11/04/2025
இன்று(11-04-2025) வெள்ளிக்கிழமை காலை,ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியின், பட்டமளிப்பு விழா,மின்னியல் துறை தலைவர் S.ஷம்யா அவர்கள் வரவேற்புரையில், கல்லூரி தலைவர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தலைமையில்,கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் S.மணிவண்ணன் அவர்கள்,கல்லூரி துணைத் தலைவர் Dr மாலதி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதில்,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் விழாப் பேருரையாற்றி,மாணவ, மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பட்டயம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் S.பாலமுருகன் அவர்கள் பட்டயபடிப்பு உறுதிமொழி வாசித்தார்.
இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள்,கழக நிர்வாகிகள்,பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.