21/07/2024
ICSE Tamil 10th STD.
social service
21/07/2024
21/07/2024
Karur Sri Ramakrishna Vidyalaya Higher Secondary School Kovakulam.krishnarayapuram
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம்
1. ஆ - பசு
2. ஈ - கொடு
3. ஊ - இறைச்சி
4. ஏ - அம்பு
5. ஐ - தலைவன்
6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
7. கா - சோலை
8. கூ - பூமி
9. கை - ஒழுக்கம்
10. கோ - அரசன்
11. சா - இறந்து போ
12. சீ - இகழ்ச்சி
13. சே - உயர்வு
14. சோ - மதில்
15. தா - கொடு
16. தீ - நெருப்பு
17. தூ - தூய்மை
18. தே - கடவுள்
19. தை - தைத்தல்
20. நா - நாவு
21. நீ - முன்னிலை ஒருமை
22. நே - அன்பு
23. நை - இழிவு
24. நோ - வறுமை
25. பா - பாடல்
26. பூ - மலர்
27. பே - மேகம்
28. பை - இளமை
29. போ - செல்
30. மா - மாமரம்
31. மீ - வான்
32. மூ - மூப்பு
33. மே - அன்பு
34. மை - அஞ்சனம்
35. மோ - முகத்தல்
36. யா - அகலம்
37. வா - அழைத்தல்
38. வீ - மலர்
39. வை - புல்
40. வௌ - கவர்
41. நொ - நோய்
42. து - உண்
19/02/2024
தமிழ் அறிவோம்
1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்
⭕WhatsApp புலனம்
⭕Youtube வலையொளி
⭕Instagram படவரி
⭕ We Chat அளாவி
⭕Messanger பற்றியம்
⭕Twtter கீச்சகம்
⭕Telegram தொலைவரி
⭕Skype காயலை
⭕Bluetooth ஊடலை
⭕WiFi அருகலை
⭕Hotspot பகிரலை
⭕Broadband ஆலலை
⭕Online இயங்கலை
⭕Offline முடக்கலை
⭕Thumbdrive விரலி
⭕Hard disk வன்தட்டு
⭕GPS தடங்காட்டி
⭕CCTV மறைகாணி
⭕OCR எழுத்துணரி
⭕LED ஒளிர்விமுனை
⭕3D முத்திரட்சி
⭕2D இருதிரட்சி
⭕Projector ஒளிவீச்சி
⭕Printer அச்சுப்பொறி
⭕Scanner வருடி
⭕Smart phone திறன்பேசி
⭕Simcard செறிவட்டை
⭕Charger மின்னூக்கி
⭕Digital எண்மின்
⭕Cyber மின்வெளி
⭕Router திசைவி
⭕Selfie தம் படம் - சுயஉரு
⭕Thumbnail சிறுபடம்
⭕Meme போன்மி
⭕Print Screen திரைப் பிடிப்பு
⭕Inkjet மைவீச்சு
⭕Laser சீரொளி.
Switch board சொடுக்கிப் பலகை
plug point ஆப்பு முனை சொருகித்தானம்
Charger மின்ஏற்றி
Sink மூழ்கு/பாத்திரம் கழுவும் இடம்
Gas stove எரிவாயு அடுப்பு
Lighter ஒளி ஏற்றி
Bulb குமிழ்விளக்கு/மின்விளக்கு
Switch சொடுக்கி
Ink pen மைஎழுதுகோல்
Pen எழுதுகோல்
Ball point pen பந்து முனை எழுதுகோல்
Pencil கரிக்கோல்
Scale அளவுகோல்/அளப்பான்
Table மிசைப்பலகை
Remote தொலைவில்/தான்இயக்கி
Fridge குளிர்ப் பதனப்பெட்டி
Aircooler காற்றுக் குளிர்வி
Washing machine மின் சலவை இயந்திரம்
Mixie மின் கலக்கி
Grinder மின் அரைத்தி/மின் அரவை இயந்திரம்/மாவு அரைப்பான்
Torch மின்கல விளக்கு/பசைமின்கலவிளக்கு/ஒளிவழங்கி
Sofa நீள்சாய்வு இருக்கை
Hall வரவேற்பறை/அறை
Balcony மாடம்
Wifi அருகலை
cupboard/Alamari -நிலைப் பேழை
Tie கழுத்துச் சுருக்கு
Id card அடையாள அட்டை
Trouser கால் சட்டை
Selfie தன் படம்/தாமி
Clip கவ்வி
Toothbrush பல்துலக்கி
Restroom ஒப்பனை அறை
Maintain.- தொடர்ந்து செயலாக்குவது
Fevicol - பசை
Cake - அணிச்சல்
Chocolate - இனிப்பு அச்சு/தீங்கட்டி.
