PUPS Ruthirasolai

PUPS Ruthirasolai Panchayat Union Primary School, Ruthirasolai

27/09/2013

பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு
அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக
பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்வார்கள். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள பள்ளிக்கு கலந்தாய்வு மூலம் மாற்றப்படுவார்கள்.
ஆனால், கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில்,சமீப காலங்களில் இடமாறுதல் உத்தரவு விநோதமாக பிறப்பிக்கப்படுகிறது. இடம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர், தற்போது பணியாற்றும் பள்ளியிலும், இடமாறுதல் பெற்றுச் செல்லும் பள்ளியிலும் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.

ஒரு ஆசிரியர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு பள்ளியிலும் மூன்று நாட்கள் மற்றொரு பள்ளியிலும் பணியாற்ற உத்தரவு வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் மீது முழுமையான கவனம் செலுத்த முடியாது.

ஆசிரியர் பற்றாக்குறையால் தான், கள்ளர் சீரமைப்புத் துறை இந்த விநோத உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அண்ணாமலைப் பல்கலைஅண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடுசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொ...
25/09/2013

அண்ணாமலைப் பல்கலை

அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு
முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.

வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் விபரம்: பி.எல்.ஐ.எஸ்., எம்ஏ- பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், வரலாறு மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், டிரான்சிலேஷன் ஸ்டெடிஸ், ரூரல் மேனேஜ்மெண்ட், பிலாசபி, ரிலீஜியன் மற்றும் கல்சர், டெவலப்மெண்ட் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், எக்ஸ்டென்ஷன் மேனேஜ்மெண்ட், என்ஜிஒ மேனேஜ்மெண்ட், அஸ்டிராலஜி, ஹியுமன் ரைட்ஸ், எம்எல்ஐஎஸ்., எம்எஸ்சி- விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், அப்ளைடு சைக்காலஜி, எல்டிரானித் சயன்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஃப்.ஏ- டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி மற்றும் எம்.ஹெச்.சி., எம்.டான்ஸ்., எம்.மியுசிக்., எம்.காம்- கோஆப்பரேட்டிவ் மேனேஜ்மெண்ட், கம்யூட்டர் அப்பிளிகேஷன்ஸ், எஜுகேஷன் மேனேஜ்மெண்ட், என்டர்பிரனர்ஷிப்.

தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் தங்களின் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு குறுந்தகடு அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

25/09/2013

Headmaster : C.Arokkiadoss
Asst teacher : K. Brilliance

Address

Kattumannarkoil
608301

Telephone

+919655418168

Website

Alerts

Be the first to know and let us send you an email when PUPS Ruthirasolai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PUPS Ruthirasolai:

Shortcuts

Share