S D ARTS CLUB

CONDUCT DRAMA PROGRAME

[04/25/14]   நாடகம்

வருகின்ற 01-05-2014 வியாழக்கிழமை நான் எழுதி இயக்கும் புனித அருளானந்தர் கிறிஸ்தவ வரலாற்று நாடகம் குமரி நாடக தந்தை திரு இரணியல் கலைத்தோழன் அவர்களின் ஆசியோடு வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தில் இரவு 9-30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. வாருங்கள் தமிழ் நாடகம் பார்த்து மகிழுங்கள்.

Timeline Photos

[03/26/14]   காட்சி
இடம்: தெரு
அ.வகிப்போர்: செல்வா, தீபக், ரவுடி லிங்கம்
அமைப்பு: (செல்வா, தீபக் இருவரும் தனிமையில்)

செல்வா: டேய் தீபக், மணி பதினொண்ணு, இனிமே முஞ்சிறைக்கு போக பஸ்ஸே இல்ல, நாம நடந்துதான் போகணும்.

தீபக்: அதுதான் எனக்கும் பயமா இருக்கு, வெட்டுமணி தாண்டி சென்னித்தோட்டம் பக்கம் நிக்கிய புளியமரத்துக்க பின்னால குரைக்கிய நாய் சாடி வந்தா விரட்டி தள்ளுலாம், ஆனா ரவுடி லிங்கம் சாடிவந்தா எனக்க ஈரக்குல இணிஞ்சு தாளும்.

செல்வா: நீ அவன நேரில பாத்திருக்கிறியா?

தீபக்: நான் பார்த்திட்டில்ல..எனக்க பாட்டி சொல்லுவா….அவன் ஒரு பனைய்க கெளரம் உண்டாம், அவனுக்க ரெண்டு மீசையிலயும் செறுதுவ ஓணத்துக்கு ஊஞ்சல் கட்டி ஆடுவினுமாம், அவன் நடந்தா ஆறடி படுத்தா எட்டடியாம்

செல்வா: இதுக்க மேலயும் அவனப்பற்றி சொல்லி பேடிய கிளப்பீடாத,,,இவன் கேடி ஜோசப்ப காட்டிலும் கூடுன ரவுடியாத்தான் இருப்பான் போல இருக்கு, சரி வாறது போல காணுலாம் நமக்கு நடப்போம்….(சிறிது தூரம் நடக்கிறார்கள்) தம்பி சென்னித்தோட்டம் நெருங்கியாச்சி இனிமேதான் என்ன நடக்கப் போவுதுன்னு தெரியல்ல

லிங்கம்: (உள்ளேயிருந்து): (ரவுடி லிங்கத்தின் ஏரியாவுக்கு வந்துவிட்ட உங்களை வருக வருக என வரவேற்கிறேன்)

தீபக்: ஆஹா…மாட்டிகிட்டோமேடா, வெத்தல வெச்சி கூப்பிடுறதுக்கு பதிலா மயிக் செட் வெச்சு கூப்பிடுறது மாதிரியே கூப்பிடுறாரே…இதுக்கு முன்னால கட்சி மீட்டிங்குல பேசி பழகியிருப்பாரோ..

செல்வா: டேய்.. குரலு மட்டும் தான் வந்துது ஆள இன்னும் காணோம், ஒருவேள வெட்டுமணியில யிருந்து குரல் குடுத்திருப்பாரோ.. (ஒல்லியான தோற்றத்துடன் கடவா மீசை வைத்து லுங்கி கட்டி இடுப்பில் பட்டை பெல்ட் அணிந்து ரவுடி லிங்கம் வருகிறான்)

லிங்கம்: தம்பிகளா…எங்க போறீங்க…

தீபக்: போடா இங்கயிருந்து, (அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட லிங்கம் பின்னால் பொத்தென்று விழுகிறான்) நாங்களே ரவுடி ரங்கனக்கண்டு பயந்து போய் நிக்கறோம் இதுல தம்பி எங்க போறீங்கன்னு கேக்க வந்துட்டான்.

