தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு

  • Home
  • India
  • Kanchipuram
  • தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு

தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு, Education, Kanchipuram.

"மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா"?மனித உடலின் ‘ஸ்டெம் செல்’[Stem Cell - 'an undifferentiated cell of a multicel...
12/03/2016

"மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா"?

மனித உடலின் ‘ஸ்டெம் செல்’[Stem Cell - 'an undifferentiated cell of a multicellular organism that is capable of giving rise to indefinitely more cells of the same type, and from which certain other kinds of cell arise by differentiation.
Each of the stem cells then divided into two cells - a stem cell and a nerve cell...']களைக் கையாள்வதில் முழு வெற்றி கண்டால், ஆயிரம் ஆண்டுகள் என்ன அதற்கு மேலும் வாழ்ந்து காட்டலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்!

நம் விரல் துண்டானால் திரும்ப வளர்கிறதா? இல்லை. ஆனால், ஒரு பூவரச மரத்தையோ வேப்ப மரத்தையோ வெட்டினாலும் அது துளிர்த்துவிடுகிறது. ரோஜாச் செடியைப் பதியன் போட்டால் அதிலிருந்து புதிய செடி முளைக்கிறது.

இந்த அதிசயம் நிகழ்வதற்குக் காரணம் தாவரங்களின் ‘ஸ்டெம் செல்’தானாம்.

தாவரங்களைப் பொருத்தவரை, புதிய புதிய செல்கள் உருவாவதும் அழிவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் தாய் அணுக்களுக்கு[?] எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லையாம். இது, தாவர ஸ்டெம் செல்களுக்குரிய தனிச் சிறப்பு.

மனிதர்களின் கண் செல்கள் மற்றும் தோல் செல்களை வெளியே எடுத்து, தாவரங்களின் ஸ்டெம் செல் டெக்னாலஜியைப் பயன்படுத்தி வளரவைக்க முடியுமா என்று ஆராய்ந்து வெற்றி கண்டிருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். இதன் விளைவாக..........

ஆரோக்கியமான கண்ணிலிருந்து ஸ்டெம் செல்லை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில், ரசாயன திரவத்தில் வைத்து வளர்த்து, அது நன்கு வளர்ந்ததும்..........

மனிதனின் பார்வை இழந்த கண் செல் நீக்கப்பட்டு. வளர்க்கப்பட்ட செல் அங்கே பொருத்தப்பட்டால் பார்வை கிடைக்கும் என்று நம்புகிறார்களாம் விஞ்ஞானிகள்.

தீ விபத்தில் தோல் பாதிக்கப்பட்டால், இதே முறையில் அதைப் புதுப்பிக்க முடியுமாம்; இவ்வாறே, சேதமடைந்த எந்தவொரு உறுப்பையும் புதுப்பித்தல் சாத்தியம் என்கிறார்கள்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இதையெல்லாம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டார்களாம் விஞ்ஞானிகள். ஆயுளை நீட்டிப்பதற்கான ஆய்வில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்களாம்.

முதுமை ஏன் வருகிறது?

பார்வை அணுக்களின் வீரியம் குறைந்தால்...சுவை அணுக்களின் வீரியம் குறைந்தால்...இப்படி, உடலின் எல்லா அணுக்களின் வீரியமும் குறைந்தால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டு நாம் முதுமை எய்துகிறோம்.

அறுபது வயதான ஓர் ஆளின் எல்லா அணுக்களும் வீரியம் குறைந்து அவர் உடம்பு வத்தலும் தொத்தலுமாக இருக்கையில், நலிந்துபோன அத்தனை அணுக்களையும் தூக்கி வெளியே கடாசிவிட்டு, புதிய செல்களை உடம்பு பூராவும் நிரப்பிவிட்டால், அந்தக் கிழவர் 30 வயது இளைஞனாக மாறிவிடுவார்.

