17/08/2026
🇮🇳🌷 அல்-அஸ்ஹர் கல்விக் குழுமத்தில் 80-வது சுதந்திர தின விழா – சிறப்புச் செய்தி 🌷🇮🇳
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு 🤲
கடையநல்லூர்:
அல்-அஸ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்விக் குழுமத்தில் 80-வது சுதந்திர தின விழா தேசப்பற்று, ஒற்றுமை, நல்லொழுக்கம் மற்றும் உற்சாகத்துடன் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 🇮🇳✨
🌷 விழாவிற்கு முன்னிலை வகித்தவர்
ஜனாப் N. K. M. காதர் அலி அவர்கள்
பள்ளித் தாளாளர்
🌷 சிறப்பு விருந்தினர்
ஜனாப் S. H.சாகுல் ஹமீது அவர்கள் Trustee -Al-Azhar Educational and charitable Trust
🌷 கௌரவ விருந்தினர்
ஜனாப் M. A. அப்சர்உசேன்அவர்கள்
Chairman Al-Azhar Educational and charitable trust
🌷 மேலாளர்
ஜனாப் S. M. திப்பு சுல்தான் அவர்கள்
🌷 விழா ஒருங்கிணைப்பு
முதல்வர் திருமதி ருக்கையா பீவி அவர்கள்
🌟ஜனாப் கனி அவர்கள்
போக்குவரத்து துறை தலைவர் அவர்கள் Al-Azhar Education
🇮🇳✨ விழா நிகழ்வுகள் ✨🇮🇳
விழா சிறப்பான அணிவகுப்புடன் (March Past) தொடங்கியது.
தொடர்ந்து,
⭐ VIII வகுப்பு மாணவர் அஸிம்
⭐ VII வகுப்பு மாணவர் அப்ரார் ஹபீஸ்
ஆகியோர் இனிய முறையில் கிராஅத் ஓதி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
🌷 நிகழ்ச்சித் தொகுப்பு
⭐ XII வகுப்பு மாணவி அம்ருசியா
⭐ XII வகுப்பு மாணவி சப்ரின்
ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை அழகாகவும் சிறப்பாகவும் தொகுத்து வழங்கினர்.
தொடர்ந்து வரவேற்புரை வழங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.
பின்னர் சிறப்பு விருந்தினர் ஜனாப் S. H.சாகுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். குறிப்பாக “சுதந்திரம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். .
🏆🌟 100% தேர்ச்சிக்கான ஆசிரியர் விருது 🌟🏆
பள்ளியின் மேல்நிலை வகுப்புகளில் மாணவர்களை 100% தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களின் சிறப்பான கல்விப் பணியைப் பாராட்டும் வகையில், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 👏🌷
🎓🏆 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் 🏆🎓
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களின் சிறப்பான கல்விச் சாதனையைப் பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 🥇🥈🥉
இது மாணவர்களின் கல்விச் சாதனையையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் அமைந்தது.
🌹 சிறப்பு கௌரவிப்பு 🌹
விழாவின் சிறப்பு நிகழ்வாக ஜனாப் M. A. அப்சர் உசேன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு ஜனாப் S. M. திப்பு சுல்தான் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர் ஜனாப் S. H.
சாகுல் ஹமீது அவர்களையும், பள்ளித் தாளாளர் ஜனாப் N. K. M. காதர் அலி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 🌷
🎭🇮🇳 மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் 🇮🇳🎭
மங்களபுரம், ரஹ்மானியாபுரம் மற்றும் புளியமுக்கு கிளைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர்.
⭐ 🇮🇳 தேசியக் கொடி நடனம்
⭐ 🎤 சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுகள்
⭐ 🎶 தேசப்பற்றுப் பாடல்கள்
⭐ 📝 கவிதைகள்
⭐ 🌸 பாரம்பரிய நிகழ்ச்சி
⭐ 🎭 மைம்
⭐ 🌷 கோலாட்டம்
⭐ 💪 குச்சிப் பயிற்சி
⭐ 🏋️ டம்பல் நிகழ்ச்சி
⭐ 🔺 பிரமிட்
⭐ 🥋 சிலம்பம்
⭐ 👏 கை அசைவு நிகழ்ச்சி
உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மேலும் மாணவர்கள்,
⭐ அபாதி பானு பேகம்
⭐ மௌலானா அபுல் கலாம் ஆசாத்
⭐ பேகம் அனிஸ் கித்வாய்
⭐ பேகம் ஹஸ்ரத் மஹால்
⭐ ஹஜாரா பேகம்
உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகள் குறித்து உரையாற்றினர்.
🌟 சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்கள் 🌟
⭐ V வகுப்பு மாணவர் A. ஆபித் – சுதந்திரம் குறித்த உரை
⭐ V வகுப்பு மாணவர் சக்தி திருவேஷ் – சுதந்திரக் கவிதை
⭐ VIII வகுப்பு மாணவர் சகீன் – மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பற்றியசிறப்புரை
⭐ VII வகுப்பு மாணவர் முகம்மது இர்ஷான் – தேசப்பற்றுக் கவிதை
மாணவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்கள் உற்சாகமாகக் கைதட்டி பாராட்டினர். 👏🌷
📣🌿 மாணவிகளின் விழிப்புணர்வு கோஷங்கள் 🌿📣
விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக மாணவிகள் உற்சாகத்துடன் சமூக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
⭐ “மதம் வேறு; மனிதம் ஒன்று!” 🤝
⭐ “வேளாண்மையைப் பாதுகாப்போம்!” 🌾
⭐ “சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!” 🌱
என்ற முழக்கங்களை எழுப்பி, மத நல்லிணக்கம், மனிதநேயம், வேளாண்மை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
🌹 நிறைவு 🌹
விழாவின் நிறைவாக தமிழாசிரியர் மணிமேகலை நன்றியுரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அல்லாஹ்வின் அருளால், தேசப்பற்று, ஒற்றுமை, மனிதநேயம், நல்லொழுக்கம், கல்விச் சாதனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மாணவர்களின் உள்ளங்களில் விதைக்கும் வகையில் இவ்விழா சிறப்பாக அமைந்தது.
🤲 அல்ஹம்துலில்லாஹ்!
🇮🇳🌷 “ஒற்றுமையே நமது பலம்; இந்தியாவே நமது பெருமை!” 🌷🇮🇳
அல்-அஸ்ஹர் கல்விக் குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳✨