தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளி,
தெப்பக்குளம், மதுரை - 625009
+2 பொதுத்தேர்வு மதிப்பெண் பகுப்பாய்வு - 2023
தேர்வு எழுதியோர் : 234
தேர்ச்சி பெற்றோர்: 233
தேர்ச்சி சதவீதம் : 99.60%
முதல் மதிப்பெண்: 594 / 600
பள்ளி சராசரி:460.2/600
பள்ளியின் முதல் 3 மதிப்பெண்கள்
1.R.S.ராஜேஸ் :594 / 600
2.S.கார்த்திக் பிரபு: 588/600
3.S.N.சூர்யா : 580/600
550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்: 18
500 - 550 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:65
450 - 490 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:62
450 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்ற மாணவர்கள்: 89
சதம் பெற்ற பாடப்பிரிவுகள்
வேதியியல் : 3
கணினி அறிவியல்: 5
கணினி பயன்பாடு:12
கணக்குப் பதிவியல் : 11
வணிகவியல் : 9
பொருளாதாரம்: 2
பொது இயந்திரவியல்: 1
மொத்த சதங்களின் எண்ணிக்கை : 43
தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளி, மதுரை
கல்வியே செல்வம்
26/11/2022
தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளி,
நாட்டுநலப்பணித் திட்டத்தின்
(அலகு எண்:49)
ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வு.
மதுரை
ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி,
அய்யனார் நகர் கலையரங்கில்
25-11-22 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை நிகழ்வில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையோடு இணைந்து கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆடு மாடுகளுக்குக் குடற்புழு நீக்க மருந்து
வீட்டிற்கே சென்று செலுத்தப்பட்டது.
பின்னர் மாணவர்கள் ஆண்டார் கொட்டாரம் உயர்நிலைப் பள்ளியில் தூய்மைப்பணி, மரங்களைச் சுற்றி மண் சீரமைக்கும் பணி,
பாதை புனரமைப்புப் பணி ஆகியவற்றை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மேற்கொண்டனர்.
பள்ளியின் வாயிற்பகுதியில் பல்வேறு களப்பணி மேற்கொண்டனர்.
தேநீர்,வடை
மதிய உணவாகச்
சாதம்,சாம்பார்,
முட்டைக்கோஸ் பொரியல்,அப்பளம், ஊறுகாய்
ஆகியவை வழங்கப்பட்டது.
மாலையில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
கண்நலப் பாதுகாப்பு
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.லதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தொடக்கப்
பள்ளியைச் சேர்ந்த 207 மாணவர்களும்
தொடக்கப்பள்ளி ஆசிரியப்
பெருமக்களும் நாட்டுத்தொண்டுத் திட்ட மாணவர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர்.
கண் மருத்துவமனை
முகாம்
ஒருங்கிணைப்பாளர்
திரு.முருகேசன்
அவர்கள் "கண்ணொளி காப்போம்"என்னும் தலைப்பில் கண்கள் பற்றிய அறிவியல் செய்திகளையும்
பாதுகாப்பு வழிமுறைகளையும் இளஞ்சிறார்கள் மனதில் பதியும்வண்ணம் இனிமையாக எடுத்துக் கூறினார்.
கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர்
திரு.இராஜசேகரன் அவர்கள் சக்கரைநோயும் கண் நலமும் என்னும் பொருண்மையில் சிறப்பாகப் பேசினார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
நாட்டுத் தொண்டுத் திட்டமாணவர்கள் தங்கள் பணிகளைப் பற்றிக் கலந்துரையாடல் செய்தனர்.
திட்ட அலுவலர் திரு.கார்த்திக் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
மாணவர்களின் பணிகளைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு.அபினேஷ் அவர்கள் உடனின்று நெறிப்படுத்தினார். பயிற்சி ஆசிரியர் திரு.பழனி அவர்கள் மாணவர்களை வழிநடத்தினார்.