அந்த மாற்று அணுக்களுடன் சுமார் 30 ஆண்டுகளை ஓட்டினால், அவற்றின் வீரியமும் குறைந்துவிடும். இந்நிலையில் மீண்டும் செல் மாற்றம் நிகழ்த்தப்பட்டால், கிழவனாக மாறிய அவர் மீண்டும் இளைஞர் ஆவார். இப்படித் திரும்பத் திரும்ப, செல் மாற்றம் செய்வதன் மூலம் அவரால் ஆயிரம் ஆண்டுகளோ அவற்றிற்கும் மேலோ வாழ்ந்துவிட முடியுமாம்.

ஆனால்...ஆனால் என்ன.........

எல்லாம் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளன. வெற்றிக்கோட்டைத் தொடுவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லி அசடு வழிகிறார்களாம் விஞ்ஞானிகள்!

" #தில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக்"இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதி...
12/03/2016

" #தில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக்"

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதிகம் பயம்படுத்தும் தளமாக விளங்குகிறது. ஒரே ஒரு குறைபாடு மட்டும்தான் அந்தத் தளத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை தடுத்துவருகிறது. அது- 'சர்ச்' ஆப்ஷன். இதை களையவும் திட்டங்கள் வகுத்து வருகிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் தன் கிளை நிறுவனங்கள் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தாமல் அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கிறது.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒக்குலஸ் போன்றவை எல்லாம் தத்தமது தனித்திறமைகளோடு விளங்குகின்றன.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.

கூகுள் தன் கிளை நிறுவனங்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சித்து வரும் வேளையில் அதற்கு நேர்மாறான பாதையில் நடை போடுகிறது ஃபேஸ்புக்.

இப்படி ஒரே குடையின் கீழ் நிறுவனங்களை கொண்டுவரும்போது வெளிப்பார்வைக்கு கூகுள் டெக் உலகின் அரசன் போல காட்சியளித்தாலும் நிஜம் அதுவல்ல.

ஃபேஸ்புக்தான் டெக் உலகின் ரியல் சாம்ராட். ஃபேஸ்புக்கில் பயனாளிகள் தாங்களாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்கிறார்கள்.

இதனால் கூகுளை விட பயனாளிகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.

கூகுளின் வசம் ஒரு சமூக வலைதளம் கூட இல்லாத நிலையில் ஃபேஸ்புக் மெல்ல மெல்ல கூகுளின் பிரம்மாண்டத்தை அரிக்கத் தொடங்கியிருக்கிறது.
2005-ல் ஆண்ட்ராய்ட் என்ற ஸ்டார்ட் அப்பை மட்டும் வாங்காமல் போயிருந்தால் நாம் இன்று பார்க்கும் கூகுள் வேறுமாதிரி இருந்திருக்கும்.
ஜிமெயில்தான் கூகுளின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை.

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வசதி அது.
ஜிமெயிலின் மூலம் கூகுளின் பிற பலங்களான மேப், காலண்டர், டாக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும். தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை 12 பில்லியன் பயனாளிகளை சென்று சேர்ந்திருக்கிறது கூகுள்.

ஆனால் இந்த எண்ணிக்கையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் ஆறே ஆண்டுகளில் எட்டிவிட்டது.

கடந்த மாதம் தன் ஒரு டாலர் சந்தா முறையை கைவிட்டது வாட்ஸ் அப். இப்போது தன் பயனாளிகளை வாட்ஸ் அப் மூலம் வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தூண்டுகிறது. ஜிமெயிலில் வரும் சம்பந்தமேயில்லாத பெரிய பெரிய வர்த்தக மெயில்களுக்கு எல்லாம் இனி வேலை இல்லை. க்ரியேட்டிவிட்டிக்கு தான் இனி இடம் இங்கே.

நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தத் தொடங்கும் காலம் தூரத்தில் இல்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் இன்னொரு வசதி நாம் அனுப்பிய தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இதுவும் வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஃபேஸ்புக் மெசஞ்சரும் இந்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படும். அதனால் வாட்ஸ் அப், மெசஞ்சர், ஸ்லாக் ஆகியவற்றுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறுகிறது ஜிமெயில்.

வைனை விட இன்ஸ்டாகிராமிற்கு அதிக பயனாளிகள் இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் அந்த தளம் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
எளிமையான ஒரு தளம் என்பதால் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் இன்ஸ்டாவுக்கே. அது போக, ஃபேஸ்புக்கின் துணையும் இருக்கிறது. இந்தக் காரணங்களால் வைனிலிருந்து இன்ஸ்டாகிராமிற்கு மாறி வருகிறது இளைய தலைமுறை.

ஐ-போனில் தன் சர்ச் பாரை தக்க வைக்க கூகுள், 1 பில்லியன் டாலர் தந்தது நினைவிருக்கிறதா? காரணம், ஆப்பிள் பயனாளிகளை கவர்வதுதான்.
அதேபோல் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராம் படங்களை பயன்படுத்த ட்விட்டருக்கு பணம் தரவேண்டும். இதன்மூலம் ஸ்னாப்சாட் செயலி மட்டுமே களத்தில் போட்டிக்கு நிற்கும். (ஸ்னாப்சாட்டை முடக்க ஃபேஸ்புக் கொண்டுவந்த ஸ்லிங்சாட் வெற்றி பெறவில்லை) கூகுளின் வர்த்தக பலங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கிற்கும் உள்ளது.
சொல்லப்போனால் கூகுளால் செய்ய முடியாதவை எல்லாம் ஃபேஸ்புக்கால் செய்யமுடியும்.
ஆல்பபெட்டின் வேலையே வருமானத்தை பெருக்குவதுதான் என்பதால் ஃபேஸ்புக் வேகம் எடுப்பதை தவிர்க்க முடியாது.
மெசஞ்சர் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் முறையில் செயல்படுவதால் வீசாட் செயலிக்கு போட்டியாக விளங்குகிறது.
இப்போதே நீங்கள் மெசஞ்சர் மூலம் உபேர் டாக்ஸி புக் செய்யலாம்.
சில குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ளலாம். இதிலிருந்தே ஃபேஸ்புக் கூகுளை குறி வைப்பதை புரிந்து கொள்ளலாம்.
மெசஞ்சர் கூகுள் சர்ச்சை விட இன்னும் துல்லியமானதாக இருக்கும். தேவையற்ற பக்கங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும்.
உங்கள் தேடுதலை எளிமையாக்கி உதவி செய்ய ஒரு டிஜிட்டல் அசிஸ்டென்ட்டும் செயல்படும்.
ஆனால் கூகுள் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர இந்த வசதிகள் எல்லாம் பத்தாது. மளிகை சாமான்கள் வாங்க, போக்குவரத்துகளை ஏற்பாடு செய்ய என அனைத்திற்கும் மெசஞ்சர் பயன்பட்டால் எப்படி இருக்கும்?
இதற்கெல்லாம் ஃபேஸ்புக் நிறைய உழைக்க வேண்டும்.
ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் நோக்கமே இதுதான். WWW என்பதை மாற்றி தன் ஆதிக்கத்தை செலுத்தம் முயற்சிதான் இது.
இணையத்தின் ராஜாவாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறது பேஸ்புக் .
செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள், படங்கள், மெசேஜ்கள் என அனைத்தும் தன் வழியே மட்டும் தான் மக்களின் பார்வைக்கு வரவேண்டும்,தர வேண்டும் என விரும்புகிறது.

வாவ் : இலவச மொபைல் இன்டர்நெட்..!ஓபேரா (Opera) நிறுவனம் தனது 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 20 இந்திய நகரங்களுக்க...
22/08/2015

வாவ் : இலவச மொபைல் இன்டர்நெட்..!

