Koothakudi

Koothakudi Hi friends koothakudi government H S school :) Lovely friends ...g
(1)

30/10/2018

MOTIVATIONAL QUOTE

Don't watch the clock, do what it does, keep going.
~ Sam Levenson ~

Please remember to your friends and family and in your facebook and whatsapp group.





Happy new year 💐💐
31/12/2016

Happy new year 💐💐

21/12/2016
29/06/2016
27/06/2016

Hi friends how are you

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயு...
28/07/2015

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.இன்று மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள ஐபிஎம் கல்வி நிறுவணத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார்.பிறகு மருத்துவமணயைில் சேர்க்கப்பட்ட கலாம் நம்மை விட்டு மறைந்தார்.இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.பிறப்பு:1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.இளமைப் பருவம்:அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர்தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.கல்லூரி வாழ்க்கை:தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில்படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.விருதுகள்:1981 – பத்ம பூஷன்1990 – பத்ம விபூஷன்1997 – பாரத ரத்னா1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது1998 – வீர் சவர்கார் விருது2000 – ராமானுஜன் விருது2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்2007 – கிங் சார்லஸ்-II பட்டம்2008 – பொறியியல் டாக்டர் பட்டம்2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது2009 – ஹூவர் மெடல்2010 – பொறியியல் டாக்டர் பட்டம்2012 – சட்டங்களின் டாக்டர்2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருதுஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தைஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

08/04/2014

22 - 26 வயது...,
ஆண்களுக்கு மிகவும்
கடினமான வயது.
1) உங்கள் காதலிக்கு திருமணம்
ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள்.
அதற்குள்,பெரியவர்களின்
பார்வையெல்லாம் "
இதெல்லாம் எங்க
உறுப்படப்போது?"
என்பது போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம்,
அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக்
கொள்ளத் தயங்குவார்கள்.உ
ங்களுக்கு வயதாகி விட்டது போல்
எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும் ரசிப்பீர்கள். 5)
உடல் பருமன் ஏறாம , நீங்கள்
விரும்பிய அனைத்தையும்
உங்களால் சாப்பிட முடியாது.
6) தினமும் shave
செய்யாவிட்டால்,
வாலில்லா குரங்கைப் போல்
இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில்
விளையாடும் கிரிக்கெட்
மேட்ச் க்கு உங்களை கூப்பிட
உங்கள் தெரு இளவட்டங்கள்
மறந்து விடுவார்கள்.
8. உறவினர் வீடுகளுக்குச்
சென்றாலோ , சுப
நிகழ்ச்சிகளுக்க
ு சென்றாலோ அத்தைமார்கலெல்ல
ாம் எப்போது திருமணம்
என்பார்கள்? மாமாக்களோ உன்
career பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க
என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான
அத்தனை தன்னம்பிக்கையும்
உங்களிடம் நிறைந்திருக்கும
்.ஆனால் சாதிப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும் குறைவாக
இருக்கும்.
10) இந்த உலகைப்
பற்றி உங்களுக்கு பள்ளிகளில்
என்னக் கற்பிக்கப் பட்டதோ,
அது அத்தனையும்
ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்க
ும்.
11) வேலைக்காக எழுதும்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற
பின்னர் கூட ,
வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன்
வேலை கிடைக்கும்.இங்க
ு எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள்
உண்டு என்பீர்கள். காதலை விட
நட்புச்
சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில்
இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத
நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத்
தான் எதிர்க்கொள்ளப்
போகிறோம் என்று சற்றும்
எதிர்பார்க்காத
ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்.
# எந்த அளவுக்கு துல்லியமாய்
எழுதி இருக்கிறேன் என்றுத்
தெரியாது. இதைப்
படிக்கையில் நீங்கள்
மகிழ்ச்சி அடைந்தால்
பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Address

Main Rode
Kallakurichi
606202

Telephone

+919003324961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koothakudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category