Agathiar Alosanai Maiyam

Agathiar Alosanai Maiyam

Share

Counselling centre for Astrology, Numerology, Vastu, Alternative Medicines, Manthrigam, Tantrigam, Education, Career, Real Estate etc.,

🌹3-அகத்தியர் ஆலோசனை மையம் 30/08/2022

*எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்? - இதை தெரிந்தால் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்..*
***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய whatsapp குழுவில் இணைய*
https://chat.whatsapp.com/IBkmvRAgETXAgrexTdFWhX
*அகத்தியர் ஆலோசனை மையத்தின் Telegram link*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam
குறிப்பு:
*"அகத்தியர் ஆலோசனை மைய" வாட்ஸ்அப் குழு 1 இல் இருந்து 6 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒரு குழுவில் மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர்களை வரவேற்கிறோம்.*
***************************************************************************

ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹோரை நேரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால் நம் வாழ்க்கையில் வெற்றி தான்....


ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹோரை நேரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால் நம் வாழ்க்கையில் வெற்றி தான்....
எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. அதோடு எந்த கிழமையில் எந்த கிரகம் ஆதிக்கம் பெற்று விளங்கும். எந்த ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும் என அனைத்தும் ஹோரையின் படி தான் நடக்கிறது.

ஹோரை என்றால் என்ன?

ஹோரை என்றால் என்ன?
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும்.
காலையில் சூரிய உதயம் ஆன முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஹோரை தொடங்கும்.

ஞாயிற்றுக் கிழமையை எடுத்துக் கொண்டால் அந்த நாளில் சூரிய ஹோரை காலை 6 - 7 என அந்த நாள் ஆரம்பமாகும்.
இதே போல் திங்கட் கிழமையில் சந்திர ஹோரையும், செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையும், புதனன்று புதன் ஹோரை, வியாழனன்று குரு ஹோரை, வெள்ளியன்று சுக்கிர ஹோரை, சனியன்று சனி ஹோரை என ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரையுடன் ஆரம்பமாகும்.
ஹோரைகளின் சுப மற்றும் அசுப பலன்கள் :

ஹோரைகளின் சுப மற்றும் அசுப பலன்கள் :
ஹோரைகளைக் கணக்கிடும் போது சூரிய உதயம் முதல் ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும் பலனை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் நட்பு மற்றும் பகை என உண்டு. அதன் அடிப்படையில் நல்ல சுப பலன் தரக்கூடிய ஹோரை என்றும், அசுப பலன் கொடுக்கும் ஹோரை தோஷம் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஹோரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்யலாம், அதோடு மற்ற தோஷங்களைப் போல் இல்லாமல் ஹோரை தோஷம் பெரிதாக பயப்படக் கூடியது அல்ல.

இனி ஒவ்வொரு ஹோரைக்கும் அது கொடுக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கீழே ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரை நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சூரிய ஹோரை

புதிய தொழில், வியாபாரம் தொடங்க, உத்தியோகம், ஒருவரிடம் உதவி கேட்க, உங்களின் மேல் அதிகாரியை சந்திக்க, உயில் எழுத, வீடு, வாகனம் பதிவு செய்தல், நமக்கான சிபாரிசு, ஆலோசனை கேட்டல், பிற ஆலோசனை என முக்கிய காரணத்திற்கு இந்த சூரிய ஹோரை காலங்களை தேர்ந்தெடுக்கலாம்.
எக்காரணம் கொண்டும் சூரிய ஹோரை நேரத்தில் வீடு குடி போகக் கூடாது.

சந்திர ஹோரை

புதிய தொழில், வியாபாரம் தொடங்க, திருமண விஷயங்களை பேசுதல், வெளிநாடு செல்லுதல் போன்றவற்றிற்குச் சந்திர ஹோரையை தேர்வு செய்வது நல்லது. கிருஷ்ணபட்ச சந்திரனாக இருந்தால், அதாவது தேய்பிறை சந்திரனாக இருந்தால் மேற்குரியவற்றை தவிர்ப்பது நன்று.