ஓபேரா (Opera) நிறுவனம் தனது 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 20 இந்திய நகரங்களுக்கு இலவசமாக மொபைல் இன்டர்நெட் வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது..!

பெரும்பாலும் அனைத்து மக்களிடமும் மொபைல் இருந்தும்கூட, அதிகம் பேர் இன்டர்நெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள், அப்படியானோர்களை நிச்சயம் இந்த இலவச மொபைல் இன்டர்நெட் திட்டம் சென்றடையும் என்று ஓபேரா நிறுவனம் நம்புகிறது. மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..!

#இலவச வைபை : 'வாவ்' (WOW) அதாவ,து வெப் ஆன் வீல்ஸ் (Web on Wheels) என்ற திட்டத்தின் கீழ், 20 இந்திய நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வசதியை வழங்க உள்ளது ஓபேரா..!

#வைபை கார் : அடுத்த 10 மாதங்களில் ஓபேராவின் இலவச வைபை வழங்கும் கார் ஆனது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க இருக்கிறது..!

#வாவ் கார் : இலவச வைபை வழங்கும் ஓபேரா காரின் பெயர் - வாவ் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

#பயணம் : இந்த வாவ் கார் ஆனது ஒவ்வொரு இந்திய நகரங்களின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் பயணிக்க இருக்கிறது..!

#வைபை செட்டிங் : இந்த வாவ் காரின் இலவச வைபை வசதியை பெற முதலில் உங்கள் மொபைலின் வைபை செட்டிங்கை ஆன் செய்ய வேண்டும்.

#செலக்ட் : பின் வயர்லெஸ் நெட்வர்க் (Wireless Network) மூலம் 'ஓபேரா மினி ஃப்ரீ வைபை'யை செலக்ட் செய்ய வேண்டும்.

ப்ளாக்போன் 2 : முன்பதிவு துவக்கம்..!இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ளாக்போன் 2 கருவியானது முன்பதிவுகளுக...
22/08/2015

ப்ளாக்போன் 2 : முன்பதிவு துவக்கம்..!

இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ளாக்போன் 2 கருவியானது முன்பதிவுகளுக்கு தயார் நிலையில் இருப்பதோடு அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் வெளியாகவில்லை.
ரூ. 8000 பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

ப்ளாக்போன் 2 விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்தியாவில் இதன் விலை ரூ.41,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த கருவியில் சைலன்ட் ஓஎஸ் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 64 பிட் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஈ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் 3060 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

முன்பு வெளியான கருவியில் ப்ரைவேட் ஓஎஸ் வழங்கப்பட்டிருந்ததோடு செக்யூர் அழைப்புகளை மேற்கொள்வது, என்க்ரிப்டெட் மெசேஜ் மற்றும் ஃபைல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!உங்களுக்கு உள் நீச்சல், வெளி நீச்சல், அவ்வளவு ஏன் ஆழ்கடல் நீச...
22/08/2015

நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!

உங்களுக்கு உள் நீச்சல், வெளி நீச்சல், அவ்வளவு ஏன் ஆழ்கடல் நீச்சலே தெரிந்திருந்தாலும் கூட இந்த 25 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த நீங்கள் நிச்சயமாக கொஞ்சம் யோசிப்பீர்கள், அதற்கு காரணம் நீச்சல் குளத்தின் ஆழாமோ அல்லது நீளமோ இல்லை - நீச்சல் குளத்தின் உயரம்..!

ஆமாம், சுமார் 35 மீட்டர் உயரத்தில், இரண்டு 10 அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு நடுவே, ஒரு பாலத்தினை போல் ஒரு நீச்சல் குளத்தை கட்ட திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது - ஏக்கர்ஸ்லே ஓ'கல்லகன் (Eckersley O'Callaghan) தொழில்நிறுவனம்.

