Bishop Roche Higher Secondary School, Idindakarai

Bishop Roche Higher Secondary School, Idindakarai "உன்மையும் அன்பும்"

அன்புள்ள  இடிந்தகரை மக்களுக்கும் நமது ஊரின் வளர்ச்சிக்காக இயங்கும் ஊர்க்கமிட்டி. கப்பல் மாலுமிகள் சங்கத்திற்கும் இடீந்தக...
30/04/2026

அன்புள்ள

இடிந்தகரை மக்களுக்கும்
நமது ஊரின் வளர்ச்சிக்காக இயங்கும் ஊர்க்கமிட்டி. கப்பல் மாலுமிகள் சங்கத்திற்கும் இடீந்தகரை வளர்ச்சிக்கு குழுவிற்கும் ஊரின் பேரில் இயங்கும் நிதிக்குழுவிற்கும் அரசியல்
கட்சிகளில் பயணிக்கும் தொண்டர் படைக்கும் வணக்கம்

மருத்துவமனை
வங்கி இரண்டு துவக்கப்பள்ளி ஒரு மேல்நிலைப்பள்ளி என உடல் உழைப்பால் தெரிப்பு வைத்து உருவாக்கிய என் முன்னேத்தியர்களுக்கு பாதம் பணிந்து முதலில் வணங்குகிறேன்

அவர்கள் உருவாக்கியதை கட்டி காப்பாற்ற வக்கில்லாமல் இருக்கும் நமக்கும் வாழ்த்துகள்

இன்று பலர் படித்து வெளிநாடுகளிலும் கப்பல்களிலும் நல்ல பணியை நமக்கு தந்த பள்ளியின் நிலமை இன்று மூடும் தருவாயில் உள்ளதை தெரியபடுத்துகிறேன்

நமது பள்ளியில் உறுப்பினர் சேர்க்கை பற்றாக்குறையால்

ஆசிரியர் குறைப்பு நடை பெறுகிறது
இந்த நிலமை நீடித்தால் ஓராசியர் பள்ளியாக கூட மாறும் ஊரில் யாரும் இதை கண்டுகொள்வதில்லை

சிலரிடம் பள்ளிக்கான பணிகளுக்கு பேசினால் பொத்தாம் பொதுவாக ஆசிரியர்களை சுட்டி காட்டி அவர்கள் செய்யமாட்டார்களா என்று விதாண்டாவாதம் பேசி கலைகின்றனர்

கச்சேரிகளுக்கு 10 லட்சத்தை வீசி எறிந்து ஆடவிடும் நாம் பள்ளியை கவனிக்க தவறி
விட்டோம்

ஏனென்றால் நாம் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டோம் பிள்ளைகளை வண்டி பள்ளிகூடத்தில் படிக்க வைத்து நம்மை பொருளாதாரத்தை ஈட்ட வைத்த பள்ளியை ஒதுக்கி வைத்துவிட்டோம்

நான் வளர்ந்து விட்டேன் என் மாதம் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கிறோம் வேற எதற்கு பள்ளியை கட்டி அழ வேண்டும் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்

ஆனால் இந்த பள்ளி என் முன்னோர் உருவாக்காமல் இருந்திருந்தால் கடற்கரையை விட்டு 10 % கூட போயிருக்கமாட்டோம் படிக்காத எங்கள் இறைவன்கள் படிப்பின் தன்மை அறிந்து சிந்தித்து கருவாக்கி உருவாக்கி வைத்த பள்ளியை படிப்பின் தன்மை தெரிந்தும் நாம் அதை கரியாக்க விடுவதுதான் படிப்பின் அறமா? இல்லை ஊரின் தரமா ?

அறிவார்ந்தவர்களே! சிந்திப்போம்

இன்னும் சில வருடங்களில் மூடுவிழா காணப்போகும் கருவறையை
அதில் கருவாகியவர்களே ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றால் நம்மை மீறிய தற்குறி உண்டோ உலகில் !

தாயை போல நேசிக்கும் ஆசியர்களே ! உங்கள் தாழ் பணிந்து வேண்டுகோள்

உங்கள் பிள்ளைகளையே நீங்கள் பணி செய்யும் பள்ளியில் படிக்கவைக்கவில்லை என்றால் உங்கள் தரத்தை நீங்கள் தான் பரிசோதனை செய்யவேண்டும்

உங்களை குறைசொல்லும் அளவிற்கு அறிவில்லாத தற்குறி நான் !

இருந்தாலும் சொல்கிறேன்.

