14/06/2024
என்ன தொழில் செய்தாலும் அதன் தொழில்நுணுக்கம் தெரியாமல் யாராவது ஜெயிக்க முடியுமா?
எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு உழைப்பினை போட்டு லாபம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஷேர் மார்கெட்டில் மட்டும் காசைப் போட்டால் காசு வரணும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏனோ கற்றுக் கொள்ள நமக்கு மனசே வரமாட்டேங்குது. அவர் சொன்னார், இவர் சொன்னார்னு வாங்கி வித்து எத்தனை தடவை லாபம் பார்க்க முடியும்னு நினைக்கிறீங்க? ஸ்டாக் டிப்ஸ் கொடுப்பவரின் மன / பணநிலை வேறு நம் நிலை வேறு. அதனால் தான் எல்லா நேரமும் ஒத்துப் போவதில்லை.
இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்வது இப்பொழுதைக்கு பணம் சம்பாதிக்க மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிஜத்தில் அது மட்டும் பலன் இல்லை. நீங்கள் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிறீர்கள். அதனை வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க உதவும்.
குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ர மக்கள், அவரவர் தொழில்களுடன் தன் குழந்தைகளுக்கு ஷேர்மார்கெட் தொழில் முறையையும் சேர்த்தே கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் பங்குச் சந்தையில் அதிகம் கோலோச்சுகிறார்கள்.
பங்குச் சந்தை தொழில்நுட்பம் என்பது, உங்கள் மூளை செயல்பாட்டில் இருக்கும் வரை உங்களுக்கு வருமானம் கொடுக்கவல்லது. அதை நீங்களே கற்றுக் கொள்ளும் பட்சத்தில் தான் அது உங்களுக்கு கடைசி வரை உதவும்.
உங்கள் தேவைக்கேற்ப , உங்கள் புரிதலுக்கேற்ப எங்கேயாவது, யாரிடமாவது ஷேர்மார்கெட் டெக்னிகல் கற்றுக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும், சுயமாக கற்றுக் கொண்டவர் ஏகலைவன் மட்டுமே. நாமெல்லாம் ஏகலைவன் இல்லை.
ஷேர்மார்கெட்டைத் தொழிலாக மதித்து கற்போம். அதுவும் ஒரு தொழிலாக உங்களை மதித்து பணம் கொடுக்கும்.
Boga Strategy
8248267159