01/11/2013
SSS Solutions Pvt Ltd
Our Services are offered to all Corporate and Small and Medium Business Customers, Government sectors, Banking sectors, Schools and institutions.
SSS Solutions Private Limited is on of the fastest growing IT Companies. Was established in the year of 2013
01/11/2013
அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது. கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின் பிரச்னை.
இணைய இணைப்பே இல்லாத மக்களும் குறைந்த விலையில் புதிய இணைய இணைப்பை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகநூல் நிறுவனம் Samsung, Ericsson , MediaTek, Nokia, Opera and Quallcomm ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து Internet.org எனும் ஒரு சேவையை துவங்கியுள்ளது.
உலகில் உள்ள இணைய இணைப்பு இல்லாத 5 பில்லியன் மக்களிடம் இணைய இணைப்பை கொடுப்பதே இவர்களின் நோக்கம்.
1. Making access affordable
மலிவு விலையில் கைபேசிகள் உற்பத்தி செய்தல் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவது.
2. Using data more efficiently
தரவு சுருக்குதல் (Data Compression), தன் நினைவுகொள்தல் (data caching) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அனுப்பப்படும் தரவுகளை மேம்படுத்துதல்.
3. Helping businesses drive access
அதிக மக்களை இணையம் பயன்படுத்த வைக்கும் நிரலாளர்கள் (Programmers), வன்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்குவித்து வணிக நிறுவனங்கள் தங்களின் வணிகத்தை இணையம் வழியாக மேற்கொள்ள ஊக்குவித்தல்.
கூகல் நிறுவனம் ஏற்கனவே லூன் (Project Loon) எனும் பெயரில் இணைய இணைப்பு இல்லாத தொலை தூர இடங்களில் ராட்சத பலூன்கள் மூலம் 3G அலையை வழங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா முழுவதும் SMS வழியாக இலவசமாக GMail பயன்படுத்தும் வசதியையும் கொடுத்தது.
Twitter நிறுவனமும் கைபேசி வழியாக Tweet அனுப்புவதார்க்கு மட்டும் இலவசமாக இருக்குமாறு பல சர்வதேச இணைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
Zuckerberg கூறுகையில் இணைய இணைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை என்றும் (கல்லூரி விடுதி கண்காணிப்பாளர்கள் கவனத்திர்க்கு) தமது நிறுவனம் 1பில்லியன் டாலர் வரை இணைய இணைப்பு வழங்கும் சேவைகளுக்காக செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
17/09/2013
கூகள் எர்த் எனும் செயற்கைக்கோள் வழி புகைப்பட சேவையை கூகள் வழங்கி வருகிறது.
நாசா (நாராயண சாமி அல்ல) உதவியுடன் புவியின் கடந்த கால புகைப்படங்களை தொகுத்து அமேசான் காடு அழிக்கப்படுவதையும், நகரங்களில் கட்டிடங்கள் பெருகுவதையும், துபாயில் காதல் மீது பெரும் குடியிருப்பு கட்டப்படுவதையும் தொகுத்து வெளியிட்டுள்ளது.
07/09/2013
திறன்மிகு கைபேசிகள் (Smart phone) வந்த பின்னர் பலரும் தனியாக டிஜிடல் கேமரா வாங்குவது இல்லை. ஏற்கனவே சோர்ந்து போய் இருக்கும் கேமரா நிறுவனங்களை சொரிந்துவிடும் அறிவிப்பு ஒன்றை சோனி நிறுவனம் செய்துள்ளது.
NFC மற்றும் Wi-Fi தொழில்நுட்பத்தில் 20.2 மெகா பிக்ஸல் திரனுள்ள கேமரா லென்ஸ் பொருத்திய புதிய கைபேசிகளை அறிமுகம் செய்ய இருக்கிறது சோனி.
நோக்கியாவின் லுமியா 1020 கைபேசி அதிகத் தெளிவுடன் வந்துள்ளது. பிலிம் ரோல் வித்து வந்த கோதாக் நிறுவனம் மூடு விழா கண்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அதாலால், பல கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கைப்பேசியில் தங்களின் பொருள்களை எவ்வாறு புகுத்துவது என ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
போனுக்கு கொண்டை வைத்தது போல் இருக்கும் இந்த கேமரா லென்ஸ் மக்களுக்குப் பிடிக்குமா என்பது சந்தைக்கு வந்த பின்னர் தான் தெரியும்.
கணனியில் தங்கும் தற்காலிக கோப்புக்கள் மற்றும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இதேவேளை கிளவுட் முறை எனப்படும் ஒன்லைன் மூலமும் இவ்வாறான சேவைகளைத் தரும் அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் Piriform எனும் நிறுவனமானது தற்போது Agomo எனப்படும் அப்பிளக்கேஷனை உருவாக்கியுள்ளது.
கிளவுட் முறை மூலம் கணனியில் காணப்படும் தேவையற்ற மற்றும் தற்காலிக கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த அப்பிளிக்கேஷன் இணைய உலாவி மூலம் உங்கள் கணனியை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
02/09/2013
ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிதுள்ளது. அது பற்றி பேசிய நிறுவன முதன்மை செயல் அலுவலர் (CEO) டிம் குக்., வளர்ந்து வரும் புதிய சந்தைகளில் நமது தயாரிப்புகள் நன்றாக விற்பணையாகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபோன் விற்பனை 400% அதிகரித்துள்ளது.
