புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது.
அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது.
சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.
பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு.
தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது.
அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள்.
“உலகப்பொதுமறை” தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார்.
நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும்.
நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது.
இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.
நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.
Permanent Book Fair at Kumbakonam
Permanent Book Store in Kumbakonam
Permanent Book Fair in Kumbakonam. 10% to 30% special discount on books.
* All kind of books
* All publishers books
* Educational
* General
* Games
* Music CDs
பொது அறிவு வினா-விடைகள் :-
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாணக்கியர்
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
11.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி
12.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
13.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
14.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
15.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
16.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
17.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
18.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
20.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
தமிழரின் கணக்கதிகாரம்......
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?
ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்
கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்
அடுத்த முறை பூசணி வாங்கும் போது சரிபாருங்கள்.
அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!
படித்து பிறருக்கும் பகிருங்கள்..
அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தோராய கணக்கு மட்டுமே,
உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..
சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது.
அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம்.
காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது.
ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும்.
ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது,
சிறிய வாகனத்திற்கு ரூ.35ம்,
நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம்,
பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம்,
கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது.
நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.
90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.
63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.
18,90,00,000×12= 226, 80,00,000
ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.
226,80,00,000×10 = 2,268,00,00,000.
வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.
ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?
இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..?
பகல் கொள்ளையா..?
இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி,
இந்தியாவில் தனியார் மற்றும்,
வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..?
அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!
பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்
பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.
* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.
* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்
17/09/2014
திருவேங்கட மலையில் நிற்பவன் யார்? பெருமாளா?? முருகனா?? ~ ஒரு சர்ச்சை. வாதங்களை பார்ப்போம்.
1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.
இந்த வாதம் கொஞ்சம் வீக்கான வாதம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்றால் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை, சென்னை அருகே திருநீர்மலை போன்ற இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களும் முருகன் கோவில்கள் என்று சொல்லிவிடலாம்.
2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.
வேல் + இடம் = வேலிடம் என்று ஆகும். வேங்கடம் ஆகுமா என்று தமிழறிஞர்கள் தான் சொல்ல வேண்டும். நான் அறிந்த தமிழ் இலக்கணப்படி அப்படி ஆகாது.
3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.
வைணவத்திலும் ஈஸ்வரன் என்றால் கடவுள் தான். வைணவ தத்துவங்களில் எல்லாம் கடவுளைக் குறிக்க ஈஸ்வரன் என்ற சொல்லைத் தான் பயன்படுத்துகிறார்கள். சேதனம் (அறிவுள்ளது), அசேதனம் (அறிவில்லாதது), ஈஸ்வரன் (இறைவன்) என்று தான் முப்பெரும் தத்துவங்களாக வைணவம் கூறுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த வாதம் அடிபட்டுப் போகிறது.
4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.
மதில் சுவர்களில் கருடாழ்வார் இல்லை என்பது உண்மை. சிங்கங்கள் இருக்கின்றன. முருகன் கோவில் என்றால் சிங்கமா இருக்கும்? மயில் அல்லவா இருக்க வேண்டும்? சிங்கம் இருப்பதால் இது அம்பிகை கோவில் என்பவர்கள் உண்டு.
5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார். நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.
பாலா என்பது அம்பிகையின் பெயர் - பாலா திரிபுரசுந்தரி என்பார்கள். அதனாலும் பாலாஜி என்பது அம்பிகை என்று சொல்பவர்கள் உண்டு. பாலன் முருகன் அதனால் பாலாஜி என்ற வாதத்தை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன்.
6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது. நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒற்றுமையை பல முருகன் ஆலயங்களில் பார்க்கலாம். திருச்செந்தூர் முருகன் உருவம் தான் உடனே நினைவிற்கு வருகின்றது. ஆனால் திருச்செந்தூரிலும் முருகன் சிலையில் வேல் இல்லை. அதனால் அது வேலை வைத்துக் கொள்வதற்காக அமைந்த அமைப்பா அல்லது தற்செயலா என்ற கேள்வி உண்டு. சங்கு சக்கரங்கள் இருக்கும் கைகள் வேங்கடநாதனின் திருவுருவத்தில் இல்லை; தோள்களில் தான் சங்கு சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை.
7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.
உண்மையான மூலவர் சிலையைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அப்படி பார்ப்பதற்கான சிறப்பு தரிசன சேவையும் இருக்கின்றது என்று நினைக்கிறேன். நான் பார்த்ததில்லை.
8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.
தமிழெழுத்துகள் என்பதால் இது முருகன் கோவில் என்று இந்த வாதம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். தமிழ் எழுத்துகள் பெருமாளின் கோவிலிலும் இருக்கலாம். ஆராய்ச்சி முழுதுமாக நடந்ததா என்று தெரியாது. ஆனால் திருமலை தேவஸ்தானம் செய்யும் இலக்கியச் சேவைகளைக் காணும் போது அப்படி ஆய்வு நடக்காமல் இருக்குமா என்பது ஐயமே.
9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)
இது மகா சொத்தை வாதம். எத்தனையோ பெருமாள் கோவில்களில் திருமகள் மண்மகளுடன் பெருமாள் திருவருவம் இருக்கின்றது. அவையெல்லாம் வள்ளி தெய்வயானையுடன் இருக்கும் முருகப்பெருமான் திருவுருவமா?
10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.
