09/09/2022
COVID-19 பெருந்தொற்றுக்கு முன் மாணவர்களின் தனித் திறன்களை வளர்ப்பதற்காக பள்ளிக்கு எட்டு சிறப்பாசிரியர்கள் வருகை புரிந்து பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்து வந்தனர். அனைத்தையும் பெரும் தொற்று முடக்கி போட்டு விட்டது. பள்ளி திறந்தபின் மீண்டும் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று ஓவிய வகுப்பினை தொடங்கியுள்ளவர் மூன்றாம் வகுப்பு மாணவன் தனுசித்திரனின் தந்தை திரு பிரகாஷ் அவர்கள் . இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஆகப் பணி புரிந்து வருகிறார்.
30/03/2022
ஸ்மார்ட் வகுப்பறைகள் காலத்தின் கட்டாயம்.நம் பள்ளியில் ஏற்கனவே இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கின்றன . அனைத்து வகுப்புகளுக்கும் நன்கொடையாளர்கள் உதவியுடன் புரஜெக்டர் கள் அமைக்கப்பட்டுள்ளன. புரஜெக்டர் அமைக்க முடியாத ஒரு வகுப்பறையில் 42 அங்குல LED TV பொருத்தப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைப்பதற்காக க. பரமத்தி யூனியன் வங்கியின் கிளை மேலாளரை அணுகினேன்.
வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்(CSR) இதற்கு தேவைப்படும் நிதியை வழங்குமாறு அவரைக் வேண்டிக்கொண்டேன். கிளை மேலாளர் தங்களது பிராந்திய அலுவலகத்தை உடனுக்குடன் தொடர்புகொண்டு மூன்றே நாட்களில் அதற்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்து கொடுத்தார். வங்கிகளுக்கு வருட இறுதி என்பது கடும் பணிச்சுமை. இருந்தபோதிலும் சிரமம் கருதாமல் செய்து கொடுத்தார்.அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் அவருக்கு இருக்கும் அக்கறை போற்றத்தக்கது. அவருக்கும் , வங்கி நிர்வாகத்திற்கும் பள்ளியின் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
12/02/2022
https://youtu.be/qjaP0IvqM8o
SCHOOL MANAGEMENT COMMITTEE ROLES & RESPONSIBILITIES
Our school SMC is one of the Model SMC 's in Tamilnadu. Twenty members work together and taken our school to a great height. I dedicate this documentary to a...
20/11/2019
விகடன் இணைய தளத்தில் இன்று
`விருதுகளைக் குவிக்கும் அரசுப் பள்ளி;ரூ.25 லட்சத்தை வாரி வழங்கிய கிராமம்!'- இது கரூர் மக்களின் ப
பாராட்டு விழாவுக்கு நடுவே மேஜிக் ஷோ, கலர்ஃபுல் நடனம் என்று தூள் கிளப்பிட்டாங்க. கிராம மக்கள் எங்க மீது வச்சுரு.....
14/07/2018
கரூர் புத்தகத் திருவிழாவில் முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதிய சிந்தித்த வேளையில் என்னும் நூலினை கரூர் PT Coach திரு.தங்கராசு ஐயா அவர்கள் வெளியிட்டு முதல் பிரதியை எனக்கு வழங்கினார்.
24/05/2018
அசோக் லேலண்ட் நிறுவனம் மற்றும் LEARNING LINKS FOUNDATION இணைந்து சென்னை , ஹோசூர் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மற்றும் லாரி ஓட்டுநர்கள் குழந்தைகள் அதிகம் படிக்கும் பள்ளிகளுக்கு பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமித்து ஊதியம் வழங்குவதுடன் கணித உபகரணப்பெட்டி அறிவியல் உபகரணப்பெட்டி இவற்றை வழங்குவதுடன் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கும் மகத்தான பணியினைச் செய்து வருகிறார்கள்.
மெல்லக் கற்கும் மாணவர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்றுவதுடன், பல்வேறு போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று தனித்திறன் மேம்பாட்டிலும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.
பள்ளிகள் இயங்காத கோடை விடுமுறை முழுவதும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி வகுப்பில் ஏற்கனவே நாமக்கல்லில் கலந்து கொண்டு ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.அதன் தொடர்ச்சியாக 21 ஆம் தேதி ஹோசூர் அசோக் லேலண்ட் MANAGEMENT DEVELOPMENT CENTRE ல் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும், 22 ஆம் தேதி சென்னை மீஞ்சூரில் 40 ஆசிரியரகளுக்கும் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்கள் மூலம் நம் பள்ளியில் செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் பெற்று வந்தேன்.
கரூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் என்னை அழைத்த அசோக் லேலண்ட் நிறுவனத்தினர் , LEARNING LINKS FOUNDATION ஆகியோருக்கு நன்றிகள்.
19/05/2018
அண்மையில் பள்ளிக்கு ஒரு வெளி நாட்டு விருந்தினர் . Mr. Mike Arnold from California. இவர் பள்ளிக்கு ஏற்கனவே 3KVA ups வழங்கிய Mak controls generator அசெம்பிளிங் நிறுவனத்தின் அமெரிக்க வாடிக்கையாளர். நிறுவனத்திற்கு போகும் போதும் வரும் போதும் பள்ளியை பார்த்துக் கொண்டே சென்றிருக்கிறார். நிறுவனத்தில் விசாரித்து மேலாளருடன் பள்ளிக்கு வந்தார்.
மாணவர்களுக்கு படிப்புடன் விளையாட்டும் அவசியம் தேவை என்றவர் ஜூலை மாதம் திரும்பி இந்தியா வரும் போது மிகச் சிறந்த விளையாட்டு மைதானம் அமைத்து தரப் போவதாக அறிவித்தார். அதில் விளையாட்டு உபகரணங்களுடன் சிற்பங்கள் ஓவியங்கள் என குழந்தைகளைக் கவரும் அனைத்து அம்சங்கள் இருக்கும் என்றார்.
முதன் முதலில் பள்ளிக்கு வெளி நாட்டு உதவி. வாழ்த்துக்கள் மைக் அர்னால்ட்.