லிங்கம்: பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கே லிங்கம்,…ஒரு பொடிப்பயலுக்க தள்ள நம்மாளால சமாளிக்க முடியல, இதுல நான் ஒரு பெரிய ரவுடியின்னு ஊரயெல்லாம் பேச்சு…சரி சமாளிப்போம்..இவனுக எப்பிடி பயப்படுறாங்கன்னு இப்ப காட்டறேன், இப்ப இப்ப காட்டறேன். (லிங்கம் இடுப்பிலிருந்து கத்தியை உருவி பிடித்தபடி பக்கத்தில் வந்து)

லிங்கம்: தம்பிகளா…நான் யார்ன்னு தெரியுதா…

செல்வா: வெட்டுமணி முக்கில ராத்திரி பத்தரைக்குமேல அழுவின மீன வாங்கி கழுவி பறக்கி இந்த பிச்சாத்தியால அறுத்து குடுக்கிறவன் தானே நீ…

தீபக்: அழுவின மீன எதுக்கு பிச்சாத்தி கொண்டு அறுக்கணும், லேசா இழுத்தாலே பிஞ்சு கையில வருமே…பிச்சாத்தி வெச்சிருக்கியதெல்லாம் செரிதான் வசக்கேடில்லாத வெச்சா அப்பறம் உன் உடம்பில தான் காயம் படும் ஆமா சொல்லீட்டேன்.

லிங்கம்: நிறுத்துங்கடா…நான் தாண்டா இந்த ஊரே கண்டு பயப்படுற ரவுடி லிங்கம்.

செல்வா: போங்கண்ணே…சும்மா தமாஷ் பண்ணாதீங்க..

தீபக்: (சத்தமிட்டு சிரித்தவாறு) இவரு ரவுடி லிங்கமாம், ஹா.ஹா., இது மாதிரி எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க..

லிங்கம்: டேய் சொன்ன நம்புங்கடா…நான் தான் ரவுடி லிங்கம், இந்தா பாருங்க எங்க ரவுடி சங்கத்தில இருந்து எனக்கு கிடைச்சிருக்கிற ஐடண்டிபிகேசன் கார்டு இத பார்த்தாவாது நம்புங்கப்பா.. (லிங்கம் தோளில் தொங்கவிட்டிருக்கும் ஐ.டி கார்டை கழட்டி கொடுக்கிறான்)

தீபக்: டேய் உண்மைதாண்டேய் இவன் தான் ரவுடி லிங்கம். தெரியாம பேசிபுட்டோம் எங்கள மன்னிச்சிடுங்க…

லிங்கம்: கையில என்ன இருக்கு
செல்வா: பத்து விரல் இருக்கு
லிங்கம்: நான் அதக்கேட்கல, கையில பணம் எவ்வளவு வெச்சிருக்க..? தீபக்:(சிரிக்கிறான்)

லிங்கம்: எதுக்குடா சிரிக்கிற…?
தீபக்: இந்த ராத்திரி நேரத்துல எவனாவது கையில பணம் வெச்சிருப்பானா…? பர்ஸ்சில இல்லா வெச்சிருப்பான். ஹா.ஹா.ஹா

லிங்கம்: அப்ப உன் பர்ச குடு (தீபக் தன்னுடைய பர்சை குடுக்கிறான்

லிங்கம்: உள்ள என்ன இருக்கு
தீபக்: ரெண்டு அறை இருக்கு பின்ன போட்டோ வைக்க ஒரு தனி அறை இருக்கு

லிங்கம்: அடங் யூ பிளடி நான்சன் ஆப் த மென்சன் ஆப் த ஜாண்சன் ஆப் த பென்சன் ஆப் த வில்சன் (கை பிச்சில் சொல்லிவிட்டு மூச்சு வாங்குகிறான்)

செல்வா: ஏன் இப்பிடி மூச்சு வாங்கிறீங்க
லிங்கம் : நீங்க ரெண்டு பேரும் என் மூச்ச வாங்கிறீங்களேடா…

செல்வா: உங்க ரவுடி குரூப்பில நாங்களும் அப்பரண்டீஸ்சா சேரலாமா…

லிங்கம்: பார்த்தா அப்பிராணியளா இருக்கிறிய, நீங்க எதுக்கு அப்பரண்டீஸ் ஆகணும், சரி தம்பி உனக்கு இதுல விருப்பம் இருக்கா..?