உங்களுக்கு இந்த வேலையை

தந்தது

ஊரின் முன்பதிவும்(Seniority) அதற்காக்வாவது நீங்கள் உங்கள் பிள்ளை உங்கள் நிழலில் படிக்கவையுங்கள் நீங்களே உங்களை நம்பவில்லை எனில்? ??????????

உங்களின் தரம் ....உலகதரம்

இன்று ஊரில் சராசரி கடலோடியின் வருமாம் வாரம் 3000
மாதம் 20000 தாண்டுவது கடினம்
இந்த பள்ளியில் பிள்ளை ஒன்றிலிருந்து 12 வரை படிக்க 25000 கூட செலவாகாது(12 வருடம்)

ஆனால் தனியார் பள்ளியில் ??????குறைந்த பட்சம் 50000 ஆண்டிற்கே செலவாகும்
இந்தபள்ளி மூடினால் அவர்களின் நிலைமை ??

என் நிலமை சரியாகிவிட்டது நான் விலகிகொள்கிறேன் என்று அன்று நம் முன்னோர் நினைத்திருந்தால் கடலில் கரையில் நமக்கும்நிழல் இருந்திருக்கும்

இன்று பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் நம் தலைமுறையால் கூட இதுபோல் மூன்று பள்ளியை நாம் கட்டி எழுப்பமுடியுமா சிந்தீப்போம்

உடைந்த பள்ளியை வேலைபார்க்க கூட முக்குகிறோம்

ஆசிரீயரையும் சாமீயாரையும் குத்தம் சொல்லி குதர்க்கம் பேசும் தலைமுறையில் உள்ளோம்

ஊர்கூடி தேர் இழுக்க ........ஆண்டு தோறும் கூடும்

நாம்

அறிவு தேரை இழுக்க இயலாமல் தெருவிட்டால் எப்படி

யாரையும் குறைசொல்ல நேரமில்லை

நாம் செய்ததை நாமே திருத்திகொள்வோம்

திருந்தி கொள்வோம்

உடனே இது குறித்து களம் இறங்குவோம்

கலந்துறையாட விருப்பம் இருந்தால் தங்கள் எண்களை பதிவிடுங்கள் முயற்ச்சி செய்வோம்

நம்மாள் கையாலாக வில்லை என்றால்
(விரக்தீயில் சொல்கிறேன் )
மறைமாவட்டத்திடமாவது ஒப்படைப்போம் பள்ளியாவது எஞ்சும்

முடியும் என்றால் அனைவரும் இணைவோம்

அன்புடன்
இசைதமிழ்அரசன்
மிக்கேல் சுசி பர்ணாண்டோ

03/06/2025

😍

எங்கள் தாய் மண் இடிந்தகரையின்  தனித்துவமிக்க ஆளுமை அவர்..பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அல்ல அவர் மண்ணின் உடற்கல்வி ஆசிரிய...
09/04/2025

எங்கள் தாய் மண் இடிந்தகரையின் தனித்துவமிக்க ஆளுமை அவர்..

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அல்ல அவர் மண்ணின் உடற்கல்வி ஆசிரியர் அவர்.. சொந்த மண் தாண்டி மற்ற நிலங்களிலும் இவரால் பயன் பெற்ற வீரர்கள் உண்டு..

இவரால் பயிற்சி பெற்றுவர்கள் பன்னாட்டு பதக்கம் தொடங்கி வட்டார அளவில் பதக்கங்களை பெற்று அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்..

போட்டிகளில் மாணவனோடு சேர்ந்து தடகளத்துக்கு வெளியே ஓடு ஓடு என்று இணையாக ஓடி அவனை வெற்றி பெற வைக்கும் ஆளுமை அவர்..

பள்ளிகளுக்கு இடையே ஆன போட்டிகளில் பரிசு அறிவிக்கும் ஒவ்வொரு போட்டிகளிலும்
🔥பிஷப் ரோச் இடிந்தகரை🔥 என்று அறிவிக்கப்படும் ஒவ்வொரு அறிவிப்பும் அவருக்கு அணியப்படா பதக்கங்கள்..

விளையாட்டு மட்டுமில்லாது தனி மனித ஒழுக்கத்தில் எங்களை வளர்க்கும் ஆளுமை அவர்..