செவ்வாய் ஹோரை

செவ்வாய்க் கிழமைகளில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை நாம் யோசனையாக வைத்துக் கொண்டு மற்ற தினங்களில் செயல்படுத்தலாம். மீறி நம் கருத்துக்கள், யோசனைகளை வெளியிட்டால் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

இதன் காரணமாக தான் செவ்வய் கிழமைகளில் தெய்வ வழிபாடு தவிர மற்ற நல்ல காரியங்களை தவிர்த்து விடுகின்றனர். நேர்மறை வார்த்தைகளை பேசுதல், கருத்துக்களைத் தெரிவித்தல், கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.
புதன் ஹோரை

புதன் ஹோரையில் எழுத்து பணிகளுக்கு மிகவும் உரிய காலம். கல்வி கடவுகளாக புதன் பார்க்கப்படுவதால், தேர்வுகள் எழுதினால் வெற்றி கிடைக்கும். எல்லா விதமான ஆராய்ச்சியையும் தொடங்கலாம். தொலை தூர தொடர்புக்கு உகந்த தந்தி, பேக்ஸ் அனுப்புதல், வழக்கறிஞர்களை சந்தித்து பேசுதல், சுப காரியங்கள் குறித்து தாய் வழி உறவினர்களுடம் பேசுவதற்கு உகந்த காலம்.
புதிய நிலம் வாங்குதல், பெண் பார்க்க செல்லுதல், அது தொடர்ப்பான பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது.
குரு ஹோரை

அனைத்து சுப காரியங்களுக்கும் ஏற்றது குரு ஹோரை. திரு மாங்கல்யத்துக்கு தங்கம் வாங்க, ஆடை, ஆபரணம் வாங்க மிக ஏற்ற நேரம் குரு ஹோரை. குரு மிகவும் சுப கிரகம் என்பதால், அந்த நேரத்தில் எது செய்தாலும் அது நல்ல பலனையே தரும். நகை தொடர்பான வேலை, கடை தொடங்க மிக ஏற்ற நேரம்.

விவசாயம் செய்ய, வீடு, மனை வாங்குதல், விற்க என எதை செய்தாலும் உகந்ததாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்திற்கும், விருந்து, விழாக்களுக்கானதும், சாந்தி முகூர்த்தத்திற்கு மிக உகந்த நேரம் இந்த குரு ஹோரை. வீடு, மனை வாங்க விற்க மிக ஏற்றது. ஆனால் எதுவும் சட்டத்திற்கு புறம்பாக இருக்கக் கூடாது.

சுக்கிர ஹோரை

சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம், பெண் பார்த்தல், திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை, விருந்து, விழா, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், புதிய வாகனம், வாங்க சுக்கிர ஹோரை மிக சிறந்தது. இந்த ஹோரையில் ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போனால், அது மேற்கு திசையில் சில நாட்களிலேயே கிடைத்துவிடும்.

இருப்பினும் இந்த சுக்கிர ஹோரை நேரத்தில் கடன் மட்டும் கொடுக்கக் கூடாது. கடன் வசூலிக்கலாம். மருந்து சாப்பிடலாம்.
சனி ஹோரை:

பொதுவாக சனி ஹோரை அசுப ஹோரை என சொல்வார்கள். இதனால் இந்த ஹோரையில் சில காரியங்களுக்கு மட்டுமே சிறப்பான பலன்கள் தரும். கடனை அடைப்பதற்கான நல்ல நேரம் என்றால் சனி ஹோரை தான். சனி ஹோரையில் கடன் திருப்பிக் கொடுக்க வேகமாக கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கா சூழல் உருவாகும்.

மருத்துவமனைக்கு செல்லுதல், அறுவைசிகிச்சை செய்தல், கடன் வாங்குதல் செய்யக் கூடாது. ஏனென்றால் அது தொடரும் என்பது ஐதீகம்.