Icecream பனிக்கூழ்
Biscuit - ஈரட்டி ( இரு புறமும் சுடுதல்)
Induction stove தூண்டல் அடுப்பு
Tiffin box சிற்றுண்டி பெட்டி
Snacks சிறுதீனி
Box பெட்டி
Bottle - குப்பி/குடுவை
Shampoo சிகை கழுவி
Shoe/sepal சப்பாத்துகள்.
Soup வடி சாறு
Tiles வனைஓடுகள்/மெருகு ஓடுகள்
Tubelight குழல் விளக்கு
Pant முழுக்கால் - சட்டை.
Trouser அரைக்கால் சட்டை
Shorts குட்டைக்கால் சட்டை
Leggings கால் குப்பாயம் / புட்டகம்
coat stand - சட்டை தாங்கி!
Belt- அரைக்கச்சை
Table- மிசைப்பலகை
Tablemat மிசைப்பலகை விரிப்பு.
Washbasin கழுவு தொட்டி
Stool இருக்கை
Inverter எதிர் மின்மாற்றி
Channel அலைவரிசை
Media ஊடகம்
Soap- வழலை கட்டி
அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் ..
" ழகரம் " காப்போம்
==================
தமிழின் சிறப்புகளில் ஒன்று " ழ " என்னும் எழுத்தாகும் . உலகின் பழமையான மொழிகளில்கூட இந்த ழகர ஒலிப்பு இல்லை . பிறமொழியினரால் சாியாக உச்சாிக்க இயலாத எழுத்து ழகரம் ஆகும் .
ஒரு சொல்லில் ழகர எழுத்து வந்திருந்தால் , அது தூய தமிழ்ச்சொல் என்று ஐயமின்றிக் கூறலாம் . குழல் , யாழ் ,
வாழ் , பாழ் , கூழ் , உழவு , இழவு , முழவு , பழகு , பழம் , கிழவன் , புழு , நிழல் , தழல் , தொழில் ,வாழ்க , ஒழிக முதலிய சொற்களெல்லாம் தூய தமிழ்ச் சொற்களே .
நுனிநாக்கு மேலே வளைந்து அண்ணத்தை வருட ழகரம் பிறக்கிறது .
ழகரம் படும்பாடு
=================
தற்காலத்தில் பேச்சு வழக்கில் இந்த ழகரம் படாதபாடு படுகிறது . சிலா் ழகரத்தை யகரமாக்கி ஒலிப்பா் . வாழைப்பழத்தை , வாயப்பயம் என்பா் . குழந்தையைக் கொய்ந்த என்பா் . கழுதையைக் கய்த
என்பா் . சென்னைத்தமிழில் ழகரத்தை சகரமாக்கிக் கூறுவதுண்டு . இழுத்துக் கொண்டு போனான் என்பதை இஸ்துகினு
போனான் என்பா் .
சிலா் எழுதும்போதும் ழகரம் வரவேண்டிய இடத்தில் ளகரத்தைப் பயன்படுத்துவா் . உழுந்து என்பதை உளுந்து என்று எழுதுவா் . குழறுபடி என்பதைக் குளறுபடி என்றும் , கொழுந்து என்பதைக் கொளுந்து என்றும் , சுழித்தான் என்பதைச் சுளித்தான் என்றும் எழுதுவா் .
ரகார ழகாரம் குற்று ஒற்று ஆகா
==============================
ர் ,ழ் ஆகிய இந்த இரண்டு மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்தை அடுத்து வாரா .
கா்நாடகம் , பா்வதம் , தா்மம் , நிா்வாகம் , மா்மம் , அா்ச்சனை , நா்மதா என்று எழுதுவது பிழை . இவற்றைக் கருநாடகம் , பருவதம் , தருமம் , நிருவாகம் , மருமம் , அருச்சனை , நருமதை என்றே
எழுத வேண்டும் . இதேபோல சா்க்கரை என்பதைச் சருக்கரை என்றும் , கா்ப்பம் என்பதைக் கருப்பம் என்றும் , வா்ணனை என்பதை வருணனை என்றே எழுத வேண்டும் .