இந்து பிரிட்டனில் உள்ள எம்பஸ்ஸி கார்டனில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நீச்சல் குளம் 'டிரான்ஸ்பரன்ட் ஸ்விம்மிங் பூல்' என்பதும் குறிப்பிடத்தக்கது, இதற்காக கண்ணாடியை பயன்படுத்தாது, மிகவும் பலமான 'டிரான்ஸ்பரன்ட் அக்ரிலிக்' (Transparent acrylic) என்ற ஒரு விதமான பிளாஸ்டிக் மூலம் கட்டமைக்கப்பட இருக்கிறது. இது 2019- ஆம் ஆண்டு கோடைக்குள் கட்டி முடிக்கப்பட இருக்கிறதாம்..!

பட்ஜெட் விலையில் உயர் ரக ஸ்மார்ட்போன் வெளியீடு...! #இன்டெக்ஸ் நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட்போனினை ரூ.6,999க்கு இந்தியாவில்...
11/08/2015

பட்ஜெட் விலையில் உயர் ரக ஸ்மார்ட்போன் வெளியீடு...!

#இன்டெக்ஸ் நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட்போனினை ரூ.6,999க்கு இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் க்ளவுட் பேஸ் பிரத்யேகமாக ஷாப்க்ளூஸ் தளத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் கையில் கூகுள்..!! சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 540*960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருப்பதோடு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஷாக் அடிக்கும் ஃபேஸ்புக் தகவல்கள்..! 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 1700 எம்ஏஎச் பேட்டரி மூலம் 180 மணி நேர ஸ்டான்ட்பை நேரமும் 5 மணி நேர டாக்டைமும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹேப்பி ரம்ஜான்' ஸ்டிக்கர்ஸ்..! திருவிழா - என்ற வார்த்தையை சொல்லும்போதே புன்னகையும், மகிழ்ச்சியும் தானாக வெளிவரும்..! எந...
17/07/2015

'ஹேப்பி ரம்ஜான்' ஸ்டிக்கர்ஸ்..!

திருவிழா - என்ற வார்த்தையை சொல்லும்போதே புன்னகையும், மகிழ்ச்சியும் தானாக வெளிவரும்..! எந்த துயரத்தையும், கடினமான நாட்களையும் மறக்கடித்து, மாற்றக்கூடிய வலிமை திருவிழாக்களுக்கு உண்டு..!
சின்ன சின்ன வீட்டு விஷேஷங்களும் பெரிதாக கொண்டாடபடுவதற்கு காரணமும் அதுதான்.

மனிதர்கள் வாழ்வை கொண்டாட வேண்டும் - அது தான் திருநாள்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

சின்ன சின்ன விழாக்களையே பெரிதாக கொண்டாடும் இந்தியர்கள், மாபெரும் திருநாள்களை கொண்டாடும் விதத்தை பற்றி சொல்லவே வேண்டாம். முக்கியமாக ரமலான் போன்ற புனித திருநாளை, நோன்பிருந்து
மிகுந்த இறையான்மை கொண்டு கொண்டாடுவார்கள்..!
வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!
அதை மனதிற்க்கொண்டு, நாளை கொண்டாடப்பட இருக்கும் ரமலான் திருநாளையொட்டி, பிரபல குறுந்தகுவல் ஆப் ஆன வீ சாட், ரமலான் வாழ்த்துக்கள் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

நிம்மதியாக தூங்க இந்த 'செயலி' போதும்..!மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத இரு விஷயங்கள் உணவு மற்றும் உறக்கம் தான். சத்தான உண...
17/07/2015

நிம்மதியாக தூங்க இந்த 'செயலி' போதும்..!

மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத இரு விஷயங்கள் உணவு மற்றும் உறக்கம் தான். சத்தான உணவு மற்றும் சரியான தூக்கம் மனிதனை நோயின்றி வாழ வழி வகுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என பழமொழியை இன்று பின்பற்றுவது மிகவும் சிரமமான காரியமாகி விட்டது.