சுப, அசுப ஹோரைகள்:

குரு சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள் சுப ஹோரைகள் என்றும், செவ்வாய், சனி, கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை சந்திர ஹோரை முதலியன அசுப ஹோரைகள் என கருதப்படுகின்றன.
எந்த நாளில் எந்த ஹோரை சுபம்:

ஞாயிறு கிழமைகளில் சனி, சுக்கிர ஹோரைகள் பலன் தராது.
திங்கள் கிழமைகளில் சனி ஹோரை பலன் தராது.
செவ்வாய்க் கிழமைகளில் சனி, புதன் ஹோரை பலன் தராது.
புதன் கிழமைகளில் குரு, சந்திர ஹோரை பலன் தராது.
வியாழக் கிழமைகளில் சுக்கிரன், புதன் ஹோரை பலன் தராது.
வெள்ளிக் கிழமைகளில் குரு, சூரிய ஹோரை பலன் தராது.
சனிக்கிழமைகளில் சூரியன், சந்திரன் சனி ஹோரை பலன் தராது.

எந்த ஹோரை சிறந்தது

இப்படி எந்த கிழமைகளில் எந்த ஹோரை சிறந்தது அல்லது சிறந்தது அல்ல என தேர்வு செய்து செயல்பட்டால் வாழ்வில் எல்லாம் வெற்றி. மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு மகத்தானது. நம்மை அறியாமலே ஹோரைகளுக்குரிய கதிர்வீச்சை நாம் உணர முடியும். அதை உணர்ந்து நடந்து கொண்டால் எல்லாம் நலம் பெறும்.

எந்த நாளாக இருந்தாலும் செவ்வாய், சனி ஹோரைகள் வந்தால் அடக்கி வாசியுங்கள். ஒவ்வொரு நாளையும் கணக்கு போட்டு நடந்து கொள்ளுங்கள் எல்லாம் சிறப்பான வெற்றியை தரும்.

தினமும் இந்த ஹோரைகளை பார்த்து நடந்து கொள்ள முடியாது என்பதற்காக தான் நம் முன்னோர்கள் நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம் என வகுத்து அதையாவது பின்பற்ற சொல்லியுள்ளனர். நாம் தினமும் ஹோரை மற்றும் அதற்குரிய பலனை அடிப்படையாக வைத்து நடந்து கொண்டால் எல்லாம் ஜெயமாகும் என்பது சித்தர்கள் வாக்கு.
***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய whatsapp குழுவில் இணைய*
https://chat.whatsapp.com/IBkmvRAgETXAgrexTdFWhX
*அகத்தியர் ஆலோசனை மையத்தின் Telegram link*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam
குறிப்பு:
*"அகத்தியர் ஆலோசனை மைய" வாட்ஸ்அப் குழு 1 இல் இருந்து 6 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒரு குழுவில் மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர்களை வரவேற்கிறோம்.*
***************************************************************************

🌹3-அகத்தியர் ஆலோசனை மையம் WhatsApp Group Invite

5-அகத்தியர் ஆலோசனை மையம் 30/04/2022

*எவ்வளவு பெரிய கடனும் சீக்கிரத்தில் அடையும் சூட்சமம். 2022 ஆம் ஆண்டின் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நேரமும் தேதியும் உங்களுக்காக.*
***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய whatsapp குழுவில் இணைய*
https://chat.whatsapp.com/EutSVcl1SDj8RDomFyUchE
*🔯அகத்தியர்🙏ஆலோசனை🙏 மையத்தின் Telegram link👇👇👇👇*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam
***************************************************************************

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வினை கொடுக்க நிறைய பரிகார முறைகளை சித்தர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு சித்தர்களால் சொல்லப்பட்ட ஒரு தீர்வுதான் இந்த மைத்ரேய முகூர்த்தம். நீங்கள் கடனாக வாங்கிய தொகையை இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால், கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அந்தக் கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறையத் தொடங்கும். இதுதான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தின் சிறப்பு. இந்த 2022 ஆம் ஆண்டில் மாதம்தோறும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நாள் மற்றும் நேரத்தைப் பற்றிய விரிவான தகவல் உங்களுக்காக.

