09/09/2017
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் பிரமாண்டமான கலைத்திருவிழாவான FUTURA 17 -ல் (7.9.17 - 9.9.17) மக்கள் சிந்தனைப் பேரவை -பண்ணாரி அம்மன் கிளையின் சார்பாகவும் நியு சென்சுரி புக் ஹவுஸ் சார்பாகவும்
2-ம் ஆண்டு "புத்தக கண்காட்சி" நடைபெற்றது.மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் ஐயா அவர்கள் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார்.மேலும் "விவசாய நிலங்கள்
பாதுகாப்பு "என்ற அரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.ஏராளமான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் கண்காட்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.