நிகழ்வுகள் அனைத்தும்
இனிதே நிறைவுற்றன.
25/11/2022
நாட்டுநலப்பணித் திட்டத்தின்
(அலகு எண்:49)
ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வு
மதுரை
ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி,
அய்யனார் நகர் கலையரங்கில்
24-11-22. வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இறைவாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதாக விழா தொடங்கியது.
நிகழ்வில் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.சீமான் அவர்கள்,
ஒன்றியக் கவுன்சிலர் திரு.கார்த்திக்ராஜா அவர்கள்,ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு.முனியாண்டி அவர்கள்,ஆண்டார்கொட்டாரம் உயர்நிலைப்பள்ளியின்
பட்டதாரித் தமிழாசிரியர் திரு.சுப்பிரமணியன் அவர்கள்,
ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.லதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து
கொண்டனர்.
திட்ட அலுவலர் கார்த்திக் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் மாணவர்கள் ஆண்டார் கொட்டாரம் உயர்நிலைப் பள்ளியில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
பள்ளியின் முன்புறம் உள்ள தேவையற்ற முட்புதர்களையும்
புற்களயும் அகற்றிக் களப்பணி மேற்கொண்டனர்.
காலை:
தேநீர்,வடை
மதியஉணவு: தக்காளிச்சாதம்
தயிர் வெங்காயம்
மாலை: பாசிப்பயறு ஆகியவை வழங்கப்பட்டது.
மாலை நடைபெற்ற நிகழ்வில் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளித்
துணைத் தலைமையாசிரியர் திரு.சங்கர் அவர்கள் 'சேவையால் மிளிர்வோம்' என்னும் தலைப்பில் சேவையின் சிறப்புக் குறித்தும் அன்னை தெரசா குறித்தும் மாணவர்களிடம் பேசினார்.
தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் திரு.செல்வக்குமார் அவர்கள் நாட்டுநலப்பணித் திட்டத்தின் பெருமைகள் பற்றிப் பேசினார்.
தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.அசோக்குமார் அவர்கள் வருகை புரிந்து வாழ்த்தினார்.
விழாவின் சிகரமாகத்
தெப்பக்குளம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் போதையினால் வழிமாறும் பாதை என்னும் கருப்பொருளில் பல சிறந்த கருத்துகளை வழங்கினார்.
திருக்குறள்கள்,
கலாமின் கனவுகள் எனப் பரந்துப்பட்ட பேச்சாக அவரின் பேச்சு அமைந்தது.
விழாவில் ஆண்டார்கொட்டாரம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆண்டார்கொட்டாரம் உயர்நிலைப் பள்ளித் துணைத்
தலைமையாசிரியர் திரு.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பங்ககேற்றுச் சிறப்புச் செய்தார்.
நாள் முழுவதும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு.அபினேஷ் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்தினார். பயிற்சி ஆசிரியர் திரு.பழனி அவர்கள் உறுதுணையாக இருந்தார்.
மாலை நிகழ்வு நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
25/11/2022
தியாகராசர் நன்முறை மேனிலைப்
பள்ளியின்
நாட்டுநலப்பணித் திட்டத்தின்
(அலகு எண்:49)
ஏழு நாட்கள் சிறப்பு முகாம்
மதுரை
ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி,
அய்யனார் நகர் கிராமத்தில்
23-11-22 முதல் 29-11-22 வரை
"நலமான இளைஞர் வளமான பாரதம்" என்னும் கருப்பொருளில் நடைபெறுகிறது.
சிறப்பு முகாமிற்கான தொடக்க விழா செளராஷ்ட்ரா ஆண்கள் மேனிலைப்
பள்ளியில்
23-11-2022 புதன்கிழமை
அன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்து தங்கள் முகாம்களைத் தொடங்கின.
மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கார்த்திகா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.முகாமில் செயலாற்றும் தன்மை,
தொண்டின் தூய்மை,நாட்டுநலப்பணியின் இன்றியமையாமை ஆகியவை குறித்துப் பேசி மாணவர்களை வாழ்த்தினார்.
