TNPSC Study Materials in Tamil

TNPSC Study Materials in Tamil

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNPSC Study Materials in Tamil, Educational consultant, West Masi Street, Madurai.

29/08/2025

"பூமியை மையமாகக் கொண்டு சூரியன், நிலவு மற்றும் பிற கோள்கள் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன" என்பது எதன் கோட்பாடு ஆகும்?
புவி மையக் கோட்பாடு

29/08/2025

நம் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் விண்மீன்கள் எத்தனை?
2000 - 3000

29/08/2025

"எனது குறிக்கோள் எளிதானது. அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது?, ஏன் அது நிலையாக நிற்கிறது? என்பதனை புரிந்து கொள்ளுதல் ஆகும்" - என்று கூறியவர் யார்?
ஸ்டீபன் ஹாக்கிங்

28/08/2025

அய்யன்காளி
👉 தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.

👉 இவரால், கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு' உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.

👉 சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றிற்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

👉 தன் சமூக மக்களை ஒன்றுபடுத்தி சாதுஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை 1905ஆம் ஆண்டு தொடங்கினார். காந்தியடிகள் 1937ஆம் ஆண்டு வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார்.

👉 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்த போராளியான அய்யன்காளி 1941ஆம் ஆண்டு மறைந்தார்.

28/08/2025

பிராக் கோரக்புரி:

👉 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான பிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri) கோரக்பூரில் பிறந்தார்.

👉 இவர் மாகாண சிவில் சேவை (P.C.S.) மற்றும் இந்திய சிவில் சேவையில் (I.C.S.) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதற்காக அதை ராஜினாமா செய்தார்.

👉 இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் சாகித்திய அகாடமி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மறைந்தார்.

28/08/2025

1891ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் மறைந்தார்.

28/08/2025

1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


West Masi Street
Madurai
625001