10/11/2025
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 08-11-2025 அன்று கரூர் அரசு மகளிர் கல்லூரியில் நடத்திய குழந்தைகள் அறிவியல் போட்டியில் ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் S.ரிதன்,M.அப்துல் பாரி ஆகியோர் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
07/10/2025
பள்ளபட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட கால்பந்து போட்டியில் ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளி மாணவர்கள் நான்காம் இடம் பெற்று சாதனை.
08/09/2025
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு(SGFI) நடத்திய கடலூர்,விழுப்புரம்,பெரம்பலூர்,அரியலூர் கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ளடக்கிய கடலூர் மண்டல அளவிலான கோகோ போட்டிக்கான 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் தேர்வில் *ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளி* ஒன்பதாம் வகுப்பு மாணவி *அஸ்மா* தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
23/08/2025
ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி விஷாலினி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்(JUST A MINUTE) மூன்றாம் இடம் பிடித்து சாதனை.
19/08/2025
மாவட்ட அளவிலான 14 வயதிற்குட்பட்ட வளையப்பந்து போட்டியில் ஹாஜி மீரா பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று சாதனை.
*ஒற்றையர் பிரிவு*
யாழினி ஸ்ரீ(எட்டாம் வகுப்பு)
*இரட்டையர் பிரிவு*
யாழினி ஸ்ரீ(எட்டாம் வகுப்பு) மற்றும் ஷாலினி( ஒன்பதாம் வகுப்பு)
19/08/2025
*ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி பள்ளி வரலாற்று சாதனை*
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெறும் வருவாய் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி இன்று கரூர் மார்னிங் ஸ்டார் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான இரட்டையர் பிரிவில் எமது பள்ளி மாணவிகள் R யுவஸ்ரீ, P விசாலினி இணை அரையிறுதியில் கரூர் குறுவட்டம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை அணியுடன் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் குளித்தலை குறுவட்டம் பஞ்சப்பட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளி அணியுடன் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஒற்றையர் பிரிவில் P விசாலினி இரண்டாம் இடமும்,
14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில் யாழினி ஸ்ரீ மற்றும் இரட்டையர் பிரிவில் யாழினி ஸ்ரீ,ஷாலினி ஆகிய மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
17/05/2025
கரூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய செந்தில் பாலாஜி அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்காக ஊக்கத் தொகையை இன்று(17-05-2025) ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளி மாணவி தீபனாவிற்கு வழங்கி கௌரவித்தார்.
16/05/2025
ஹாஜி மீரா பள்ளி மாணவி K.தீபனா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
100% தேர்ச்சி
தேர்வு எழுதிய 34 மாணவர்களில் 17 பேர் 400க்கு மேல் எடுத்து சாதனை.
19/03/2025
Please fill below form to register Drawing Competition
https://forms.gle/Ru1WDPyCrhkjiSQ19
11/01/2025
நேற்று(10-01-2025) கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் நமது பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் சஞ்சய் வசீகரக் கண்ணன் முதலிடம் பெற்று சாதனை.
-
ஹாஜி மீரா அகாடமி