நாட்டு நலப்பணித்
திட்டத்தின்
மதுரை மாவட்டத் தொடர்பு அலுவலர்கள் திரு.ராஜ்குமார் அவர்களும்
திரு.
நவநீதகிருஷ்ணன் அவர்களும் முகாமிற்குச் செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர் மாணவர்களுடன் குழுப்படம் எடுக்கப்பட்டது.
அன்றைய நாள் ஆண்டார்கொட்டாரம் அய்யனார் நகர் கிராமத்திற்குச் சென்று முகாமிற்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
25/07/2022
தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் "மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் "துவக்கவிழா 15.07.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாணவர்களின் கடவுள் வாழ்த்துடன் துவங்கியது.
முதுகலைத் தமிழாசிரியர் திரு .ஆனந்தன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் திரு. செந்திலரசு அவர்கள் தலைமை ஏற்க, பள்ளி நிர்வாக அலுவலர் திரு .இராமகிருஷ்ணன் அவர்கள் விழாவில் முன்னிலை வகித்தார்.பள்ளித் துணை தலைமையாசிரியர் திரு. சங்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கல்விக்கண் திறந்தவர் காமராசர் என்ற தலைப்பில் 11- 'இ' பிரிவு மாணவர் ஸ்ரீ ஹரிஷ் உரை நிகழ்த்தினார். 'திருப்புகழ்'பாக்களை 12-'அ' பிரிவு மாணவர் ராஜாராம் பாடினார்.'மண் மணக்கும் மதுரை'என்ற தலைப்பில் 10 - 'ஆ' பிரிவு மாணவர் மணிகண்டன் உரை நிகழ்த்தினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர்.திரு. சண்முக. திருக்குமரன் அவர்கள் "இளம் பருவத்தில் தம் திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்ற கருத்துகளைத் தம் சிறப்புரையில் வலியுறுத்திக் கூறினார்.
தமிழாசிரியை திருமதி ம.பா. கார்த்திகேஸ்வரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விழா நிகழ்வுகளைத் திருமதி. பா. சாந்தி தமிழாசிரியரும் திருமதி.அ. ஜான்சி ராணி தமிழாசிரியரும் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.
25/07/2022
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை
ஜெயராஜ் இந்து நாடார் மேனிலைப் பள்ளியில்
12-07-22 செவ்வாய்க்கிழமை அன்று
நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாப் போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் பெற்ற பரிசுகள்:
முதற்பரிசு:
(மொத்தம்-2)
ஓவியப்போட்டி
நடுநிலை:
R.ஹரிஷ்-8 C
ரங்கோலி
மேனிலை:
T.சந்தோஷ் ராஜ்-11A
M.அருண் பாண்டியன்-12B
இரண்டாம் பரிசு:(மொத்தம்-4)
தமிழ்ப்பேச்சு:
மேனிலை:
1)S.கார்த்திகேயன்-
11 E
குழுநாடகம்
மேனிலை:
1.S.ஜனாவிக்ரம்-11A
2.R.C.நவின் -11 C
3.M.பிரசன்னகுமார்-
11C
4.T.ஞான அல்வின்-11E
5.R.ஹரிஹரன் -11E
6.M.தினேஷ் குமார்-11E
ரங்கோலி
உயர்நிலை:
J.S.யோகேஷ்வரன்-
10 B
T.B.தர்ஷன் பாபு-10 B
ரங்கோலி
நடுநிலை:
M.முகுந்தா-8 D
K.S.R.பிரிதம்-8 D
பரிசளிப்பு நாள்:22-07-22 வெள்ளிக்கிழமை
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த
48 பள்ளிகளிலிருந்து
1200 மாணவர்கள் பங்கு பெற்ற போட்டிகளில்
அதிக புள்ளிகளைப் பெற்றுச் சுழற்கேடயம் பெறுவதில் *மூன்றாமிடம் பெற்றுள்ளது என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
