09/10/2021
அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் வணக்கம்.!
கடந்த 6 வருடங்களாக மாணவர்களுக்காக கல்வி பணியினை சிறப்புற செயலாற்றி கொண்டு வருகிறது நமது தினக்கல்வி அமைப்பு. இதற்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் நன்றிகள்!!.
இந்த கல்விப்பணியானது இதோடு நின்று விடாது மேலும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களின் அடுத்த அடியை முன்னெடுக்கிறோம். இதுவரை மாணவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்து வந்த நமது தினக்கல்வி அமைப்பு தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தி www.dinakalvi.com என்ற வலைத்தளத்தினை தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம் மேலும் அதிகமான மாணவர்களுக்கு எங்களின் கல்வி சேவையை கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கோடு இந்த தளத்தினை தொடங்கியுள்ளோம்.
இந்த இணையதளத்தின் மூலம் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் நாங்கள் வழங்கும் கல்வி தகவல்கள் அனைத்தும் சிறிதும் குறையாமல் வழங்க முயற்சித்துள்ளோம். இந்த இணையதளத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாது பட்டதாரி இளைஞர்களும் பயன்பெறுவர்.
கல்வி தகவல்கள், உடனடி கல்வி செய்திகள், அனைத்து கல்லூரிகளின் தகவல்கள், பள்ளி படிப்பினை முடித்த பிறகு உள்ள பாடப்பிரிவுகளில் தகவல்கள், நுழைவுத்தேர்வுகளின் தகவல்கள், மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பற்றிய தகவல்கள், கல்வி உதவித்தொகைகளின் பற்றிய விபரங்கள் போன்ற அனைத்தும் மாணவர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் வலைத்தளம் நமது www.dinakalvi.com.
மாணவர்களின் பயனை தாண்டி பட்டதாரி இளைஞர்களுக்கும் பயனுள்ள வகையில் வேலைவாய்ப்பு செய்திகளையும் பதிவேற்றி வருகிறோம். மேலும் மாணவர்களின் திறன்கள், படைப்புகள், ஆகியவற்றினை வெளிக்கொண்டுவரும் ஒரு தளமாகவே www.dinakalvi.com இருக்கும்.
எங்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் முன்பு போலவே உங்களின் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.