22/09/2023
(கோவில்பட்டி) உசிலம்பட்டியில் ஒரு தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் வழக்கமான ஆய்வில், தேவைக்கு அதிகமான கையிருப்பு சமையல் செய்பவரிடம் இருக்கிறது. ஏன் உங்களிடம் அதிகம் இருக்கிறது என்று அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.
இந்த பள்ளியில் 15 மாணவர்களில் 12 மாணவர்களின் பெற்றோர்கள் நான் தலித் என்பதால் நான் சமைத்ததை சாப்பிட குழந்தைகளை அனுமதிப்பதில்லை. உங்க கிட்ட சாப்பிட்டா ஊரை விட்டு ஒதுக்கி வெச்சிடுவாங்க என்று குழந்தைகளே சொல்வதாக சொல்கிறார். அதனால் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே சமைக்கிறேன் என்கிறார்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கிராம மக்களிடம் பேசுகிறார். அமைச்சர் கீதா ஜீவன் நேரடியா பள்ளிக்கே போய் விசாரிக்கிறார். அமைச்சர், எம்.பி கனிமொழி அவர் சமைத்ததை ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். பெற்றோர்களிடம் பேசி, சில பேரை எச்சரித்து அதிகாரிகள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வருகிறார்கள்.
அரவக்குறிச்சியிலும் இதே போல ஒரு சம்பவம் நடக்கிறது. அதிகாரிகள் பேசுகிறார்கள், எச்சரிக்கிறார்கள். அதன் பிறகு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
இப்போ அப்படியே குஜராத்துக்கு செல்வோம்.
ஒரு ரேஷன் கடையில் தலித் ஊழியர் இருப்பதால் அந்த கிராம மக்கள் அங்கே பொருள் வாங்க மறுக்கிறார்கள். ஆட்சியர் அங்கு இருக்கிற மக்களுக்கு பக்கத்து கிராம கடைக்கு அவர்கள் ரேஷன் அட்டைகளை மாற்றி விடுகிறார். அந்த மக்களிடம் பேசவோ, எச்சரிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை
ஜாதியை ஒழித்துவிட்டோம் என்று இங்கே யாரும் claim செய்யல. ஆனால் அதை நோக்கி யார் உண்மையில் உழைக்கிறார்கள் ? இத்தனைக்கும் முதல் சம்பவத்தில் சமைக்கிற பெண் குற்றச்சாட்டே சொல்லவில்லை. ஆய்வின் போது அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை மூடி மறைத்துவிட்டு போக எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் ?
இப்படிப்பட்ட சம்பவங்களின் போது "திமுக ஜாதியை ஒழிச்ச லட்சணம்" என்று மீடியாக்களும் நீல சங்கிகளும் அரசின் நடவடிக்கையை பாராட்டாமல் நகையாடி கொண்டிருக்கிறார்கள்.
M. K. Stalin Udhayanidhi Stalin TRB Rajaa Kanimozhi Karunanidhi