SSV Matriculation Hr Sec School, Sivagiri

SSV Matriculation Hr Sec School, Sivagiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSV Matriculation Hr Sec School, Sivagiri, School, Sivagiri, Erode.

Advance Happy New year wishes                                           குங்ஃபூ வீரர் புரூஸ் லீ, இளைஞர்களுக்குச் சொன்ன 5...
31/12/2016

Advance Happy New year wishes
குங்ஃபூ வீரர் புரூஸ் லீ, இளைஞர்களுக்குச் சொன்ன 5 யோசனைகள்!

** உனது தவறுகள் மன்னிக்கப்படக்கூடியவையே, அவற்றை ஒப்புக்கொள்ளும் தைரியம் உனக்கு இருக்கும்பட்சத்தில்!

** அறிவு உனக்கு சக்தியைத் தரும்; ஆனால், குணம்தான் மரியாதையைத் தரும்.

** ஒரு செயல் குறித்து ரொம்ப காலம் சிந்தித்துக்கொண்டு இருந்தால், அதை ஒருநாளும் உன்னால் செய்து முடிக்க முடியாது. உனது இலக்கை நோக்கி தினம் ஓரடியாவது எடுத்து வைப்பது அவசியம்!

** தோல்வி என்பது மனதைப் பொறுத்தது. தோல்வியை மனப்பூர்வமாக ஏற்காதவரையில் நீ தோல்வியாளன் இல்லை.

** கற்றால் மட்டும் போதாது; கடைப்பிடிக்க வேண்டும். விரும்பினால் மட்டும் போதாது; வேலையில் இறங்க வேண்டும

https://www.facebook.com/samuthirakanii/photos/a.296655243713025.79686.296650667046816/1425635187481686/?type=3&theater

07/09/2015

.
சிந்தனை துளிகள்...
1. "கடன்காரன் " ஆவதை விட பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2. "டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3. "கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4. "வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5. குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6. "காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7. புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8. மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9. வெற்றிகளின் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல்.
10. பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.
Nice Evening Friends..

27/07/2015

கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!
எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!
நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!
முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!
அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!
அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!
அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!

Net Proverbs....

17/07/2015

செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.
“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”
“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”
“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”
“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!”
செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார் தெரியுமா? இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”
“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு!”
“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். அதுவே 50 கோடிகளுக்கு பெறும். எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”
“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”
அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.
இறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.
தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! இதையாவது செய் ப்ளீஸ்!!”
எமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”
“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். இது ரொம்ப பெரிய டீல். பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”
“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”
அடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.
நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.
உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
-இணையம்

15/07/2015

நாம் ஜோக்குகளையும் மற்றச் செய்திகளையும் பரப்பி வருகிறோம்...
தயவுச் செய்து இச் செய்தியையும் உங்கள் நட்பு வட்டத்தில் பரப்பவும், அவர்களையும் அவர்களது நண்பர்களிடத்திலும் பரப்பச் சொல்லவும்.
மிக மிக முக்கியமான செய்தி:
சில முக்கிய இந்திய நகரங்களின் பதிவான உச்ச வெப்பநிலை:
லக்னௌ: 47° C
டில்லி: 47° C
ஆக்ரா: 45° C
நாக்பூர்: 46° C
கோட்டா: 48° C
ஹைதராபாத்: 45° C
பூணே: 42° C
அஹ்மதாபாத்: 42° C
வரும் வருடங்களில் இந் நகரங்களின் வெப்பநிலை 50° C ஐ தாண்டும். ஏ.சி.யோ, இல்லை மின் விசிறியோ வரும் வெயில் காலங்களில் நம்மை காப்பாற்றாது.
ஏன் இவ்வளவு வெப்பம்????
நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணியில் சென்ற 10 வருடங்களில் 10 கோடி மரங்களுக்கு மேல் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஆனால் அரசாலோ அல்லது பொது மக்களாலோ ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நடப்படவில்லை.
நமது இந்திய நாட்டை எப்படி குளிர்விக்கலாம்???
அரசு மரங்களை நடும் என காத்திருக்க வேண்டாம்.
மரம் நடுவதற்கோ அல்லது விதைகள் நடவோ அதிக செலவாகாது.
🌳🌲🌿🌳🌴
மா, பலா, சீதா, வேம்பு, ஆப்பிள், எலுமிச்சை, நாக மரம் போன்ற பழ மரங்களின் விதைகளை சேகரிக்கவும்.
🍎🍏🍊🍋🍒🍇🍐🍍🍈🍑
திறந்த வெளிகளிலோ, சாலை, நடைபாதை, நெடுஞ்சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, மேலும் உங்களது குழு அல்லது பங்களாக்களிலோ இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்கு துளையிடுங்கள்.
சேகரித்த விதைகளை ஒவ்வொரு துளையிலும் புதைத்து விட்டு இரு தினங்களுக்கு ஒரு முறை இக் கோடைக்காலத்தில் நீர் விட்டு வரவும்.ا
🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
மாரிக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.
15 முதல் 30 நாட்களுக்குள் சின்ன சின்ன செடிகள் முளைத்து வளரும்.م
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அவைகளை பராமரித்து பெரியதாக வளரச்செய்யுங்கள்.
நாம் இதனை தேசிய வேள்வியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா முழுவதிலும் 10 கோடி மரங்களை நடுவோம்.ا
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
50° C வெப்பநிலை அடைவதை தவிற்போம்...
⏬🆒🆗⏬🆒🆗⏬🆒🆗⏬
தயவு செய்து அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவும். மேலும் இச்செய்தியை எல்லோரிடத்திலும் பரவச் செய்யவும். விசேஷங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் பரிசுப் பொருட்களாக மரக் கன்றுகளை வழங்கி நடச் செய்வோம்.م
ரெளத்திரம் பழகு👤
-
-இணையம்

Nice shool day memories..
23/06/2015

Nice shool day memories..

09/06/2015
26/02/2015

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் :
'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச்சே' என்றார்.
டாக்டர் :
'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் :
நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) :
டாக்டர் அது சிறுநீர் என்றார்.
டாக்டர் :
அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்..
இணையத்தில் படித்தது .

Let the bygones be bygones and let us hope for a prospective new year. Advance New Year wishes to all frnds..
31/12/2014

Let the bygones be bygones and let us hope for a prospective new year. Advance New Year wishes to all frnds..

Address

Sivagiri
Erode
638109

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSV Matriculation Hr Sec School, Sivagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category