ஐபேட் விற்பனையும் குறிப்பிடத் தகுந்த அளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக அளவில் விற்பனை வருமானம் $35.3 பில்லியன், இலாபம் $6.9 பில்லியன். கடந்த வருடத்தில் இருந்து ஆப்பிள் தனது பொருட்களை தவணை முறையில் விற்பதை அறிமுகம் செய்தது. இந்தியாவில் பழைய ஐ போனை மாற்றுவதன் மூலம் ரூபாய் 8000 (Exchange Bonus) வழங்குகிறது.
ஐபோன் : Rs. 26,500 to Rs. 59,500
ஐ பேட் : Rs. 21,900 to Rs. 56,900
நான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை?
கடந்த வருட அக்டோபர் முதல் டிசம்பர் வரையாயான காலாண்டில் மட்டும் சுமார் 2,30,000 ஐபோன் விற்பனை ஆகியிருக்கும் என IDC Data தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் “Apple Store” எனும் பெயரில் தானே விற்பனை செய்யும் ஆப்பிள், இந்தியாவில் Redington & Ingram Micro போன்ற மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்கிறது.
துருக்கி , பிலிப்பைந்ஸ் மற்றும் போலாந்து போன்ற நாடுகளிலும் விற்பனை சிறப்பாக உள்ளதாக அவர் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....
TN-01 சென்னை மத்தி (அயனாவரம்)
TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)
TN-03 சென்னை வட கிழக்கு (தண்டயார்பேட்டை)
TN-04 சென்னை கிழக்கு (பேசின் பிரிட்ஜ்)
TN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை தென் கிழக்கு (மந்தவெளி)
TN-07 சென்னை தென் (திருவான்மியூர்)
TN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )
TN-10 சென்னை தென் மேற்கு (வளசரவாக்கம்)
TN-11 தாம்பரம்
TN-16 திண்டிவனம்
TN-18 செங்குன்றம்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளூர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்
TN-29 தர்மபுரி
TN-30 சேலம் (மேற்கு)
TN-31 கடலூர்
TN-32 விழுப்புரம்
TN-33 ஈரோடு
TN-34 திருசெங்கோடு
TN-36 கோபிசெட்டிபாளையம்
TN-37 கோயம்புத்தூர் (தெற்கு)
TN-38 கோயம்புத்தூர் (வடக்கு)
TN-39 திருப்பூர் (வடக்கு)
TN-40 மேட்டுபாளையம்
TN-41 பொள்ளாச்சி
TN-42 திருப்பூர் (தெற்கு)
TN-43 உதகமண்டலம்
TN-45 திருச்சிராப்பள்ளி
TN-46 பெரம்பலூர்
TN-47 கரூர்
TN-48 ஸ்ரீரங்கம்
TN-49 தஞ்சாவூர்
TN-50 திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம்
TN-52 சங்ககிரி
TN-54 சேலம் (கிழக்கு)
TN-55 புதுகோட்டை
TN-56 பெருந்துறை
TN-57 திண்டுக்கல்
TN-58 மதுரை (தெற்கு)
TN-59 மதுரை (வடக்கு)
TN-60 தேனீ
TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை (மத்திl)
TN-65 ராமநாதபுரம்
TN-66 கோயம்புத்தூர் (மத்தி)
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஓசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 ராணிபேட்
TN-74 நாகர்கோயில்
TN-75 மார்த்தாண்டம்
TN-76 தென்காசி
TN-77 ஆத்தூர்
TN-78 தாராபுரம்
மேல இருக்கும் எண்களில் சில எண்கள் விடுபட்டுள்ளன, உதாரணம் 08, 17, 26, 35, 44, 53, 62, 71, 80... ஏன் என்றால் அவையின் கூட்டுத்தொகை 8.. வாகனங்களை பொருத்தவரை அவைகள் துரதிர்ஷ்டமாக கருத படுகிறது. 8 என்பது சனி பகவானின் எண்ணாக குறிப்பிடபடுகிறது. அதனால் தான் வாகன எண்ணின் கூட்டுத்தொகை எட்டு வந்தாலும் சிலர் வாங்க மறுகின்றனர்...
ஆனால் நம் முன்னோர்கள் வகுத்தது வேறு ஏதாவது காரணமாக கூட இருக்கலாம்.. உங்களுக்கு வேறு காரணம் தெரிந்தால் கூறுங்கள்... உண்மையை அறியப்பெருவோம்,...
31/08/2013
நம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் “Compose New Mail” சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும். Compose Mail என சொடுகினால் சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.
gmail-full-screen-compose
இன்றுமுதல் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யும் சாளரம் முழு திரை அளவில் தெரியும்.
இது பெரிய மற்றும் படங்களை உள்ளடக்கிய மின்னஞ்சல்களை அனுப்பும் பயணர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
படி 1: “Compose” என்பதை சொடுக்கவும்.
படி 2: வரும் சாளரத்தில்., குறுக்கு (Minimize), மூடு (Close) ஆகிய பொத்தான்களின் நடுவே இருக்கும் விரிவாக்கு எனும் பொத்தானை அழுத்தவும்.
படி :3 இப்போது சாளரத்தின் வலது கீழ் மூலையில் (Bottom right corner) இருக்கும் சிறிய முக்கோணக் குறியை அழுத்தவும்.
படி:4 அதில் இருக்கும் முதல் தேர்வு ” Default to full-screen ” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இனிமேல் எப்போதும் உங்களால் முழுத் திரை அளவில் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யலாம்.
SSS Solutions Pvt Ltd Our Services are offered to all Corporate and Small and Medium Business Customers, Government sectors, Banking sectors, Schools and institutions.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
WEST PERUMAL MAISTRY Street
Madurai
625001