Sangam TNPSC Study Center

Sangam TNPSC Study Center கற்க கற்க

GROUP 4
07/06/2019

GROUP 4

25/02/2019
06/07/2018

ஐந்திணை பூங்கா தஞ்சாவூரில் அமைய உள்ளது

06/07/2018

காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் கூசைன்.. இவர் மத்திய நீர் மேலாண்மை ஆணைய தலைவர்.

06/07/2018

17வது தமிழ் இணைய மாநாடு கோவையில் ஜூலை 6-8 நடைபெறுகிறது

Stephen hawkins...
15/03/2018

Stephen hawkins...

13/03/2018

நம் அரசியல் சாசனத்தின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் சாசனத்துக்கு மாற்றாக வந்தாலும், அதை அப்படியே பிரதிபலிக்காமல் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்ட சிறப்பைப் பெற்றது நம் சாசனம். இது முழுமையாகக் கையால் எழுதப்பட்ட ஒன்று. முதலில் 395 ஆர்ட்டிகள்ஸ் ( articles), 8 ஷெடியூல்கள் ( schedule ), 22 பகுதிகளைக்கொண்டது (parts). பல சீர் திருத்தங்களுக்குப் பிறகு தற்போது 450 ஆர்ட்டிகள்ஸ் , 12 ஷெடியூல்கள் ( schedules), 25 பகுதிகளைக் (parts) கொண்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறப்பம்சங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியம்.



உதாரண கேள்வி:

உதாரண கேள்வி
சிறப்பம்சம் எடுக்கப்பட்ட நாடு
அடிப்படை உரிமைகள் ( fundamental rights) அமெரிக்கா
பொதுப்பட்டியல் ( concurrent list ) ஆஸ்திரேலியா
அடிப்படைக் கடமைகள் ( fundamental duty ) ரஷ்யா
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்( directive principles of state policy) அயர்லாந்து
இவற்றில் எவை சரியாகப் பொருத்தப்படவில்லை



அ) 1 only

ஆ) 2,3,4

இ) 1,3,4

ஈ) None ( பதில் ) காரணம் அனைத்துமே சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன.



நம் அரசியல் சாசனத்தின் 10 முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்



* பார்லிமென்டரி ( parliamentary) முறையிலான ஜனநாயகம்

* ஃபெடரல் முறை ( மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன)

* ஃபெடரல் அல்லாத முறை - அதாவது மத்திய மற்றும் மாநிலங்கள் என்று பிரிக்கப்படாத அம்சங்கள் ( ஒரே குடியுரிமை ( citizenship), ஒரே அரசியல் சாசனம் ( constitution), நாடாளுமன்றத்தின் சில தனிப்பட்ட அதிகாரங்கள் போன்ற உதாரணங்களால்)

Advertisement

* மாற்றக்கூடிய மற்றும் மாற்ற முடியாத ( Flexible and rigid ) பகுதிகளைக்கொண்டது.

* ஜுடீசியல் சுப்ரமஸி ( judicial supremacy ) / உச்ச நீதிமன்றத்தைத் தலைமையாகக் கொண்ட ஒருங்கிணைந்த நீதித்துறை கட்டமைப்பை நம் சாசனம் குறிப்பிடுகிறது

* ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளையும் ( Fundamental rights ) ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகளையும்( Fundamental duties ) அரசு கொள்கையின் கட்டளைக் கோட்பாடுகள் ( Directive principles of state policy ) ஆகியவற்றை சாசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

* மதச்சார்பின்மை ( secularism )

* ஓட்டுரிமை ( Universal adult franchise )

* அவசரச் சட்டங்கள் ( emergency provisions ) - Art.352 , Art. 356 , Art 360 உள்ளிட்டவை

* மூன்றடுக்கு அரசாங்கம் - ( 73 மற்றும் 74-ம் சாசன திருத்தத்தின்படி )



மேலே கூறியதுபோல நம் சாசனத்தில் 12 அட்டவணைகள் உள்ளன. ஒவ்வொன்றைப் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.



உதாரண கேள்வி:



1) ஆறாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்தைப் பற்றியது

2) எட்டாவது அட்டவணை மொழிகளைப் பற்றியது.

இவற்றில் எது தவறு



அ) 1 only

ஆ) 2 only

இ) Both

ஈ) None ( பதில் )



அடுத்ததாக, நாம் பார்க்கப் போவது நம் அரசியல் சாசனத்தின் முகவுரையைப்( preamble ) பற்றி. அமெரிக்க சாசனத்தின் முகவுரையில் இருந்து முக்கிய அம்சங்கள் பின்பற்றப்பட்டு ஜவஹர்லால் நேரு அவர்களால், கான்ஸ்டிடூயென்ட் அசெம்பிளியில் ( constituent assembly) அறிமுகப்படுத்தப்பட்டது. சோசியலிஸ்ட் ( socialist ), செக்கியூலர் (secular), இன்டெக்ரிட்டி ( integrity ) ஆகிய மூன்று வார்த்தைகளும் 42-வது திருத்தத்தின் (amendment) வாயிலாக சேர்க்கப்பட்ட வார்த்தைகள். முகவுரையில் (preamble) உள்ள முக்கிய அம்சங்களை வார்த்தைகள் வாரியாக நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் பாலிட்டியைப் பொறுத்தவரை, முக்கியத் திருத்தங்கள் ( amendments) குறிப்பாக 42-வது( 1976)மற்றும் 44-வது (1978) திருத்தங்கள், முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள், அதன் சாராம்சங்கள் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் (உதாரணம் கேசவானந்த பாரதி வழக்கு, கோலக்நாத் வழக்கு போன்றவை).



ஆரம்பத்தில் நம்மில் சிலருக்கு பாலிட்டி பாடங்களைப் படிப்பதில் ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கலாம். அதையெல்லாம் கடந்து, நம் லட்சியமே குறியாக சற்று அதிகமாகக் கவனம் செலுத்தினோம் என்றால் வெற்றி எளிது.

05/12/2017

Chief justice of India Deepak Mishra

Address

பேருந்து நிலையம் திண்டுக்கல்
Dindigul
624002

Telephone

+919843437051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangam TNPSC Study Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sangam TNPSC Study Center:

Shortcuts

Share