[8:49 pm, 22/07/2022] Venkatesh R..: Nandri Iyya
[8:50 pm, 22/07/2022] Tmhss Karthik Tamil: மதுரை
விருதுநகர் இந்து நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளியில்
08-07-22 வெள்ளிக்கிழமை அன்று
நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாப் போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் பெற்ற பரிசுகள்:
முதல்பரிசுகள்:
(மொத்தம்-5)
தமிழ்ப்பேச்சு
உயர்நிலை-
1)S.நடேசன்-9 D
ஓவியம்:
மேனிலை-
2)S.சந்தோஷ்ராஜ்-
11 A
தமிழ்க்கவிதை:
உயர்நிலை-
3).J.ஸூராம்
சரவணன்-9 A
தமிழ்க்கட்டுரை:
உயர்நிலை-
4)K.S.சக்திகணேஷ்-
9 A
மேனிலை-
5)V.S.விஷ்ணு நாராயணன்- 11 A
இரண்டாம் பரிசு:(மொத்தம்-1)
தமிழ்ப்பேச்சு:
S.கார்த்திகேயன்-11E
மூன்றாம்பரிசுகள்:
(மொத்தம்-4)
ஓவியம்:
1))H.கபிஸ்ராம் -8 D
தமிழ்க்கவிதை:
உயர்நிலை:
2)L.ரிஷிவர்மா-9 A
மேனிலை:
3)U.சஞ்சய் -11E
தமிழ்க்கட்டுரை:
4)S.சக்திகணேஷ்-8 B
மொத்தம் பத்து பரிசுகளை நம் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
[8:50 pm, 22/07/2022] Tmhss Karthik Tamil: மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக்கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில்
சுதர்சன் -8 B இரண்டாம் பரிசும்
திருமலைகுமரன்-8 B
மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர் என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
25/07/2022
மதுரை
விருதுநகர் இந்து நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளியில்
08-07-22 வெள்ளிக்கிழமை அன்று
நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாப் போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் பெற்ற பரிசுகள்:
முதல்பரிசுகள்:
(மொத்தம்-5)
தமிழ்ப்பேச்சு
உயர்நிலை-
1)S.நடேசன்-9 D
ஓவியம்:
மேனிலை-
2)S.சந்தோஷ்ராஜ்-
11 A
தமிழ்க்கவிதை:
உயர்நிலை-
3).J.ஸூராம்
சரவணன்-9 A
தமிழ்க்கட்டுரை:
உயர்நிலை-
4)K.S.சக்திகணேஷ்-
9 A
மேனிலை-
5)V.S.விஷ்ணு நாராயணன்- 11 A
இரண்டாம் பரிசு:(மொத்தம்-1)
தமிழ்ப்பேச்சு:
S.கார்த்திகேயன்-11E
மூன்றாம்பரிசுகள்:
(மொத்தம்-4)
ஓவியம்:
1))H.கபிஸ்ராம் -8 D
தமிழ்க்கவிதை:
உயர்நிலை:
2)L.ரிஷிவர்மா-9 A
மேனிலை:
3)U.சஞ்சய் -11E
தமிழ்க்கட்டுரை:
4)S.சக்திகணேஷ்-8 B
மொத்தம் பத்து பரிசுகளை நம் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
11/05/2022
Senior Teacher Demonstration Classes @ Thiagarajar College of Preceptors
Our Teachers are gave demonstration classes in the Pedagogical Subjects to the I Year B. Ed. students at Thiagarajar College of Preceptors from 09.05.2022 to 11.05.2022
06/04/2022
Happy to Welcome Our Official Facebook Page.
ModelSchool
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Thiagarajar Model Higher Secondary School, Teppakulam South, Madurai/9
Madurai
625009
Opening Hours
| Monday | 9am - 5am |
| Tuesday | 9am - 5am |
| Wednesday | 9am - 5am |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5am |