தீபக்: ஆ இருக்கு நானும் உங்களுக்கு ஒத்தாசையா இருப்பேன்

லிங்க்ம்: ரெண்டு பேருக்கும் ஒத்த ஆசையா இருக்கே, நான் என்ன பண்ணுவேன், சரி சேர்த்துக்கிடியேன். தம்பியளா ஒரே களைப்பா இருக்கு காப்பிக்காடு வரை என்ன தூக்கிகிட்டு நடப்பியளா..

தீபக்: அதுவரைக்கும் எங்களால தூக்கமுடியாது, பக்கத்துல இருக்குற சுடுகாட்டுக்கு வேணுமுன்னா தூக்கிகிட்டு போறோம்.

லிங்கம்: வேண்டாம் நான் நடந்தே வர்றேன். திரை

[02/15/14]   18-02-14 செவ்வாய் பூட்டேற்றி ஆலய திருவிழாவில் நான் எழுதிய புனித அருளானந்தர் நாடகம் எஸ்.டி ஆர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெறவிருக்கிறது..வாங்க எல்லோரும்.

[01/22/14]   புனித அருளானந்தர் (நாடகம்)

இந்த வருடம் புனித அருளானந்தர் நாடகம் எழுதியுள்ளேன். வருகின்ற 18-02-2014 செவ்வாய்கிழமை பூட்டேற்றி ஆலய அரங்கத்தில் நடிக்கவிருக்கிறோம். யாருக்காவது நடிக்க ஆர்வம் இருந்தா கூப்பிடுங்க, வாய்ப்பு தருகிறோம். 9791820195

Want your school to be the top-listed School/college in Kanyakumari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


KILLIYOOR, CHADAYANKUZHI
Kanyakumari
619187
Other Education in Kanyakumari (show all)
Books Books
Amal Cottage, Fathimanagar
Kanyakumari, 629160

Towards aspiring for a new life worth living within this world and an eternal search to be with the Lord, our GOD

OAK International WLL OAK International WLL
Ramanputhoor Jn
Kanyakumari, 629001

Online Applications, Web Design & Development, Advertising, Branding, Printing, Signage, Exhibitions Stand Design & Production, Events Planning & Executing

DMIEC CIVIL Department DMIEC CIVIL Department
Kumarapuram Road, Aralvaimozhi
Kanyakumari, 629301

Jasha Brainobrain Jasha Brainobrain
"JUDSON GUEST INN" First Floor, Kanyakumari Road, Anjugramam
Kanyakumari, 629401

Skill development Programme for children from 4 to 14 years helping them to sharpen their innate skills like concentration, Memory, Listening skills, etc.,

Global Solution Global Solution
RAMANPUTHUR JN
Kanyakumari, 629004

GLOBAL SOLUTION MAKES YOUR DREAM OF DOCTOR TO BE TRUE IN WORLD RANKING UNIVERSITIES FEES FROM 1.7LAKHS */ ANNUM WCI/WHO RECOGNIZED UNIVERSIY

AVCE AVCE
Kanyakumari
Kanyakumari, 629 401

Annai Vailankanni College of Engineering (AVCE), AVK Nager, is a private, self-financing, co-educational Engineering college established in the year 2008 Web site : http://www.avce.edu.in News & events : http://blogs.avce.edu.in

Aarish Technology Aarish Technology
Kanyakumari, 629702

Computer Classes in Kanyakumari

ICTI Private LTD ICTI Private LTD
Arumanai
Kanyakumari, 629151

Trust Us We Guide 'U' To Fly

Dreamtech Nagercoil Dreamtech Nagercoil
No-46,2nd Floor, Court Road,Abivil Compound,Opp To SLB School
Kanyakumari, 629001

We are dreamtech now providing govt cirtificate as well as degree courses. civil and building architectural design interior design fashion design beautician 2d,3d animation graphic design

Vidya Arts and Sports Club Vidya Arts and Sports Club
THAUCKALY
Kanyakumari, 629166

this is about an arts and sports club

Brainy Bees Brainy Bees
2nd And 3rd Floor, Hi-Tech Complex, Main Rod Kaliakkavilai
Kanyakumari, 629153

To optimally utilize the available time of children, we provide various courses to nurture, develop & enhance those skills in which they keep interest.

Kids Oxford School - Kuzhithurai Kids Oxford School - Kuzhithurai
52, Kuzhithurai
Kanyakumari, 629163

A well disciplined institution with cool atmosphere..