பள்ளி காலம் முடிந்து வெளியில் போன ஒவ்வொரு மாணவரும் இன்னும் அதே பயம் கலந்த மரியாதையோடு வணக்கம் செலுத்தும் எங்கள் PT சார் மரியாதைக்குரிய அண்ணன் திரு.லூயிஸ் தல்மேதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பதிவு ரெய்னர் கான்ஸ்டான்டின் பர்னாந்து

 #வாழ்த்துகிறோம்_பாராட்டுகிறோம்.   நெல்லை மாவட்டம் கீழ் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடந்த மாவட்ட அளவில் ஆன கால்பந்து போட்டிய...
20/10/2023

#வாழ்த்துகிறோம்_பாராட்டுகிறோம்.

நெல்லை மாவட்டம் கீழ் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடந்த மாவட்ட அளவில் ஆன கால்பந்து போட்டியில் நமது ஊர் இடிந்தகரையின் பிஷப் ரோச் மேல்நிலை பள்ளியின் 17 வயதுக்கு உட்பட்டோர் அணி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.. முதல் போட்டியில் நெல்லை சரக அணியோடு மோதி 1-1 என்ற சமகணக்கில் ஆட்டம் முடிவு பெற பெனால்டி முறையில் 4-3 என்று முதல் போட்டியில் வென்றது.. அதன் பிறகு அரையிறுதி ஆட்டத்தில் களக்காடு சரக அணியான டோனாவூர் சந்தோஷ் வித்தியாலயா அணியோடு மோதி 3-1 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி இறுதி போட்டியில் பெல் மெட்ரிகுலேசன் பள்ளியோடு 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தை ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட அளவில் வென்று பரிசை தட்டி சென்றது நமது ஊர் அணி.. நமது அணி மோதிய அனைத்துமே மெட்ரிகுலேசன் பள்ளிகள் அனைத்திலும் தங்களில் முழு திறமையை காட்டி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த நமது மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

அருமையான முறையில் மாணவர்களை தயார் படுத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு.லூயிஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்....

வாழ்த்துக்கள்:💐திசையன்விளை வட்டார அளவிலான( Zonal Level)  பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நமது *இடிந...
30/08/2023

வாழ்த்துக்கள்:💐திசையன்விளை வட்டார அளவிலான( Zonal Level) பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நமது *இடிந்தகரை 'பிஷப் ரோச் மேல்நிலைப் பள்ளி* பல வெற்றிகளும் பதக்கங்களுடனும் 🏅🎖️🏆 இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.. சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அளவில் *பெமிஸ்டன்* , *சிடேன்* ஒட்டுமொத்த Championship வென்றுள்ளனர்.... போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கும் ...
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் ஊக்கமளித்த பள்ளியின் தலைமையாசிரியர், தாளாளர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐🙏🏻🙏🏻

- அன்றன் சைரஸ்

ஜாதீ!!!!ஜாதீ,!!!ஜாதீ!!!!!! படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் என்ன ஜாதி என்பதை அறிந்ததில்லை .....பின்பு தெரிந்த பின்னும் அதை...
12/08/2023

ஜாதீ!!!!ஜாதீ,!!!ஜாதீ!!!!!!

படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் என்ன ஜாதி என்பதை அறிந்ததில்லை .....பின்பு தெரிந்த பின்னும் அதைப் பொருட்டாக மதிப்பதில்லை ........

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலமும் சரி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த காலம் வரையும் சரி , ஜாதி என்பதை அறிந்ததில்லை.....

எனது சொந்த ஊரான இடிந்தகரையை சுற்றி உள்ள 13 முதல் 15 கிராமங்களில் உள்ள பிள்ளைகள் படித்தது எங்களது பிஷப் ரோச் மேல்நிலைப் பள்ளியில் தான் ....
பெருமைக்குரிய இந்த பள்ளியில் ஆசிரியர்களும் சரி ,மாணவர்களும் சரி, மாணவிகளும் சரி யாரும் ஜாதியை என்னவென்றே அறிந்திடாத மக்கள் ....

நான் படித்த காலமும் சரி ,பள்ளியின் தொடக்க காலமும் சரி, ஏன் இன்று வரையில் எனது பள்ளியில் ஜாதிய பிரச்சனை என்று ஒன்றைக் கூட என் பள்ளி சந்தித்ததில்லை என்ற பெருமையோடு இன்று எனது முகநூல் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.....

இதில் பெரும் பங்கு ஆசிரிய பெருமக்களையும்,பெற்றோர்களையும் மாணாக்கரையுமே சாரும்........