தமிழ்மொழியில் குறிலை அடுத்து ழ் வராது . எழ் , பழ் , உழ் , தழ் , அழ் , குழ்
என்று சொற்கள் இல்லை . இச்சொற்கள் ஏழ் , பாழ் , ஊழ் , தாழ் , ஆழ் , சூழ் என்றுதான் வரும் .
ஈரொற்று உடனிலை
===================
நம் தமிழ் மொழியில் ய்,ர்,ழ் என்னும் மூன்று மெய்யெழுத்துக்களும் நிற்க , இவற்றுடன் க்,ச்,த்,ப்,ங்,ஞ்,ந்,ம் ஆகிய எட்டு மெய்யெழுத்துக்களும் சோ்ந்து வரும் .
வாழ்க்கை , சூழ்ச்சி , வாழ்த்து , காழ்ப்பு , பாழ்ங்கிணறு , பாழ்ஞ்சுனை , ஆழ்ந்து , வீழ்ம்படை என்று ழ் அடுத்து ஒற்றெழுத்துக்கள் வரும் .
தமிழ் மொழிக்கே உாிய ழகரத்தைப் பேசும்போதும் , எழுதும்போதும் பிழையின்றிக் கையாள்வதே தமிழுக்கு நாம் செய்யும் தொண்டாகும் .
22/04/2023
அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை குறிப்பு சட்டகம்
முன்னுரை
வனங்களும் வனவிலங்குகளும்
அபாய நிலையில் உள்ள சிற்றினங்கள்
வனவிலங்குகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்
முடிவுரை
முன்னுரை
ஆதிகால மனிதனின் வாழ்வியலானது விலங்குகள், காடுகளைச் சார்ந்தே இருந்தது. இவ்வுலகமானது மனிதர்களையும், உயிரினங்களையும் ஒன்றிணைத்து வாழும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தேவையான அளவில் மட்டும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். இதனால் வனவிலங்குகள் அழியாமல் நிலைத்து வந்தது.
ஆனால் இன்றைய மனித வாழ்க்கைமுறையோ இயந்திரமயமாகி விட்டது. வன விலங்குகள் மற்றும் காடுகளின் மதிப்பானது பலருக்கும் தெரியவில்லை.
அதிகரித்த சனத்தொகையாலும் அதிகரித்த மனிதத் தேவைகளாலும் காடுகள், விலங்குகள் அழிக்கப்படுகின்றன. இதனால் வனவிலங்கு பாதுகாப்பு என்பது அவசியமாகின்றது.
வன உயிரினங்கள் பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகள், அதனை எதிர்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வனங்களும் வனவிலங்குகளும்
உலகின் நிலைத் தன்மைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை வளங்களில் வனங்களும் ஒன்றாகும்.
உலகின் மிகப்பெரிய வனங்களான அமேசன் மற்றும் ஆபிரிக்க காடுகளில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் வாழ்கின்றன. இவற்றின் வாழ்விடங்களுக்கு வனங்கள் ஆதாரமாகத் திகழ்கின்றன.
விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றின் அழிவிற்கு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும். வன விலங்குகளும் வனமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தே உள்ளது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாகவே அழிந்துவிடும்.
அபாய நிலையில் உள்ள சிற்றினங்கள்
இன்று உலக அளவில் பல வனவிலங்குகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. அவற்றில் காண்டாமிருகம், திமிங்கலம், ஓநாய்கள், கழுகுகள் மற்றும், மழைக் காடுகளில் உள்ள சில பறவைகளும் அடங்குகின்றன.
சில விலங்குகள் அவற்றின் கொம்புகள், எலும்புகள் அல்லது அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்வதற்காகக் கொல்லப்படுகின்றன. பண்டைய காலங்களில் அரசர்கள் வன விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்.
அது போல் இன்றும் வனவிலங்குகள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் மிகவும் அழகான பறவைகளில் ஒன்றான மோனல் முற்றிலும் அழியும் நிலையை நெருங்கும் அளவு வேட்டையாடப்பட்டுவிட்டது.
இந்திய அரசாங்கத்தினால் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பு திட்டம், புலிகள் பாதுகாப்புத் திட்டம் முதலை வளர்ப்புத் திட்டம் என்பன அவற்றில் சிலவாகும்.
வனவிலங்குகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்
வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும். இன்று வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது.
இதனால் அரசாங்கம் வனவிலங்குகளைப் பாதுகாக்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் அமைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இங்கு விலங்குகள் நல்ல முறையில் வளர்க்கப்படுகின்றன.
