Tamil Story - Stories தமிழ் கதைகள்

  • Home
  • India
  • Erode
  • Tamil Story - Stories தமிழ் கதைகள்

Tamil Story - Stories தமிழ் கதைகள் stories

14/01/2026
13/01/2026

11/01/2026

உலகில் குறைகள் இருப்பதால்தான்

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.

குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு ... கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி... நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.

பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.

"எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார்.

"களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள்.

"உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார்..

10/01/2026

01/01/2026
01/01/2026

29/12/2025

இவன பழக்குறதுக்குள்ளே

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார்.

‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.

இரண்டு எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய எலி சொன்னது, ‘‘இவனா? ரொம்ப தத்தி. மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே... அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்...’’

நீதி: (நான் என்னத்தை சொல்ல? நீங்களே உங்க கற்பனைக்கேத்தபடி எதையாச்சும் நினைச்சுக்குங்க!)

27/12/2025

Will My Burden Decrease?

​A man was loading heavy packs onto his donkey when he suddenly spotted enemies approaching.

​Panic-stricken, he cried out, "Donkey, come on! Let’s both run away. The enemies are coming!"

​The donkey replied calmly, "I am not coming. You run."

​"Why, you foolish donkey?" the man asked in shock.

​The donkey answered, "Even if the enemies capture me, I will still be carrying heavy loads for them. If I come with you, will my burden decrease?"

​Moral

​When a government changes, the only thing that changes for the poor is the name of their master

27/12/2025

எனக்கு சுமை குறையப்போகிறதா?

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான்.

பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

” ஏன் கழுதாய்?” எனக் கேட்டான்

” எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Story - Stories தமிழ் கதைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category