PTVS Primary School

PTVS Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PTVS Primary School, Elementary School, Kanchipuram.

14/11/2020

❤️❤️❤️❤️❤️குழந்தைகளைப் போற்றுவோம்.
"குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்."🎉🎉🎉🎉

 #ஆசிரியர்தினம்🌹🌹🌹🌹🌹🌹🌹🙏 நாம் ஆசிரியர் பணியை அறவழியில் ஆற்றிடவும் ;  நம்  மெய் வழி உயிர் ஆற்றலுடன் கல்வியை மாணவர் மனதினில...
05/09/2020

#ஆசிரியர்தினம்
🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏 நாம் ஆசிரியர் பணியை அறவழியில் ஆற்றிடவும் ; நம் மெய் வழி உயிர் ஆற்றலுடன் கல்வியை மாணவர் மனதினில் புகட்டவும் இந்த நாள் நமக்கு புத்துயிர்ப்பு தருவதாக இருக்கிறது.

வகுப்பறை புனிதமான இடம் . புனிதத்தை போற்றுவோம்...

"கல்விசிறந்த தமிழ்நாடு" என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு வலு சேர்ப்போம். குழந்தைகளைப் போற்றுவோம்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமான கல்வியை வழங்குவோம்! அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்! 🙏
#அனைவருக்கும்வாழ்த்துகள்
-- சு.உஷாராணி@விடியலரசி. 5.8.2020.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

16/08/2020

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இந்திய விடுதலை நாள் வாழ்த்துகள்.

"இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டை கருத போகிறார்களா அல்லது நாட்டை விட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்க போகிறார்களா? இது எனக்கு தெரியாது. கட்சிகள் நாட்டை விட தங்கள்
மத கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது
சுதந்திரத்திற்கு இரண்டாவது முறை ஆபத்து என்பதுடன் என்றென்றைக்குமாக நமது சுதந்திரத்தை இழப்பது என்பது நிச்சயம். இந்த விளைவுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்."

#பாபாசாஹிப்டாக்டர்அம்பேத்கர் # அவர்கள் #1949நவம்பர்25 அன்று விடுத்த இந்த #எச்சரிக்கை #இன்றைய இந்திய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

74வது இந்திய சுதந்திர தினத்தில் இந்திய மக்களின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும் காத்திட உறுதி ஏற்போம்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

நாட்டின் 74 வந்து சுதந்திர தினம் அரசு வழிகாட்டலின் படி --15.08.2020 , சனிக்கிழமை -- நம்பள்ளியில் நன்முறையில் கொண்டாடப்பட...
16/08/2020

நாட்டின் 74 வந்து சுதந்திர தினம் அரசு வழிகாட்டலின் படி --15.08.2020 , சனிக்கிழமை -- நம்பள்ளியில் நன்முறையில் கொண்டாடப்பட்டது.

3.8.2020 அன்று மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டன. 7.8.2020 , 8.8.2020 ஆகிய இரு நாட்களில் 1 முதல் 5 வகுப...
07/08/2020

3.8.2020 அன்று மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டன.

7.8.2020 , 8.8.2020 ஆகிய இரு நாட்களில் 1 முதல் 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தலா சத்துணவுக்கான உலர் அரிசி 3 கிலோ மற்றும் 1.200 கி பருப்பும் வழங்கப்படுகிறது.

*📕📰 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு* குழந்தைகள் இவ்வாய்ப்...
15/07/2020

*📕📰 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு* குழந்தைகள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

11/04/2020
15/01/2019

12.1.19 அன்று தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி & மெட்ரிக் பள்ளி இணைந்து நிகழ்த்திய பொங்கல் விழாவில் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் நாட்டுப்புற நடனம்...

07/12/2018

"பாஷா சங்கம்"--பன்மொழி சங்கம் --சார்பாக 7 .12. 18 இன்று மணிப்புரி மொழியில் 5 வாக்கியங்கள் கற்றுக்கொள்ளப்பட்டது.

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதைக்காட்டிலும் .. குழந்தைகளைக் கொண்டாடுவோம். -- கவிக்கோ அப்துல் ரஹ்மான்.குழந்தைகள்  தினத்...
15/11/2018

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதைக்காட்டிலும் .. குழந்தைகளைக் கொண்டாடுவோம்.
-- கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

குழந்தைகள் தினத்தின் முற்பகலில் 5ம் வகுப்பு மாணவர்கள் உணவுத்திருவிழா ஏற்பாடு செய்து அவரவர் வீட்டிலிருந்து பல வகையான சத்துள்ள உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டுவந்து கொண்டாடினார்கள்.

மகிழ்வில் யான் பள்ளி மாணவர்கள் அனைவர்க்கும் இனிப்பும் உயர்ரக அரிசியில் காய்கறி புலவும் உருளை சிப்சும் வழங்கினேன். மனதால் அனைவரும் குதூகலம் உணர்ந்தோம்.

பிற்பகல் பெற்றோர்கள் ஆசிரியர் கூட்டம் . விழாவிற்கான காரணம் .. குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய & நடத்த வேண்டிய முறைகள் பற்றி கலந்துரையாடல்.

அடுத்து அரிமா சங்கத்துடன் இணைந்து விழா... வாய்பாடு எழுதப்பெற்ற திரைச்சீலை , #தந்தையைஇழந்து .. தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட #தாயையும்இழக்கப்போகும் 2 குழந்தைகளுக்குச் சீருடை , மாணவர்க்கான பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை அரிமா திரு உமாபதி அவர்கள் வழங்கினார்கள்.. மாணவர்களின் பேச்சு மற்றும் நடனத்துடன் குழந்தைகள் தினவிழா இனிது நிறைவுற்றது.

14/08/2018
ஆத்திச்சூடியை அழகாக பொருளுடன் ஒப்புவித்ததால்  ஆசிரியரால் முடிசூட்டப்பட்ட அன்பு ராணிகள் ராஜாக்கள். ஆம் இவர்கள் ரோசாக்கள்.
14/08/2018

ஆத்திச்சூடியை அழகாக பொருளுடன் ஒப்புவித்ததால் ஆசிரியரால் முடிசூட்டப்பட்ட அன்பு ராணிகள் ராஜாக்கள். ஆம் இவர்கள் ரோசாக்கள்.

Address

Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTVS Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share