அவதாரங்கள் நிறைய உண்டு. அவற்றில் பத்தை மட்டுமே சிறப்பாக தசாவதாரம் என்று சொல்கிறோம். கபிலர், ஹம்ஸம், வியாசர் என்று தசாவதாரக் கணக்கில் வராத அவதாரங்கள் நிறைய உண்டு. அதனால் இந்த வாதமும் ஏற்புடையது இல்லை.
11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.
(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).
தலவரலாறு என்பதால் அது ஆதாரபூர்வமானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஆனந்த ராமாயணம், துளசி ராமாயணம் போன்ற ராமாயணங்களில் மாயாசீதையான வேதவதி (சத்யவதி இல்லை) பற்றி இருக்கிறது.
12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாரியார் சுவாமிகள் மட்டும் இல்லை. பழைய இலக்கியங்களிலும் வேங்கடத்தில் முருகன் கோவில் இருந்ததாக குறிப்பு இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஆனால் அந்த கோவில் இந்தக் கோவில் தானா என்பதில் ஐயமுன்டு. பழைய தமிழ் இலக்கியங்களில் வேங்கடம் குறிப்பிடப்படும் போது அது பெருமாள் கோவிலாகத் தான் குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தைப் பார்க்கவும். நீங்கள் சொல்வது போல் மாற்றப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட மாற்றம் சிலப்பதிகாரத்திற்கும் மிக முற்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும்.
இன்றளவும் சிலர் குழம்பித் திரிந்து, குழப்பியும் திரிகிறார்கள்! அவர்களுக்கு இளங்கோவடிகள் பதில் சொல்கிறார் பாருங்கள்!
"பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"
திருவேங்கட மலையில் நிற்பவன் பெருமாளே!
தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளை குமுகப் பூச்சியினம் என்பர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவைதவிர பணிசெய்ய பெண் தேனீக்கள் 50,000-60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.
ஒரு தேனியிடம் பறவை கேட்டது.
“ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். காடு, மலைகள் என சுற்றித் திரிந்து பல வகைப் பூக்களிடமிருந்து சேகரித்து வந்து அடையில் கட்டிவைத்திருக்கும் தேனை மனிதர்கள் சர்வ சாதாரனமாக கவர்ந்து சென்று சாப்பிட்டு விடுகிறார்களே. இது உனக்கு வருத்தத்தை தரவில்லையா..,?
தேனி புன்னகையுடன் பதில் சொன்னது.
“இல்லை… இல்லவே இல்லை. மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை அவன் ஒரு போதும் என்னிடம் இருந்து திருட முடியாது.”
தினகரனில் வந்த ஒரு கதை'
ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட
பழைய சாதத்தின் சக்தி தெரியுமா?
நீங்க பழைய சாதம் சாப்பிட்டிருக்கிங்களா?
முந்தைய நாள் வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு பாருங்கள்! தேவாமிர்தமாக இருக்கும்.
சாதாரண சோற்றை விட சக்தி மிகுந்தது பழைய சாதம்.
நம் முன்னோர்கள் இந்த பழைய சோற்றை சாப்பிட்டுத்தான் வலிமையானவர்களாக இருந்தார்கள்.
‘இந்தப் பழய சாதத்தில் பி6, பி12 போன்ற ஏராளமான வைட்டமின்கள் இருக்கிறது’ என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள்.
பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பன்றிக் காச்சல் மட்டுமல்ல, எந்தக் காச்சலும் அணுகாது!,
உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணமாகும். சிறு குடலுக்கு நல்லது. அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாகும். இளமையாக இருப்பார்கள்
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால், சிறு குடலுக்கு நன்மை செயும் கோடிக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பழைய சாதத்தோடு இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செகிறது.
பழைய சாதம் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய உதவியாக இருக்கிறது.
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் இதை சாப்பிட வேண்டாம். ஏனென்றால், பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு இலகு வழி
1 .ஆறு சுவைகளையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் .
2 .இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
3 .சுவைத்துச் சாப்பிட வேண்டும் .
4 .உணவில் எச்சில் நன்றாகக் கலக்க வேண்டும் .
5 .உதட்டை மூடி மென்று சாப்பிட வேண்டும் .
6 .சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும் .
(கவனத்தைக் குவிக்க ,உதட்டை மூடும் போது கண்களையும் மூடலாம்) .
7 .பல்லால் அரைத்துச் சாப்பிட வேண்டும் .
8 .சாப்பிடமுன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும்,சாப்பிட்டபின் 30 நிமிடமும்
தண்ணீர் குடிக்கக் கூடாது .(ஒரு மிடறு பரவாயில்லை )
9 .tv பார்த்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
10 .புத்தகம் வாசித்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
11 .கதைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
12 .சம்மணங் கட்டி இருந்து சாப்பிட வேண்டும் .
13 .தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
14 .கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
15 .குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது .
சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
16 .இப்படியெல்லாம் சாப்பிடும் போது எதையும் சாப்பிடலாம் .
17 .அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள் .
ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம் .
18 .தண்ணீரைக் கொதிக்க வைத்தோ ,வடிகட்டியோ குடிக்கக் கூடாது .
19 .மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
20 .தாகத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் .
14/09/2014
Book fair ends on Sep-21..
Now clearance sale going on..
Get good books at 20% to 40% discount..
SRG kalyana mandabam,
Gandhiyadigal salai,
Kumbakonam
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Address
Kumbakonam
612001
Opening Hours
| Monday | 5pm - 10pm |
| Tuesday | 5pm - 10pm |
| Wednesday | 5pm - 10pm |
| Thursday | 5pm - 10pm |
| Friday | 5pm - 10pm |
| Saturday | 9am - 10pm |
| Sunday | 9am - 10pm |