மூன்று வீடுகள் தள்ளிதான் பள்ளி,
இடைவேளையின் போது ஆலய பங்குதந்தையர்களின் பங்களா வழியாக மிக வேகமாக வீட்டிற்கு சென்று சிற்றுண்டி அருந்தி விட்டு வீட்டில் என்ன குழம்பு ரெடி ஆயிட்டு இருக்கு என்பதை பார்த்துவிட்டு நண்பர்களிடமும் ,(ஆண் பெண் இருபாலரும் ) சொல்லி, அவர்களை வீட்டிற்கு அழைத்து அருமையான மீன் குழம்பையும்,பொரித்த மீன்களையும், நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக உண்ட அந்த காலங்களை நினைத்து இன்று பெருமைப்படுகிறேன்....

பக்கத்து ஊரில் உள்ள நண்பர்கள் அதிகம் கொண்டு வந்திருப்பது வெஜிடேரியன் உணவாக தான் இருக்கும். தேவைப்பட்டால் அவர்களது உணவுகளை நாங்கள் உண்டு மகிழ்ந்த காலங்களும் உண்டு..... பக்கத்து ஊரில் உள்ள நண்பர்கள் மாணவர்கள் அனைவருமே எனது நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள்....

படித்த பள்ளியில் கிறிஸ்தவர்கள்,
இந்துக்கள் ,முஸ்லிம்கள் என்று மூன்று மதத்தை சேர்ந்தவர்களும் படித்தோம், அங்கே ஒருபோதும் மதத்தின் சார்பாக எந்த பிரச்சனையும் நடந்தது கிடையாது,இந்த பெருமை எல்லாமும் பள்ளியின் மாணாக்கர்களையும், ஆசிரிய பெருமக்களையுமே சாரும் ....

பள்ளி ஆசிரியர்களும் சரி, தலைமை ஆசிரியரும் சரி அவர்களுக்குள்ளேயும் அவர்கள் ஒருபோதும் ஜாதி பார்த்திருக்கவே மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் இன்றுவரையிலும் உயிர் நண்பர்களாகஇருக்கின்றார்கள் .
இப்படி எல்லாம் வாழ்ந்து வளர்ந்த நாங்கள் இன்று நல்ல கல்வியை நமது ஆரம்ப காலங்களில் படித்த பின்பும் கல்லூரி சென்ற பின்பும் அங்கும் ஜாதி பற்றி அறிந்ததே இல்லை ,அதை ஒரு பொருட்டாகவே நினைத்ததுமில்லை .

கல்லூரி நண்பர்கள் மூவர் இன்று எங்களோடு இல்லை, அவர்கள் மூவருமே எங்களது தொழில்முறையில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர்கள். இளம் வயதிலேயே அவர்களுடைய இறப்பு மிக பெரிய இழப்பு...
அவர்கள் யாரும் என்ன ஜாதி என்று இன்றுவரை எங்களுக்கு தெரியாது.

பள்ளி நண்பன் ஒருவன் ... பக்கத்து சிறிய கிராமத்தை சேர்ந்தவன் பைக் ஆக்சிடெண்டில் அவன் இறந்த பிறகும் கூட அவன் என்ன ஜாதி என்பதை பாராமல் உற்ற நண்பர்களாக அவனது பிள்ளையின் கல்வியை நண்பர்களாகிய நாங்கள் இன்றுவரை தொடர்கின்றோம்.

சில நாடுகளில் வேலையில் உயர்ந்த பதவிகளை வகித்த போதும் என்னோடு வேலை பார்த்த எவரையும் சாதிய கண்ணோட்டத்தோடு கண்டதுமில்லை. ஜாதி பார்த்து ஆட்களை தேர்வு செய்ததுமில்லை, உயர் பதவிகளை கொடுத்ததும் இல்லை .

இதற்கு முன்பு எழுதியது தான் பெற்றோரே உங்களது பிள்ளைகளின் மேல் நீங்கள் கவனமாக இருங்கள்...

இன்று ஆசிரியர்களுக்கு பல பள்ளிகளில் மதிப்பில்லை, பலமுமில்லை ஆசிரியர்கள் பிரம்பெடுத்த அடித்த காலங்களில் ஒரு காலும் அவர்கள் எந்த வன்மத்தோடும் எவரையும் அடித்ததில்லை ,ஒழுக்கத்திற்காகவும் கல்விக்காகவும் மட்டுமே அவர்கள் அடித்தார்கள்.

