M.M. Hr,Sec,School

M.M. Hr,Sec,School Meenakshi sundaram memorial higher secondary school which is placed in idaikal village is an awesome place for students to gain knowledge

2010-2011 X-A  batch..! Thanks for sharing this Mugesh Jas
24/06/2023

2010-2011 X-A batch..! Thanks for sharing this Mugesh Jas

  by Ramesh Kumarநம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை திரும்பி பார்க்க வைக்கும்...அவற்றில் நமது பள்ளி பருவம் தெகிட்டாத ...
25/04/2019

by Ramesh Kumar

நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை திரும்பி பார்க்க வைக்கும்...அவற்றில் நமது பள்ளி பருவம் தெகிட்டாத இன்பம்..!! அசைபோட்ட நினைவுகள் சில இங்கே 😉...!! கற்றுக்கொடுத்த இந்த கரும் பலகை....
பழமையான பள்ளி., மறக்க முடியாத இந்த நண்பர்கள் & நண்பிகள் கூட்டம்., சரி ஒழுங்கா நில் .. வரிசையாக நில்.. (காலை பிரையர்), வணக்கம் ஐயா என தொடங்கும் வகுப்புகள்., வெள்ளை சட்டை வேட்டியுடன் வரும் எங்கள் நெடுவயல் தமிழ் ஐயா... சரவணன் ஐயா, தமிழ் பெரியம்மா, சின்னம்மா, முருகன் சார், சி எஸ் சார், சிஎம் சார், காதை பிடித்து திருகும் எஸ் டி சார், ஓவிய ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் P.M ஆசிரியர், மேலும் பல ஆசிரியர்களை பார்த்து சந்தில் தெரிக்க ஓடும் நாங்கள்., மறக்க முடியாத அந்த பச்சை மட்டை( வாங்கிய ஒவ்வொரு அடியும் வெற்றி படிக்கல் 😉.,உடை ஒழுக்கம் என்ன என்று கற்றுக் கொடுத்த எங்கள் ஆசிரியர்கள் சேமிப்பு என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் ,தொலை தூரத்தில் இருந்து கால் கடுக்க மிதிவண்டியில் வந்து கற்பித்த ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை தமிழ் மன்றம் நிகழ்ச்சி, பள்ளி ஆண்டு விழா மற்றும் இடைவேளையில் மிதிவண்டியில் காத்துக் கிடக்கும் பஞ்சு மிட்டாய்., 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒலிக்கும் அந்த டிங் டிங் மணிஓசை., என்னதான் வாழ்கை தரம் உயர்ந்தாலும் மணம் மறாத! மறக்க முடியாத சத்துணவு , பண்டிகை காலம் ஒரே சந்தோசம். நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளித்து மகிழ்ந்தது... அம்மாவிடம் ஆட்டைய போட்டு வாங்கிய ஒரு ரூபாய்க்கு அய்யர் கடை பாயாசம், புத்தகத்தில் குட்டி போட்ட மயில் இறகுகள்., அரைக்கால் டவுசர்.,சேற்றில் மீன் பிடித்த நயினாரகரம் ஆறு. பழமைகள் உண்டு!! ,பல வரலாறுகள் உண்டு!!! அதை அசை போட கூட நேரம் இல்லாத வாழ்கை முறை..எதையோ தேடி அலையும் வாழ்கை., நிகழ் காலத்தை தொலைத்து விட்டு எதிர் காலதுக்காக(மகள்/மகன்) வாழும் மூன்றாவது தலைமுறை., பருவம்(age) மாறியது பண்பை மறந்தோம்., பாசத்தை (உறவுகள்) துலைத்தோம்., வாழ்க்கை ஒரு சுழற்சி., நான் நீ என்ற அகந்தை துரந்து மனிதனாக வாழ்வோம்! நண்பர்களாக வெல்வோம்!!
ஒன்று பட்டால் உண்டு வாழ்கை.,

Note: Inbox us the memories you want to share :)

You are old, only when you stop learning..!!
25/04/2019

You are old, only when you stop learning..!!

A reunion message by Ramesh Kumar and friends!பள்ளிக்கூடம் நட்புகள் மீண்டும் ஒரு சந்திப்பில் பள்ளி நாட்களை அசை போட்டு தி...
17/11/2018

A reunion message by Ramesh Kumar and friends!

பள்ளிக்கூடம் நட்புகள்
மீண்டும் ஒரு சந்திப்பில்
பள்ளி நாட்களை அசை போட்டு
திரும்பவே இந்த சந்திப்பு....

வகுப்புக்கே வராத நண்பன்
முதல் ஆளாய் வந்து நிற்கிறான்
நண்பர்களை வரவேர்க்க....

அலைபேசியின்
அவசர அழைப்புகள் அனைத்திலும்
நண்பா வந்துகொண்டிருக்கிறேன்
பதிலாய் சீக்கிரம் வாடா....

நண்பர்களின் கூட்டம் சேர
சில பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டது
நண்பர்கள் மத்தியில்.....

கவலைகள் மறந்தது
எங்கோ ஒளிந்திருந்த
குறும்புகள் மீண்டும் சிறகு விரிக்க
வாய் வலித்தது புன்னைகையால்
மீண்டும் பல வருடம் கழித்து....

நலம் விசாரிப்பில்
வர முடியாத நண்பனை பற்றியே
அதிகபடியான விசாரிப்புகள்....

பேசினார்கள்
பேசினார்கள்
பல வார்த்தைகளும் அதில்
கலந்திருக்கும் வலிகளுக்கும்
இங்கேதான் மருந்து கிடைக்கும் ஆதலால்....

மரியாதை கலந்த வார்த்தை
இங்கே கெட்ட வார்த்தை
உயர்ந்த மரியாதையை
இதயம் கொடுத்துவிட்டது நண்பன் என்று ஆதலால்...

நேரத்தின் சந்திப்பு
குறைய தொடங்க
ஒவ்வொருவராய் மீண்டும்
பிரியாமல் பிரிந்தனர்,,,,,

மீண்டும் சந்திப்போம்
என்ற வார்த்தையில் மறைந்து ஒலித்தது
எப்பொழுது எங்கே
அந்த நிமிடங்கள் நிஜமாகுமா.?...

எங்கு தொலைத்தோம்
ஏன் தொலைத்தோம்
சில சந்தோஷ நிமிடங்களை....

பதில் தர யோசிக்க நேரமில்லை
கிளம்ப வேண்டும் நேரம் கடக்கிறது,,,,,

சிரிப்பேன்
ரசிப்பேன்
ஏங்குவேன்
மீண்டும் கிடைக்காதா அந்த பள்ளி வாழ்க்கை.....

The pillars of our school..!!
22/10/2018

The pillars of our school..!!

2010-11 batch..! Thanks for sharing this Er Arumugam Ma Sa!
30/09/2018

2010-11 batch..! Thanks for sharing this Er Arumugam Ma Sa!

Address

Tenkasi-Madurai Main Road
Idaikal
627804

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.M. Hr,Sec,School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to M.M. Hr,Sec,School:

Shortcuts

Share

Category