27/05/2026
சிலம்பத்தில் புதுமைகளை புகுத்தி பழமை மாறாமல் சாதனை படைக்கும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் இரண்டாவது "சவால் தொடர் "(CHALLENGER SERIES) சிலம்ப போட்டிகள் 23.05.2026 சனிக்கிழமைமற்றும் 24.05.2026.ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் சோழங்கநல்லூர் ஸ்ரீஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நாண்கு அணிகள் பங்கேற்ற நிலையில் இவ்வாண்டு ஆறு அணிகள் பங்கேற்றது. முதல்நாள் பிற்பகல் ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வரும், லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் இயக்குனருமான திரு R.சீனிவாசன்.B SC. B ED. அவர்கள் தலைமையேற்க பள்ளியின் மேல்நிலை முதல்வர் திருமதி ,ரேவதி பிள்ளை, மற்றும் பள்ளியின் நிர்வாக மேலாளர் திரு,பத்மநாபன் ஆகியோர் இனைந்து வெற்றி கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.
இருநாட்களும் சுமார் 145 போட்டிகள் தனித்திறமைகள் மற்றும் நேரடி போட்டிகள் விரு,விருப்பாக நடந்து முடிந்தன.
24.05.2026.மாலை சுமார் 6.15மணிக்கு பரிசளிப்பு விழா சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆலோசகருமான திரு,க.தேசிங்.M A.M.L
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதன்மை முதல்வரும்,சிலம்ப பயிற்சி பள்ளியின் இயக்குனருமான திரு R.சீனிவாசன் B SC. B ED. அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றதுடன் 50 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் இயக்குனராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் , பல சாதனைகளை வரும் காலங்களிலும் படைக்கும் நிலை உருவாகும் என்றும் அதற்கு உறுதுணையாக உள்ள ஆசான் பெருமக்களை வாழ்த்தியதோடு அல்லாமல், இங்கே வருகை தந்துள்ள ஆசான்களில் பெரும்பகுதியினர் எமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் மகிழ்கிறது என்றும்,விரைவில் புதிய அரசினை சந்தித்து சிலம்பத்திற்கான சட்டதிட்டங்களை வகுத்து ,புதிய விடியலை நோக்கி செல்ல அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழ்நாடு விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் திரு,அகத்தியா அ.ஞானபண்டிதன் அவர்கள் தனது வாழ்த்துரையில் யாரும் எண்ணிப்பார்க்காத இந்த நிகழ்வினை அமைத்து சிறப்புமிகு சிலம்ப போட்டியினை நடத்தியது மிகவும் சிறப்பானதாகும் .துவக்கத்தில் சிலம்பத்திற்கு சட்ட திட்டங்கள் வகுத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த மேடையில் நின்று கூறுவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. புதிய அரசிற்கு இந்த விழாவின் மூலமாக ஒரு கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன், இப்போது நடக்கும் சிலம்ப போட்டிகள் அனைத்தும் சரியான சட்டதிட்டங்கள் இல்லாமல் நடத்தப்படுவது வேதனையானதாகும். முறையான சட்டதிட்டங்களை வகுத்திட நமது தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரை விரைவில் சந்தித்து மனு கொடுக்கப்படும் என்றும் அதற்கு ,நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து களமாட வேண்டும் என கூறியதோடு அல்லாமல் .கலந்து கொண்ட அணிகளுக்கு வாழ்த்துக்கள் என்றார்.விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் திருமதி, நந்தினி வெங்கடேசன் அவர்கள் ,புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆசான் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பங்கேற்ற ""கென்சிங் தீவர்ஸ் ""அணிக்கு தனது பொற்கரங்களால் வெற்றி கோப்பையை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது வாழ்த்துரையில் கடந்த முப்பது ஆண்டுகளாக எங்களோடு இனைந்து பயணிக்கும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளிக்கு வாழ்த்துக்கள் என்றும்,வெற்றி தோல்வி என்பதை ஒன்றாக பாவிக்க வேண்டும் என்றும்,விளையாட்டு என்பது நமது உடலை வலுப்பெறச் செய்திடும் அதனால், அனைவரும் விளையாட்டில் கலந்து கொண்டு உங்களை செம்மை படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் தனது உரையில்
கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,லிங்கம் சிலம்ப பயிற்சி பள்ளியின் ஆலோசகருமான திரு ,க.தேசிங் M A.M L. அவர்கள் தனது நிறைவுரையில் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பெயர் ,கடந்த காலங்களில் பொதிகை தொலைக்காட்சி மாநில, அகில இந்திய போட்டிகளை ஒலிபரப்பு செய்ததால் கடல் கடந்தும் கொண்டு செல்லப்பட்டது என்றார். இரு நாட்களாக இங்கே வித்யாசமான சிலம்ப போட்டிகள் நடைபெற்று ,நிறைவு பெற்றுள்ளது. கலந்து கொண்ட ஆறு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் .இது துவக்கம் தான் நாம் செல்ல வேண்டிய இலக்கு வெகு தூரம். முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர்.அவர்கள் நன்கு சிலம்பம் அறிந்தவர். இன்றைய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு, ஜோசப் விஜய் அவர்களுக்கும் சிலம்பம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
விரைவில் முதல்வரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து நமது கோரிக்கைகளை அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வோம். களம் கண்ட ஆறு அணிகளான டாக்டர் கார்த்திகேயன் அவர்களை உரிமையாளராக கொண்டு இயங்கிடும் கென்சிங் தீவர்ஸ் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த ஆசான் த.கார்த்திக் அவர்கள் உரிமையாளராக கொண்டு இயங்கும் சாம்பியன் நைட்ஸ் அணிக்கும், ஏனைய அணிகளான ஆசான் ,தயாநிதி அவர்கள் உரிமையாளராக கொண்டு இயங்கும் ரைசிங் சன் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் ஆசான் முரளி கிருஷ்ணன் அவர்களை உரிமையாளராக கொண்டு இயங்கும் பயர் வாரியர்ஸ் அணிக்கும் ,ஆசான் சிகாமணி அவர்களை உரிமையாளராக கொண்டு இயங்கும் சார்ஜிங் புல்ஸ் அணிக்கும், ஆசான் மகேஸ்வரன் அவர்களை உரிமையாளராக கொண்டு இயங்கிடும் ராகிங் ராபிடர்ஸ் அணிக்கும்,இவர்களோடு இணைந்து களம் கண்ட துனை உரிமையாளர்களுக்கும், அனியினை தலைமை யேற்று வழி நடத்திய தலைவர்களுக்கும் ,சிறப்பாக போட்டியை நடத்தி கொடுத்த பொறியாளர்கள்,நடுவர் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,போட்டியில் கலந்து கொண்ட இருபால் மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி சார்பாக வாழ்த்துவதாகவும் கூறினார்.
விழாவில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தின் முன்னால் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு ,மாணிக்கவேல் அவர்கள் பங்கேற்றது சிறப்பானதாகும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சரித்திர சாதனை படைக்கும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::