Met - Iklas Ias Academy - Kdnl

Met - Iklas Ias Academy - Kdnl We Provide Training for UPSC Exam (IAS / IPS / IFS) and Guidance to TNPSC, TN Police, TN Forest Exam

கடையநல்லூர் KEF IAS Academy  திறப்பு விழா மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா.மத்திய மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் ...
26/12/2022

கடையநல்லூர் KEF IAS Academy திறப்பு விழா மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா.

மத்திய மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கும் நோக்கில் KEF IAS Academy என்ற பெயரில் கத்தார் கடையநல்லூர் அசோசியேஷன் (QKA) ஒத்துழைப்புடன் கடையநல்லூரில் 25/12/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:15 மணிக்கு புதிய பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் எஜுகேஷன் ஃபாரம்-ன் தலைவர் M.A.ஹூசைன் ஆசிரியர் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார்கள். பயிற்சி மையத்தின் கல்வி ஆலேசகர் I.ஷேக் பரீத் ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கு ஊத்துமலை கிராம நிர்வாக அலுவலர் M.ஹக்கீம் , சங்கரன்கோவில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் M.ஷமீர், அம்பாசமுத்திரம் முதன்மை கூட்டுறவு ஆடிட்டர் N.D.சபியுல்லாஹ்,
தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் S.M.முகம்மது அனீஸ், மற்றும் ஜவஹர் மௌலான சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.

நவீன பயிற்சி மையத்தை கத்தார் கடையநல்லூர் அஷோசியேஷன் (QKA) தலைவர் ஜனாப். S.M. ஜலாலுத்தீன் அவர்கள் ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்கள். மேலும் அய்யாபுரம் பள்ளியின் தலைமை இமாமின் பிராத்தனையுடன் பயிற்சிமையம் இனிதே துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த வரலாற்று ஆசிரியர் மற்றும் தமிழ் இலக்கிய எழுத்தாளர் ஜனாப். சேயன் இப்றாஹிம் அவர்கள் அரசு வேலைவாய்ப்பின் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். மற்றொரு சிறப்பு விருந்தினரான நியூ பிரின்ஸ் மருத்துவமனையின் மக்கள் மருத்துவர் சஞ்சீவி அவர்கள் கலந்து கொண்டு கல்வியும் மருத்துவமும் இன்றியமையா தேவை என்பதை எடுத்துரைத்தார்கள்.

KEF IAS Acadamy யின் கடந்த கால சாதனைகளான TNPSC Group 2 முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற 13 மாணவ மாணவிகளுக்கும்,TET தேர்வில் வெற்றி பெற்ற 15 மாணவிகளுக்கும் பாராட்டு பத்திரம் கத்தார் கடையநல்லூர் அஷோசியேசன் (QKA) யின் சார்பாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் கல்வியிலும் , போட்டி தேர்விலும், விளையாட்டுப் போட்டிகளிலும் , அறிவியல் கண்காட்சி போட்டிகளிலும், கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நமதூரை சார்ந்த விஸ்டம் மேல் நிலைப்பள்ளி, எவரெஸ்ட் மேல் நிலைப்பள்ளி, தாருஸ்ஸலாம் மேல் நிலைப்பள்ளி, பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி மற்றும் அல் அஸ்ஹர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நினைவு கோப்பை கத்தார் கடையநல்லூர் அஷோசியேஷன் (QKA) சார்பாக வழங்கி மாணவர்களை மென்மேலும் சாதனை புரிய ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முக்கியஸ்தர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தப்பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் MET IKLAS IAS Academy-ன் நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்து கொடுத்தனர்.

மேலும் கத்தார் கடையநல்லூர் அஷோசியேஷன் (QKA) மற்றும் MET - IKLAS IAS ACADEMY யின் செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.

இறுதியாக பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

06/08/2022

Address

PULIYAMUKKU Junction
Kadayanallur
627751

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918825658383

Alerts

Be the first to know and let us send you an email when Met - Iklas Ias Academy - Kdnl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Met - Iklas Ias Academy - Kdnl:

Shortcuts

Share