2022ஆம் ஆண்டு மைத்ரேய முகூர்த்த தேதிகள்:

2022 மே மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
மே 9, ஞாயிற்றுக்கிழமை, 06:43 PM to 08:55 PM
மே 10, திங்கட்கிழமை, 06:05 AM to 08:07 AM
மே 25, செவ்வாய்க்கிழமை, 04:04 AM to 05:02 AM
மே 26, புதன்கிழமை, 05:36 PM to 07:48 PM 2022

ஜூன் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை, 02:55 AM to 04:20 AM
ஜூன் 22, செவ்வாய்க்கிழமை, 03:52 PM to 05:58 PM 2022

ஜூலை மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஜூலை 4, ஞாயிற்றுக்கிழமை, 01:01 AM to 02:28 AM
ஜூலை 20, செவ்வாய்க்கிழமை, 01:05 PM to 04:11 PM
ஜூலை 30, வெள்ளிக்கிழமை, 10:50 PM to 01:00 PM 2022

ஆகஸ்ட் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
ஆகஸ்ட் 16, திங்கட்கிழமை, 12:13 PM to 02:25 PM
ஆகஸ்ட் 27, வெள்ளிக்கிழமை, 09:04 PM to 10:52 PM 2022

செப்டம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
செப்டம்பர் 24, வெள்ளிக்கிழமை, 07:14 PM to 09:02 PM

2022 அக்டோபர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை, 08:37 AM to 10:49 AM

2022 நவம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
நவம்பர் 6, சனிக்கிழமை, 06:51 AM to 09:02 AM
நவம்பர் 17, புதன்கிழமை, 03:42 PM to 05:30 PM

2022 டிசம்பர் மாதம் மைத்ர முகூர்த்த தேதிகள்:
டிசம்பர் 4, சனிக்கிழமை, 05:01 AM to 07:12 AM
டிசம்பர் 14, செவ்வாய்க்கிழமை, 01:56 PM to 03:43 PM
டிசம்பர் 31, வெள்ளிக்கிழமை, 03:16 AM to 05:26 AM

இந்த மைத்ரேய முகுர்த்த தேதியில், குறிப்பிட்ட அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபருக்கு கடன் தொகையை திருப்பி கொடுத்து வர உங்களுடைய கடன் சீக்கிரமே படிப்படியாக குறைய தொடங்கி விடும். கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே விடுபடலாம். ஒருவேளை உங்களால் கடன் தொகையை திருப்பித் தர முடியாத சூழ்நிலை.
***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய whatsapp குழுவில் இணைய*
https://chat.whatsapp.com/EutSVcl1SDj8RDomFyUchE
*🔯அகத்தியர்🙏ஆலோசனை🙏 மையத்தின் Telegram link👇👇👇👇*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam
***************************************************************************

5-அகத்தியர் ஆலோசனை மையம் WhatsApp Group Invite

அகத்தியர் ஆலோசனை மையம் 06/11/2021

*விநாயகரின் அறுபடை வீடுகளும் அதன் சிறப்புகளும்...!!*

***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய வாட்ஸ்அப் குழுவில் இணைய 9080721747 க்கு WHATSAPP MESSAGE அனுப்பவும்.*

*🔯அகத்தியர்🙏ஆலோசனை🙏 மையத்தின் Telegram link👇👇👇👇*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam

*🔯 Telegram App download செய்து கொள்ளவும்👇*

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
***************************************************************************


*விநாயகரின் அறுபடை வீடுகள்*

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

முருகனுக்கு மட்டுமல்ல... விநாயகருக்கும் உண்டு அறுபடை வீடுகள்!
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும். அவரின் அண்ணனான கணபதிக்கும் அறுபடை வீடுகள் இருப்பது தெரியுமா? ஓம்கார வடிவான கணபதிக்கும் சிறப்பான ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அந்த ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கலாமே...

இந்துமத வழிபாடுகளில் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. விநாயகரை தொழுதால் காரியம் கைக்கூடும் என்பது ஆன்றோர் வாக்கு.
நம் விக்னங்களையெல்லாம் (தடைகளையெல்லாம்) களைந்து விடுவார் விநாயகர். துக்கங்களையும் தீர்த்துத் தருவார் நம்முடைய தும்பிக்கையான்.
எந்த ஒரு கோயில் என்றாலும்... அதற்கென்றே சில ஆகம விதிகள் படி அமைப்பர். இது போன்ற வரைமுறைகள் எதுவும் இல்லாமல் வினாயகர் ஆற்றோரம், ஆல மரத்தடி, ரோட்டோரம் மற்றும் முட்டுச் சந்திலும் இருப்பார்.

விநாயகரின் அறுபடை வீடுகள்:


முதல்படை வீடு - திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:

திருவண்ணாமலை - அல்லல் போக்கும் விநாயகர்: திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவ்விநாயகரைப் பற்றியே அவ்வையார் அல்லல் போம் வல்வினைப்போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைப்போம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.

திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்குத் திசையில் உள்ள இராஜகோபுரத்திற்குள்ளேயே செல்வக் கணபதியாக அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். இதுவே விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் வீடாகும். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.
“அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்..!”
- விவேக சிந்தாமணி

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுர விநாயகர், சிவகங்கை தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணைதிறை கொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் என பல விநாயகர் சந்நிதிகள் இருந்தாலும் இந்த வினைதீர்க்கும் விநாயகர் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர் இந்த கணபதி.



இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:

திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். தனியாக கொடி மரம் இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுவே அறுபடை விநாயகரின் வீடுகளில் இரண்டாவது வீடாகும். இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்.
“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமயாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்.
ஓம் விக்னேஷ்வராய நமக..!”
கல்வியும் செல்வமும் அளிக்கும் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவர். சிவன் ஆலயத்தில் இருந்தாலும் இவருக்குத் தனி கொடிமரமும் தனியான விழாவும் நடத்தப்படுகிறது. எண்ணிய யாவையும் அருளும் இந்த ஆழத்து பிள்ளையார் இர்ண்டாவது படைவீட்டு நாயகராக அருள் புரிகிறார்.

மூன்றாவது படைவீடு - திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்:

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில், நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ள வாரணப் பிள்ளையார் அருள்புரிறார். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால், கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்து கள்ள வாரணப் பிள்ளையார் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிக்கவல்லவர். சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள். அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமிப் பட்டர், அபிராமி அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள வாரணப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடி விட்டே அபிராமி அந்தாதியை பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே..!”

இது பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட சந்நிதி. அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும். கள்ளவாரண பிள்ளையார் தனது துதிக்கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். அமிர்த கலசம் பெற்ற தேவர்கள் தம்மை வழிபட மறந்ததால், அமிர்த கலசத்தை இவர் மறைத்து விளையாடினார் என்பதால்தான் கள்ளவாரண பிள்ளையார் எனப்படுகிறார். செல்வ வளம், கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் போன்றவற்றை அருளும் கருணாமூர்த்தியாக கள்ளவாரண பிள்ளையார் காட்சியளிக்கிறார்.



நான்காம்படை வீடு - மதுரை சித்தி விநாயகர்:


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி மிக்கவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும். இதுவே விநாயகரின் ஆறுபடைவீடுகளில் நான்காவது வீடாகும். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் (‘நரியை பரியாக்கிய லீலை’) இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் உள்ளார். மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக இந்த கணபதி கம்பீரமாக காட்சி அளிக்கிறார். மாணிக்கவாசக பெருமான் பாண்டிய மன்னன் விருப்பப்படி குதிரை வாங்கச் செல்கையில் இந்த சித்தி விநாயகரை வணங்கி விட்டு சென்றதாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவர் என்று அறியலாம். சகல காரியங்களிலும் வெற்றி அளிக்கும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும். அவப்பெயர் நீங்கும்.

ஐந்தாவது படைவீடு - பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும். இவ்விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், இவர் அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.


