. பெரியவர் மேடையில் சென்று அமர்ந்து விட்டார். மணி 9.24.கணே சனைப் பார்த்தார்.திட்டமிட்டபடி 9.25 க்கு சா.கணேசன் வரவேற்புரை நிகழ்த்தி விட்டு சரியாக 10 மணிக்கு முடித்துக் கொண்டார்.பெரியவர் மைக்கை பிடித்தார். ஜானகி காந்தஸ் மரணம் என்று சொல்ல மக்கள் ஜெய் ஜெய் ராம ராம்!! என்றனர்.பெரியவர்: ஓர் அறிவிப்பு தலைமை உரை இப்போது நிகழும். சிறப்புரை மாலை 4 மணிக்கு நிகழும் என்று ஒரு போ டு போட்டார்.சரியாக 10 மணிக்கு தலைமை உரையை முடித்தார்.மேடையில் இருந்து இறங்கி தம் தங்கும் இடத்துக்கு சென்றுவிட்டார். சா.கணேசன் ரயில் நிலையம் சென்று தாமதமாக சுமார் 1 மணிக்கு வந்த வண்டியில் இருந்து ராஜாஜி அவர்களை அழைத்துக் கொண்டு அவர் தங்கும் இடத்துக்கு அழைத்து சென்றார். சித்பவானந்தா இந்நேரம் தலைமை உரையை முடித்து இருப்பாரே? எனக் கேட்டார்.சா. கணேசன் ஆம் என்றார். ராஜாஜி நான் நினைத்தேன்.அவர் காலம் தவற மாட்டார்.He is a man of British Punctuality. என்ன செய்வது ரயில் என்னை காலம் தவற செய்துவிட்டது என்று உணவருந்தி ஓய்வு எடுத்தார். மாலை 3.55 மணி மீண்டும் வரவேற்புரை. ராஜாஜி மேடையில். பெரியவர் Audience இல் முதல் வரிசையில். ராஜாஜி மேடைக்கு அழைக்கிறார்."என் பணி காலை முடிந்து விட்டது. உங்கள் பணி தொடரலாம்!" என்று சொல்லி விட்டார்.ராஜாஜி பேசினார்.பெரியவர் ரசித்துக் கேட்டார்.இடையிடையே பெரியவரை பார்த்துக் கொண்டே பேசி 5 மணிக்கு சரியாக முடித்துவிட்டு சிற்றுண்டி அருந்தி ரயிலுக்கு கிளம்பினர். ஸ்வாமிஜி! நீங்கள் திருச்சியில் தானே இறங்க வேண்டும்? அதுவரை என் பெட்டியிலேயே பயணிக்கலாம். சில விஷயங்கள் பேசிக் கொண்டே போகலாம் இல்லையா? பெரியவர் நான் எப்போதும் 3ஆம் வகுப்பில் பயணிப்பதுதான் வழக்கம்.அதிலேயே பயணிக்கிறேன்.நீங்கள் அரசு முறைப்படி பயணிக்க உரிமை உண்டு. நான் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. நாம் எதிலும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வணக்கம் செலுத்தி 3ஆம் வகுப்பு பெட்டிக்கு சென்றார்.
இந்த சம்பவத்தை ஓர் அரசு விழாவில் ராஜாஜி சொல்லி காட்டி கட்சிக் காரர்கள் இவரை உதாரண புருஷராக கொள்ளுங்கள் என்று பேசி இருக்கிறார் என்றால் நம்ம பெரியவர் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும்?
நன்றி திரு.சோமு அவர்களுக்கு.
02/01/2021
Division of Event : Administration Programs
Date : 02-01-2021
Organized by : Teaching Staff Association
Title of the Event : Farewell Party
Time : 10.30 a.m to 01.30 p.m
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Solavanthan
Madurai
625234