மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் கழகம்,பாண்டியராசபுரம்

மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் கழகம்,பாண்டியராசபுரம்

Share

நம் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது ,ஆண்டு தோறும் மேனாள் மாணவர் சந்திப்பு விழா நடத்துவது..

26/05/2026

பாண்டியராசபுரம் காசி கிரிக்கெட் அகாடமி மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 26-ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி விழாவில் முதல் பரிசைத் தொடர்ந்து 5-வது முறையாக பெற்ற கரட்டுப்பட்டி பிரெண்ட்ஸ் பாரெவர் அணியினருக்கு உளம் நிறைந்த பாராட்டுகள்..

09/05/2026
05/05/2026

பாண்டியராசபுரம் காசி கிரிக்கெட் அகாடமி மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 26-ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி விழா வருகின்ற 09.05.26 முதல் 17.05.26 வரை நமது பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.இக்குழுவிலுள்ள அனைவரும் இவ்விளையாட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்டன் கேட்டுக் கொள்கிறோம். நமது பள்ளி அருகிலுள்ள ஊர்களில் விக்கி பந்து கிரிக்கெட் அணிகள் இருந்தால் இவ்விளையாட்டுப் போட்டி விழாவில் கலந்து கொள்ளலாம்.மேலும் அனைத்து ஊர் கிரிக்கெட் அணிகள் இவ்விளையாட்டில் கலந்து கொள்ள இன்று 05.05.26 மாலை 6.00 மணிக்குள் பெயர்ப் பதிவு செய்து கொள்ளலாம்.அணிச் சீருடையில் கலந்து கொள்ளும் அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்..அணி பெயரைப் பதிவு செய்ய தொடர்புக்கு-9942284095..

22/04/2026

நமது பள்ளி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பாண்டியராசபுரம் வி.கருணாநிதி மற்றும் செயலாளர் வி.ஆசைத்தம்பி ஆகியோரின் மூத்த சகோதரி மற்றும் நம் பள்ளி பழைய மாணவி வி.காசி நாயகி அவர்கள் 24.3.26 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவருடைய ஆத்மா சாந்தி பெற 22.04.26 இன்று 30-ஆம் நாள் வழிபாடு செய்யப்பட்டது.அவருடைய ஆத்மா சாந்தி பெற பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக இறைவனை பிராரர்த்திப்போம்..

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Pandiarajapuram
Madurai