29/01/2026
பல்லவப் பேரரசின் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்து,
போதிதர்மரும் மாமல்லர்களும் உலவிய
புகழ் வாய்ந்த மாமல்லபுரம் —
மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை தலைமையகம்,
பெருந்தமிழன் அரங்கில்
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மகிழ்வான தருணம் நிகழ்ந்தது.
77-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு,
மேற்கு கடற்கரை மாநிலமான கோவாவில் —
பண்டிட் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில்,
ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற
தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சிலம்பப் போட்டியில்,
சர்வதேச ஆசான் தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு கலைக்கூடத்தில் பயிலும்
சாலவாக்கம் ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்,
கலைக்கூடத்தின் போட்டி இயக்குனர் ஆசான் ரோஷன் அவர்களின் தலைமையில்
கோவா சென்று,
சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று
வெற்றிக் கோப்பை, பதக்கங்கள் 🏅 மற்றும் சான்றிதழ்கள் பெற்று
சாதனை படைத்துள்ளனர்.
மேலும்,
2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள
நேபாள் – தாய்லாந்து – மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெறும்
சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனுமதியையும்,
அரசு சலுகைகள் பெறுவதற்கான பரிந்துரை கடிதத்தையும்
பெற்று வந்துள்ளனர் என்பது
மிகுந்த பெருமிதம் தரும் செய்தியாகும்.
இந்தச் சிறப்பான வெற்றியை முன்னிட்டு,
ஆசான் தற்காப்புக் கலைக்கூடத்தின் சார்பில்,
வெற்றி பெற்ற மாணவர்களை
நமது கலைக்கூடத்தின் தலைமைப் புரவலரும்,
சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைவரும்,
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
ஷி ஷிஃபூ மல்லை சி.ஏ. சத்யா மாஸ்டர் அவர்களும்,
கலைக்கூடத்தின் நிறுவனரும்,
சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தேசிய செயலாளரும்,
திராவிட வெற்றிக் கழகத்தின் மாநில விளையாட்டு மேம்பாட்டுக் குழு தலைவருமான
மாமல்லன் ஷி ஷிஃபூ அசோக்குமார் அவர்களும்
மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இங்கனம்,
ஷி ஷிஃபூ A. சந்தோஷ் குமார் ஆசான்
நட்சத்திர பயிற்சியாளர் – மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை
செயலாளர் -
ஆசான் தற்காப்பு கலைக்கூடம்