மாணவர் மைய வகுப்பறை

மாணவர் மைய வகுப்பறை வகுப்பறையை வண்ணமயமாக மாற்றி கற்றலை மேம்படுத்துவது

17/07/2026
சிங்கம்
17/10/2025

சிங்கம்

கேப்டன் பதிப்பகம் தனது ஏழாவது கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட இருக்கிறது.நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பலாம்.எந்தத் தலைப்...
02/05/2025

கேப்டன் பதிப்பகம் தனது ஏழாவது கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட இருக்கிறது.

நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பலாம்.

எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம்.

மரபுக் கவிதை எனில் 24 வரிகளும்
புதுக்கவிதை எனில் வரிக்கு இரண்டு சொற்கள் எனில் 40 வரிகளும் இருக்கலாம்.

கவிதை நூல் உங்கள் முகவரி தேடி வரும்.

ஒருவர் எத்துனை கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

கவிதை அனுப்புவதற்கான கடைசி நாள் 10 - 05 - 2025

ஒரு கவிதைக்கான பங்குத் தொகை ரூ. 300

கவிதை & பணம் அனுப்ப
99420 52069

தொடர்புக்கு -
Dr. கேப்டன் யாசீன்
Captan Padhippagam
99420 52069
95006 99024

இந்தத் தகவலை அனைவருக்கும் பகிரவும்.

WhatsApp Group Invite

28/12/2024

*காலை உணவை சாப்பிட மறுத்த குழந்தை*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
எங்கள் வகுப்பில் பங்குகொண்ட மற்றொரு தந்தைக்கு வேறொரு பிரச்சனை. கே.டி.டஷ்மேன் என்ற பெயர் கொண்ட அவர், ஒரு தொலைபேசிப் பொறியியலாளராகப் பணியாற்றினார். அவரால் தன் மூன்று வயது மகளைக் காலை உணவு சாப்பிட வைக்க முடியவில்லை. திட்டு. கெஞ்சல், தாஜா போன்ற வழக்கமான முறைகள் பலனளிக்கவில்லை. எனவே அவளது பெற்றோர்,'காலை உணவைச் சாப்பிட அவளை எவ்வாறு விருப்பம் கொள்ளச் செய்வது?" என்று தங்களையே கேட்டுக் கொண்டனர்.

அச்சிறு பெண் தன் அம்மாவைப் பார்த்து அப்படியே நடந்துகொள்ள விரும்பினாள். பெரிதாகவும் வளர்ந்தவளாகவும் உணர விரும்பினாள். எனவே ஒருநாள் காலையில், அவளது பெற்றோர் அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்து, அவளது காலை உணவை அவளையே தயாரிக்கச் செய்தனர். அவள் ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளேக்ஸைப் போட்டு அதில் பாலை ஊற்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவளது தந்தை சமையலறைக்குள் நுழைந்தார், "அப்பா, இங்கே பாருங்கள். என் காலை உணவை நானே தயாரிக்கிறேன்," என்று அச்சிறுமி கூறினாள்.

யாரும் அவளிடம் கெஞ்ச வேண்டிய தேவையின்றி அவள் இரண்டு முறை தன் உணவைப் பரிமாறிக் கொண்டாள். ஏனெனில் அவள் அதில் விருப்பம் கொண்டிருந்தாள். அவள் ஒரு முக்கியத்துவ உணர்வை அடைந்திருந்தாள். தன் காலை உணவுத் தயாரிப்பை அவள் தன் சுயவெளிப்பாட்டிற்கான ஓர் அம்சமாகப் பார்த்தாள்.

"சுயவெளிப்பாடுதான் மனித இயல்பில் ஆதிக்கம் வாய்ந்த தேவையாக விளங்குகிறது," என்று வில்லியம் வின்டர் ஒருமுறை குறிப்பிட்டார். நாம் ஏன் இதே உளவியல் முறையை நம் வியாபாரத்திலும் பயன்படுத்தக்கூடாது? நம்மிடம் ஒரு பிரமாதமான யோசனை இருக்கும்போது, அது நம் யோசனை என்று மற்றவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்களே தங்கள் யோசனையைக் கிண்டிக் கிளற நாம் அவர்களை அனுமதித்தால் என்ன? அப்போது அவர்கள் அது தங்கள் சொந்த யோசனை என்று கருதுவார்கள். அவர்கள் அதை விரும்புவார்கள், அதில் ஓரிரு கவளங்கள் சுவைத்துப் பார்ப்பார்கள்.

இதை வைத்துக் கொள்ளுங்கள்: "முதலில், அவர்களிடத்தில் ஆவலைத் தூண்டும் விருப்பத்தை உருவாக்குங்கள். இதைச் செய்ய முடிந்த ஒருவருக்கு இவ்வுலகமே துணை நிற்கும். செய்ய முடியாதவர் தனிமையில் உழல்வார்."

*மூன்றாவது கொள்கை*

*அடுத்தவரிடத்தில் ஆவலைத் தூண்டும் விருப்பத்தை உருவாக்குங்கள்*.

வகுப்பறையை வண்ணமயமாக மாற்றி கற்றலை மேம்படுத்துவது

27/12/2024

புதிதாக புத்தகம் வெளியிடும் ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களை விற்றுத்தர அணுகவும்

கேப்டன் யாசீன்
99420 52069

வகுப்பறையை வண்ணமயமாக மாற்றி கற்றலை மேம்படுத்துவது

25/12/2024

" வதந்தி "

ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர்... மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்....

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம்.. திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான், காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான். இரவில் வீடு திரும்புகிறான். ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ என நினைத்தார்.

இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது.. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.
`அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். ஆனால், 'அவன் அப்பாவி', அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்....

ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது.. 'நான் என்ன திருடனா'? என்னைப் போய் கைது செய்து விட்டார்களே,
எல்லாம் இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன். அவ்வளவு தான் ".....

டிரைவரோ, போலீஸால் தான் அலைக்கழிக்கப் பட்டதை அந்த அவமானத்தால் மனது பாதித்ததை பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான்.

நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி, அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்.. நாளை காலையில் வாருங்கள்’ என்றார்...

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"?

"ஆமாம் ஐயா.’’

"நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள், அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.

"அது எப்படி ஐயா முடியும்"?

"அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்.. அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?".

"முடியாதில்லையா? அப்படித் தான்... நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை... ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார் நீதிபதி.

முதியவர் தலை குனிந்தார்..

வகுப்பறையை வண்ணமயமாக மாற்றி கற்றலை மேம்படுத்துவது

Address

Captain Publication
Dindigul
624005

Alerts

Be the first to know and let us send you an email when மாணவர் மைய வகுப்பறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category