நமது நாட்டில் சுமார் 500க்கு மேற்பட்ட சரணாலயங்கள் உள்ளன. வனவிலங்கு இழப்புக்கள் இப்போது அபாயகரமான நிலையை அடைந்துள்ளன. இப்பிரச்சினையை உயிர்ப்பன்மை அடிப்படையில் அணுக வேண்டும்.
முடிவுரை
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. எனவே இதனைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
வனவிலங்கு சட்டங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எனவே வனவிலங்குகளைப் பாதுகாத்து அதனை மிகப்பெரிய சொத்தாகக் கருதி வளம் மிகுந்த உலகைக் கட்டியெழுப்புவோம்.
Question : 1 (15 marks)
பழமொழிக் கதைகள் - தொகுப்பு 10 வகுப்பு ஐ.சி.எஸ்.சி மாணவர்களுக்க
பொதுத் தேர்வில் கேட்கப் படும் சில பழமொழிக் கதைகள் : (பல்வேறு இடத்திலிருந்து தொகுக்கப் பட்டது.)
1. தாய் சொல் தட்டாதே
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.
குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.
"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….
எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..
ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.
இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.
தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.
இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.
தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.
"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.
‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?
"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.
இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.
இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.
தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.
அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.
----------------------------------------------------------------------
2.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
இது ஒரு பழமொழி. வல்லவனுக்குக் கிடைக்கக் கூடிய சிறு துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாகச் சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது இந்தப் பழமொழியின் நேர் பொருள். இப்பொருளை உணர்த்துவதற்கான சூழல்களில் இந்தப் பழமொழி பயன்படுத்தப்படும். இந்தப் பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க. ஒரு மரத்தடியில் சீதை இராமனது மடியில் தலை சாய்ந்திருந்தாள். அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று துடித்தான்.
அவளது மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள். இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில் மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண் துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு பழமொழி ஆயிற்று.
---------------------------------------------------------------------
3 எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை
‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப் பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை - நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி
உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
---------------------------------------------------------------------
4. பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை ஆசை
சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.
அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.
இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.
இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்
இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்
வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்
இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்
மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.
---------------------------------------------------------------------
-5. ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’
சுழியா= சுழித்துக் கொண்டு
வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்
இழியாது = இறங்காது
ஒழிவது = நீங்க வேண்டும்.
தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.
ஆசை யாரை விட்டது?
ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.
திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!
உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.
கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.
திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.
ராமப்பன் கரையில் திருதிருவென முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.
ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;
ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்
---------------------------------------------------------------------
6. ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ
வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?
ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.
தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.
ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்
தங்கை சொன்னாள்,
“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.
அடுத்ததாக, அவள் பகன்றாள்,
“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”
இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,
“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”
தங்கை சொன்னாள்,
“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்
அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது
தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”
அக்காள் சொன்னாள்,
“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்
அப்போது திடீரென்று ஒரு சப்தம்
“சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
வா நாம் போவோம்– என்று.
உடனே அக்காள் கேட்டாள்,
‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’
அப்போது ஒரு குரல் ஒலித்தது,
“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.
இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்
அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.
இதுதான் “சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
----------------------------------------------------------------------
7. சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி –
இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.
ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!
ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.
முதல் காட்சி முடிந்தது;
இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:
சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்
அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.
இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.
இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.
அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.
இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.
காட்சி மூன்று:
அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;
அவன் சொன்னான்,
அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.
------------------------------------------------------------------------------------------------------------------------
8. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-
அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.
வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்; சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.
வீட்டில் தினமும் ரணகளம்தான்; த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன்றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்
அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;
ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.
‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’
அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.
நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர் ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.
‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.
காளி மொழிந்தாள்:
கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.
அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.
இதற்குள் அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்
இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.
ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!
‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’, என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.
வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.
அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.
அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.
அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா இளம் குமரி ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.
இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.
எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.
அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.
மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்
கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.
திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்
‘’கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்ணுக்கினியன கண்டேன்
ஊர் மக்கள் அனைவரும் வாரீர்
அரிய காட்சியைப் பாரீர்’’ —
என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.
அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.
ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------
9. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.
அவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.
பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன்? சீ! சீ! வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று ஊரே சிரித்தது.
வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.
10. சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்
காஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.
இரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.
ஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். அவன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
11. கதை கேட்ட நாயை ……………. அடி!
ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து ந
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Karur
639002