வேழமுகத்தானின் படைவீடுகளில் ஐந்தாவதாக இருப்பது காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி சந்நிதி. காசி மஹாத்மியம் என்ற நூலை பாடி பரவசப்படும் கணபதி இவர். காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு முன்பு துண்டி கணபதியின் ஆலயம் உள்ளது. சிறிய கோயில் என்றாலும் புகழ் பெற்று உள்ளது. சிறிய தெருவில் கடைகளுக்கு இடையே கணபதி அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காணப்படுகிறார். இவருக்கு செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்வதால் இப்படி காட்சி அளிக்கிறார். பக்தர்கள் 'துண்டி மகராஜ்' என்று பரவசத்தோடு அழைக்கிறார்கள். காசிக்கு வருபவர்கள் இந்த கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரை விட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. ஞானத்தின் உருவான இவர் தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்குச் சென்று துண்டி பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள் பிள்ளையார்பட்டி கணபதியை வணங்கி அதே அருளைப்பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.

ஆறாம்படை வீடு - திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:

சிதம்பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையார் ஆலயம் விநாயகரின் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. சிற்பியின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்பாக தோன்றிய காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இதுவே மருவி பொல்லாப் பிள்ளையார் என்று அழைக்கின்றனர். இங்குள்ள பொள்ளாப் பிள்ளையாரின் அருளைக் கொண்டு நம்பியாண்டார் நம்பி, தில்லையில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் பொள்ளாப்பிள்ளையாரின் மீது கொண்டிருந்த அதிதீவிர பக்தியினால், விநாயகரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். பொள்ளாப்பிள்ளையாரைப் போற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலான நாயன்மார்கள் வணங்கி உள்ளனர். இவரை வணங்குவதன் மூலம் புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும். மற்றும், கல்வியும் ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை சிறப்பாக வணங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
காயத்திரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, விருத்தாசலம், காசி அல்லது பிள்ளையார்பட்டி, திருநாரையூர் என ஆறு படைவீடுகளில் கோயில் கொண்டு பக்தர்களைக் காக்கும் கணநாதரை தரிசித்து அருள் பெறுவோம்.



***************************************************************************
*அகத்தியர் ஆலோசனை மைய வாட்ஸ்அப் குழுவில் இணைய 9080721747 க்கு WHATSAPP MESSAGE அனுப்பவும்.*

*🔯அகத்தியர்🙏ஆலோசனை🙏 மையத்தின் Telegram link👇👇👇👇*
https://t.me/AgaththiyarAlosanaiMaiyam

*🔯 Telegram App download செய்து கொள்ளவும்👇*

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
***************************************************************************

அகத்தியர் ஆலோசனை மையம் நல்லதே நினைத்து நல்லதே செய்ய நல்லதே நடக்கும். -அகத்தியர்.

29/10/2021

இந்த தங்கத்தாலான ஓட்டுவீடு தான் உலகமக்களின் உயிருக்கு ஆதாரம்... உலகத்தில் பழமையான கோயில்கள் மிக சிறிய அளவே உள்ளன அதில் தனிச்சிறப்பாக அமைக்கப் பெற்றதுதான் நம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜபெருமானுடைய இப் பொற்க்கோவில்.....
இதனை ஏன் மனித உடலையும் மனித வாழ்வையும் குறிப்பது போல் அமைத்தார்கள்...? என்பது சிந்திக்க வைக்கிறது....
இதை திருமூலரின் திருமந்திரத்திலும் கூருகிறார்..... "மானிடராக்கை வடிவு சிவலிங்கம்மானிடராக்கை வடிவு சிதம்பரம்மானிடராக்கை வடிவு சதாசிவம்மானிடராக்கை வடிவு திருகூத்தே என்பது போன்ற பல பாடல்களில் குறிப்பிடுகிறார்...
1)“மனிதன் ஒரு நாளில் உள்ளே இழுத்தும் வெளியே விட்டும் சுவாசிக்கும் மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 ஆகும் இதையே பொன்னம்பலத்தின் தங்க கூறையில் 21600 தங்க ஓடுகளாக வேயப்பட்டிருக்கிண்றது இதை ஆனந்தமய கோசம் என்றும், நடராஜர் நடனமிடும் சிற்சபை என்றும் உலகத்தின் மையம் என்றும் சொல்லப்பட்டுகிறது சிற்சபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

2) சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன.
3) இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.