கலியுகத்தில் மனிதன் தன் வேலைகளை சுலபமாக்கும் கையடக்க கருவிகளுக்கு அடிமையாகி வரும் நிலையில் யாரும் தங்களது உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் செயலி தான் 'ஸ்லீப் பீஸ்ஃபுல்லி' (Sleep Peacefully).

சந்தையில் புதிதாக வெளியாகியிருக்கும் இந்த செயலி இரவு நேரங்களில் பயனாளிகளின் மொபைல் போனினை சைலன்ட் மோடில் வைத்து விடும். இதை தொடர்ந்து பயனர்களுக்கு அழைப்புகள் வந்தால் அழைப்பவருக்கு குறிப்பிட்ட மொபைலில் இருந்து மொபைல் சைலன்ட் மோடில் இருப்பதை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும்.

இது போன்ற நேரங்களில் ஏதேனும் அவசரம் என்றால் அழைப்புகளை மேற்கொள்பவர் பதிலுக்கு 'URGENT' என குறிப்பிட்ட குறுந்தகவலை அனுப்பினால் உடனடியாக இந்த செயலி எச்சரிக்கை செய்யும். இதோடு இல்லாமல் அதிகாலையில் அலாரம் போன்று சரியான நேரத்தில் பயனர்களை சத்தம் மூலம் எழுப்பவும் செய்யும். இந்த செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

https://www.facebook.com/Palavagaisuvarasiyangal

ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமிசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது பெயரில் புதிய கருவிகளை தொடர்ந்து வெளியி...
16/07/2015

ரூ.2000க்கு ஸ்மார்ட் ஷூ வெளியிட்டது சியோமி

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது பெயரில் புதிய கருவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது ஸ்மார்ட் ஷூ. லி-நிங் நிறுவனத்துடன் இணைந்து சியோமி புதிய ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்திருக்கின்றது.

சியோமி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் இதன் பெயர் லி-நிங் என்றே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை இந்தியாவில் ரூ.2,036 மற்றும் ரூ.4,083 என்று நிர்ணயக்கப்பட்டுள்ளன.

இந்த இரு ஷூக்களிலும் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் புதிய ப்ளூடூத் சிப், மிலிட்டரி கிரேடு மோஷன் சென்சார் சிப் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் குறைந்தது ஒர் ஆண்டு வரையேனும் ஒழுங்காக வேலை செய்யும்.

இந்த ஷூக்கள் வாட்டர் ப்ரூஃப், வியர்வை ப்ரூஃப் என்பதோடு அழுத்தங்களை தாங்க கூடியது. இவை நடக்கும் தூரத்தை ட்ராக் செய்து உடலில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிடும். லி-நிங் ஸ்மார்ட் ஷூ விற்பனை ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு உலகளவில் வெளியாகும் தேதி தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/Palavagaisuvarasiyangal

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்..!பெரிய ரக விமான மார்க்கெட்டில் கோ...
16/07/2015

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்..!

பெரிய ரக விமான மார்க்கெட்டில் கோலோய்ச்சும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் மார்க்கெட்டை உடைக்க ஐரோப்பாவை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் எடுத்துக் கொண்ட சிரத்தையில் உருவானதுதான் ஏர்பஸ் ஏ380 விமானம்.
சொகுசையும், இடவசதியிலும் வழங்குவதில் நிகரில்லாத அம்சங்களுடன் இந்த விமானத்தின் வடிவமைப்புப் பணிகளை 1985ம் ஆண்டு துவங்கியது ஏர்பஸ். 1990களில் உலகின் மிகப்பெரிய இந்த இரண்டடுக்கு விமானத்தை தயாரிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டது.
இந்த விமானம் முதல்முறையாக பறந்து முதல் தசாப்தத்தை பூர்த்தி செய்திருக்கும் இவ்வேளையில், இந்த இரண்டடுக்கு விமானத்தில் பயணிப்பதை கனவாக கொண்டிருப்பவர்களுக்காக

https://www.facebook.com/Palavagaisuvarasiyangal/

வாங்கினா இந்த கீ போர்ட் தான் வாங்கணும், ஐ யம் வெயிட்டிங்..!கலை நயமும், தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்தால் எந்த மாதிரியான ச...
10/07/2015

வாங்கினா இந்த கீ போர்ட் தான் வாங்கணும், ஐ யம் வெயிட்டிங்..!