குறைகள் ஒரு பக்கம் மாணாக்கரிடையே இருந்தாலும் ,ஸ்மார்ட் போன் காலத்தினாலும் திரை படங்களில் ஜாதிய பாகுபாட்டை பெருமையோடு காட்டுவதிலும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்......

இன்று இளஞ்செல்வங்களான மாணாக்கர்கள் , சந்தோஷமாய், சமாதான புறாக்களாக , எதையும் பற்றி கவலை இல்லாமல் வாழ வந்த மாணவர் பருவத்தை அவர்கள் தவறாக
வாழ்ந்து உயிரைப் பறிக்கும் அளவில் செல்லும் நிலை வருத்தத்துக்குரியது...

இங்கு யாரை குறை சொல்வது????? பெற்றோரையா? மாணக்கரையா? ஆசிரியர்களையா? அரசியல்வாதிகளையா?? அரசாங்கத்தையா??? யாரை குறை கூறுவது ..... அனைவரும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். இப்படியே சென்றால் தமிழ்ச் சமூகம் ஜாதியால் மிக மிக பின்னடைவை சந்திக்கும் வரும் காலங்களில.....

மாணவர் சமுதாயமே!!!!!! விழிப்பாயிருங்கள், உங்கள் கல்வியின் மேல் கவனமாக இருங்கள் ,உங்களது ஒழுக்கத்தின் மேல் கவனமாக இருங்கள், உங்களது நடத்தையின் மேல் கவனமா இருங்கள், அதைப் போன்று தான் பெற்றோரே நீங்கள் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உன்னத மானிட பிறப்பை பற்றி சொல்லிக் கொடுங்கள் கல்வியே சிறந்தது என்றும் , எங்கும் எதிலும் ஜாதி பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக சொல்லி கொடுங்கள்.

நாங்குநேரியில் நடந்த வெரிச்செயல் தமிழ் சமூகமே தலைகுனிய வேண்டிய செயல்..
நாங்குநேரி மட்டும் அல்ல இந்த தமிழ் சமூகத்தில் நடக்கும் சாதிய படுகொலைகள் எல்லாம் காட்டுமிராண்டித்தனமான பாதகசெயல்...

ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

ஜாதிகள் இல்லையடா மனிதா!!!!!!

மனிதன் காப்போம்!!!!!!!
மானுடம் காப்போம்!!!!!!!
அன்பே இறைவன்.....

(VERITAS ET CARITAS - உண்மையும் அன்பும்) என்ற உயரிய கோட்பாட்டை தாரக மந்திரமாய் கொண்ட,,
மிகச்சிறந்த ,பள்ளியின்
மாணாக்கர்களில் நானும் ஒருவனாக ......

பழைய மாணவன் ....
கரிகாலன்

திசையன்விளை வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே சீனியர் பிரிவு மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் நமது பிஷப் ரோச் மேல்நிலை...
09/08/2023

திசையன்விளை வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே சீனியர் பிரிவு மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் நமது பிஷப் ரோச் மேல்நிலை பள்ளி மாணவர்கள் அரையிறுதி போட்டியில் மூலைக்கரைப்பட்டி பள்ளி அணியோடு மோதி 4-0 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டியில் கள்ளிகுளம் அணியை 5-0 என்ற கணக்கில் வென்று திசையன்விளை வட்டார அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்கள்.. பயிற்சியும் ஊக்கமும் அளித்த உடற்கல்வி ஆசிரியர் திருமிகு. லூயிஸ் அவர்களுக்கும். தங்கள் முழு திறனை காட்டி வெற்றிக்கோப்பையை வென்று ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த நமது ஊர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

இடிந்தகரை மண்ணின் மகளும், உவரி மண்ணின் மருமகளுமான சாதனைப்பெண்  "  #திருமதி_ஐடா " இந்த வார தினமலர் வார இதழில்.
20/01/2023

இடிந்தகரை மண்ணின் மகளும், உவரி மண்ணின் மருமகளுமான சாதனைப்பெண் " #திருமதி_ஐடா " இந்த வார தினமலர் வார இதழில்.

23/10/2022

நினைவுகள்..🥰

ஆயர் ரோஜ் மேல்நிலைப் பள்ளி..♥️
12/06/2021

ஆயர் ரோஜ் மேல்நிலைப் பள்ளி..♥️

20/11/2020

Memories..😍

Address

627104
Idindakarai
627104

Alerts

Be the first to know and let us send you an email when Bishop Roche Higher Secondary School, Idindakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bishop Roche Higher Secondary School, Idindakarai:

Shortcuts

Share

Category