4) 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.
5) இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்.
6) இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும் விலகியே போகும். -

எண்ணும் எழுத்தும்
______
உடற்கூறு கணிதம்

21600 மூச்சுக்காற்று

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்

ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'

16/10/2021

High definition......power...?

👉🏼விஞ்ஞானத்தால்
சூத்திரத்தைத் தான் கண்டு
பிடிக்க முடியுமே தவிர, சூட்சமத்தை
இறைவனைத் தவிர வேறு யாராலும்
அறிய முடியாது.!

🌎பால்வெளி மண்டலத்தில் எவ்வளவு
கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்தாலும்
ஒரு வட்டவரைக்கு மேல் எங்களால்
செல்ல முடியவில்லை. அதற்கு மேல்
இருப்பதை அறியமுடியவில்லை.
( நாஸா விஞ்ஞானிகள் )

13 1/2 லட்சம் பூமிகளை சூரியனின் உள்ளே வைக்கலாம் அவ்வளவு
பெரியது சூரியன்.

ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு
நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்....

அதுவும் ஒன்றா,
இரண்டா, கோடி, கோடி, கோடி என்று
விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று
ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது.

*Pistol star என்று அழைக்கப்படும்
நட்சத்திரம் சூரியனைவிட 10 மில்லியன்
மடங்கு ஒளி உள்ளது.

Betelgeuse என்ற நட்சத்திரத்திற்குள்
270 லட்சம் சூரியனை வைக்கலாம்.

ஒவ்வொன்றும் சுற்றுவதும், சுழலுவதும்
படுவேகமாகும். சில புல்லட்டை விட
17 மடங்கு வேகத்தில் சுழல்கிறது.
சுற்றுகிறது.

ஏன் நமது சூரியன் வினாடிக்கு
225 கி. மீட்டர் வேகத்தில் பால்வெளியில்
பறந்து கொண்டிருக்கிறது. மோதிக்
கொள்ளாமல் சிதறாமல் அவைகளை
வைத்திருப்பது யார்.?

*ஒரு நகரம் என்றால் அதிக வாகன
போக்குவரத்து, சிக்னல்,
காவல்துறை, கணக்கு வழக்கு அலுவலகம், குடிநீர் குழாய்.
வடிகால் குழாய், மின்சாரம், தொழிற்சாலை, பொருட்கள் உள்ளே
வருவது, கழிவுகள் வெளியே செல்வது. என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்.

அதுபோன்ற செயல்பாடுகளோடு
மனித உடலில் உள்ள செல்கள் இருக்கின்றது.

அதன் அளவு 20 மைக்ரான்களாகும்.
( ஒரு மைக்ரான் என்பது
10 லட்சத்தில் ஒரு பாகம் ) இவ்வளவு சிறிய ஒன்றில் ஒரு நகரத்தையே
அடக்கியது யார்...?

*ஒரு குழந்தை உருவாவதே
ஒரு பெரிய அதிசயமாகும்.

நமது உடலில் நோய் எதிர்ப்புக்
காவலர்கள் உண்டு.

அவர்களின் வேலை
என்னவென்றால் வெளியிலிருந்து ( காற்று, நீர், உணவு, எச்சில், இரத்தம் ) நமது உடலுக்குள் நுழைய முயலும் கிருமிகள் போன்றவற்றை எதிர்த்து
அழிப்பது தான்.

உள்ளே அந்நியப் பொருட்கள் வந்தால்
அவர்களுக்கு போரிட கட்டளையிடும் டி4
என்ற கமாண்டரிடம் அனுமதி கேட்கும்
கிடைத்தவுடன் போரிட்டு கொல்லும்.


*தாயின் உடம்பிற்கு, தந்தையின் விந்து
என்பது கிருமி. தூசி, துரு, கண்ணாடித்
துண்டு போன்றவற்றைப் போல ஒரு
அந்நியப் பொருளாகும்.

விந்தில் உள்ள சிறிய அந்த கிருமி போன்றது நீந்திச் செல்கிறது. ( ஒரு முறை மனிதன் வெளியேற்றும்
விந்தில் 300 கோடி உள்ளது )

ஒன்று மட்டும் தாயின் சினைமுட்டையை
அடைகிறது. அந்நியன் வந்துவிட்டான்
அடிக்கவா என்று போர்வீரர்கள் வருவதற்குள் சினைமுட்டை blastocyst என்ற நிலைக்க வந்து விடுகிறது.

தன்னிடம் உள்ள transferritin என்ற புரதத்தால் அதை மூடிவிடுகிறது. போர்வீரர்களும் அது அந்நியப்
பொருளல்ல என்று ஏமாந்து விடுகிறது.

இவ்வளவு வேலைகளைச் செய்யும்
விந்துப்பூச்சியின் அளவு 6 மைக்ரான்களாகும்.

அதில் நீந்திச் செல்ல வாலின் அளவு...
3 மைக்ரான் முட்டையைத் தொட்டதும் வால் தனியாக கழன்று போய் விடுகிறது. மீதமுள்ள
3 மைக்ரான் தலையில் தான் நமது சகல
கதையும் எழுதப்படுகிறது.

போர்வீரர்களை ஏமாற்றும்
பெண்ணின் சினை முட்டை 120
மைக்ரான்களாகும்.

இவ்வளவு அற்பமான
சிறிய பொருள்களுக்கு இந்த
அறிவை கொடுத்தது யார்.....?

*ஹைட்ரஜன் எரியும் பொருள்.

ஆக்ஸிஜன் இல்லாமல்
எதுவும் எரியாது.

இரண்டும் சேர்ந்தால் இன்னும் பயங்கரமான எரியும்
பொருளாக மாறவேண்டும்.

ஆனால் நீராக,
நெருப்புக்கு எதிரியாக ஆகுகிறது.

இரண்டும் வாயு,

இரண்டு வாயு சேர்ந்தால்
ஒரு வாயுவாக மாற வேண்டும், ஆனால்,
திடமாகவும், வாயுவாகவும்
திரவமாகவும் உள்ள
நீராக மாறுவது எப்படி....?

*சோடியம் விஷமாகும்.
குளோரைடும் விஷமாகும்.

இரண்டும் சேர்ந்தால் வேறு
ஒரு பயங்கர விஷமாக மாறவேண்டும்.
ஆனால், உப்பாக உயி்ர் வாழ
உதவுகிறதே இதைச் செய்தது யார்.....?

*அணு உலைகளை எவ்வளவு
பாதுகாப்பாக இயக்கப்படுகிறது என்பதை அறிவோம்.

ஆனால், நாம் பார்க்கும்
சூரியனானது இந்த
அணு உலையைப் போல கோடிக்கணக்கான
அணுஉலையின் செயல்பாடுகளை
கொண்டது. அதை பாதுகாப்பது யார்..?

இயக்குபவன் யார்..?

ஒரு தலைமையின்
கட்டுப்பாடு இல்லாமல்
சாத்தியமே இல்லை.

இதுவெல்லாம் ஒரு மிகப்பெரிய பேரறிவாளன் நுண்ணறிவாளன்
இல்லாமல் எப்படி நடக்கும்...?.......

ஆனால்,
சிந்திக்க வேண்டிய நாம்..?

நம் வாழ்க்கையை
ஒரு குறுகிய வட்டமிட்டு வட்டவரைக்குள்
வாழ்வது துர்பாக்கியமான நிலைதான்.

கடவுளை தவிர வேறு எந்த சக்தியும் கிடையாது. 🙏🙏🙏

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


B4, GOLDEN Avenue, GLADWAY GREEN CITY, BYE PASS ROAD, AVANIAPURAM
Madurai
625012