கலை நயமும், தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்தால் எந்த மாதிரியான சுவாரசியங்கள் நிகழும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன, அதில் ஒன்றுதான் இந்த கீ போர்டியோ மாடல் 01..!

இதுவரை நீங்கள் பார்த்த கீ போர்ட்களிலேயே மிகவும் அழகான, விசித்திரமான கீ போர்ட் இதுவாகத்தான் இருக்கும். காலம் காலமாக ஒரே டைப்பிங் முறையை, கலாசாரம் போல பின்பற்றி வந்த காரணத்தால், நாம் கீ போர்ட்களை பற்றி அதிகம் சுவாரசியம் கொள்வதில்லை. ஆனாலும், இதைப் பார்த்த பின்பு தானாக சுவாரசியம் நம்மை தொற்றிக்கொள்ளும்.

இது ஒரு தொழில் நுட்பம் உலகிள் சாதனை படைகும் வாட்ச் தொலைபேசியகும்  (watch phone). ஒரு மொபைல் போன் அடிப்படை செயல்பாடுகள...
13/06/2015

இது ஒரு தொழில் நுட்பம் உலகிள் சாதனை படைகும் வாட்ச் தொலைபேசியகும் (watch phone).

ஒரு மொபைல் போன் அடிப்படை செயல்பாடுகளை கொண்டு வரும் ஒரு நவீன கையடக்க வாட்ச் தொலைபேசி (watch phone). அதை நீங்கள் தொடர்பு வழி எளிமைப்படுத்த
வேண்டும் என்பது தான், இப்போது இந்த புதிய தொழில்நுட்பத்தின் நொக்கம். ஒரு செல் போனின் அனைத்து அடிப்படை அம்சங்களும் வைக்கிறது ஒரு வாட்ச், அது ஒரு உயர் வரையறை காட்சி (high-definition display), எம்பி 3 ரிங் டோன்கள் (MP3 ring tones), ஆடியோ தொனும் (audio tone) உள்ளது, அது மல்டிமீடியா மெசேஜிங் (multimedia message) ஆதரிக்கிறது, மற்றும் பல வசதிகலை கொண்டு உள்ளது இந்த கையடக்க வாட்ச் தொலைபேசி. இது தகவல் தொழில்நுட்பத்தில் இந்த முன்னேற்றம், செல் போன்கள் வாட்ச் போன்கள் மூலம் மாற்றப்படும் என்றால் என்னை வியக்க செய்கிறது. செல் போன்கள் அனைத்து நேரம் சுமந்து வெறுக்கிறவர் சிலர் இருந்தால், இது ஒரு சிறந்த தேர்வாகும், நீங்கள் எளிதாக குரைந்த அதிர்வை (vibration) வைத்து கொல்லலாம் இந்த கையடக்க வாட்ச் தொலைபேசியில் மற்றும் உங்கள் நீல பல் (bluetooth) அதை இணைக்க முடியாது. நான் உங்களுக்கு உரிதி அழைக்கிறேன் எந்த வணிக அல்லது முக்கியமான அழைப்புகள் வந்தாலும் இந்த கையடக்க வாட்ச் தொலைபேசி பயன்படுத்துவதநால எந்த அழைப்புகலையும் இழக்க மாட்டிர்கள் என்று நான் உத்தரவாதம் தருகிரென்.

Address

Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category