01/07/2026
*இ.ஆர்.கே கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா...*
அரூர் அடுத்து எருமியாம்பட்டியிலுள்ள இ. ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதனை இ. ஆர். கே கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலர் இ. ஆர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சோழவேந்தன் முன்னிலை வகித்து பேசினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைைர் த.சக்தி தலைமையுரையாற்றினர். முன்னதாக ஆங்கில துறைத்தலைவர் ரோபினா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள் பேசுகையில், பள்ளிப் படிப்பை முடித்த அனைவருக்கும் உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகையால் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகில் ஏராளமான வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக கொடுக்கப்படுகிறது. அதனை சரியாக பயன்படுத்துபவர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். மற்றும் சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்துவதன் முக்கியத்துவம், இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துறைத்தார். மேலும் மாணவிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப இருக்கும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றியும் அதனை அடையும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து மாணவிகளை ஊக்கப்படுத்தினார். மாணவிகள் நேர மேலாண்மையை கடைப்பிடித்து தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் இவ்விழாவில் நோட்டரி வழக்கறிஞர் பசுபதி, தருமபுரி மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோபிநாத், மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்தகுமார், முதன் புலமையர் முனைவர் சிவகுமார், நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக வேதியியல் துறைத் தலைவர் முனைவர் சிவகுமார் நன்றி கூறினார்.