Silver Birds Nursery & Primary school

Silver Birds Nursery & Primary school SILVER BIRDS Nursery&Primary school has been offering quality education to kids thru English medium

04/11/2021
14/10/2021
14/11/2020
15/10/2020

உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: உலக கை கழுவும் தினத்தையொட்டி அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு களப்பணியாளர்கள் மூலம் கை கழுவும் அவசியம் குறித்தும், கைகளைச் சுத்தமாக கழுவும் பழக்கத்தைப் பின்பற்றினாலேயே பெரும்பாலான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்...

http://goo.gl/VC0K9b

புதிய கல்விக்கொள்கை 2020 பற்றி ஆசிரியர்கள் முதல்வர்கள் கல்வியாளர்கள்  ஆகஸ்ட் 31 க்குள் தங்கள் பயனுள்ள சிறந்த செயல்படுத்த...
25/08/2020

புதிய கல்விக்கொள்கை 2020 பற்றி ஆசிரியர்கள் முதல்வர்கள் கல்வியாளர்கள் ஆகஸ்ட் 31 க்குள் தங்கள் பயனுள்ள சிறந்த செயல்படுத்தக்கூடிய
ஆலோசனைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது - இந்திய ஒன்றிய மைய அரசு

innovateindia.mygov.in/nep2020,

The National Education Policy (NEP), 2020 has been approved by the Union Cabinet on 29th July 2020. NEP 2020 is the first education policy of the 21st century, which aims to address the many growing developmental imperatives of our country and is aligned to the 2030 Agenda for Sustainable Developmen...

29/05/2020

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

Address

Mohur
Madukkur
614903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silver Birds Nursery & Primary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share