08/05/2023
மரியாதைக்குரிய பெற்றோர்களே...
அன்பு மாணவர்களே...
இன்று +2 ரிசல்ட். இன்னும் சில தினங்களில் SSLC, CBSC என வரிசையாக பப்ளிக் எக்சாம் ரிசல்ட் எல்லாம் வர போகுது.
இப்போ, பப்ளிக் எக்ஸாம் எழுதுன ஸ்டுடன்ஸ் அண்ட் பேரென்ட்ஸ் எல்லோரும் ஒருவித டென்ஷன்ல இருப்பாங்க.
டென்த் படிசவங்களுக்கு...
+1 எந்த குரூப் சேக்கரது?
எந்த ஸ்கூல் பெஸ்ட்?
எங்க நீட் கோச்சிங் கூடவே சொல்லி தராங்க.
எந்த குரூப் படிச்சா, நல்ல வேலை கிடைக்கிற படிப்பு பின்னாடி படிக்க முடியும்? இப்படி யோசனைகள்.
+2 முடிச்ச பசங்க அண்ட் பேரென்ட்ஸ்..
சொல்லவே தேவை இல்லை, செம்ம டென்ஷன்.
அதும் கொஞ்சம் மார்க் கம்மினா... இன்னும் BP வராத குறையிலதான் ஒட்டு மொத்த ஃபேமிலி இருக்கும்.
பசங்களும் ஒருவித பதட்டத்தில் இருப்பாங்க.
ஆனா, இவளோ பதட்டம் தேவை இல்லங்க...
உனக்கென்ன நீ சொல்லுவ...
வயித்த வலியும்... வாந்தியும்...தனக்கு வந்தா தான் தெரியும்னு நீங்க சொல்றது கேட்குது.
அப்படி இல்லங்க...
நிஜமாவே இவ்ளோ பதட்டம் தேவை இல்லை.
இங்க, இந்த சமூகத்தில் எல்லாருக்கும் இடம் இருக்குங்க.
என் அனுபவத்தில் சொல்றேன்க.
ஒரு சாதாரண ஸ்கூல்ல படிச்சுட்டு, நல்ல வேலைல இருக்கரவங்க, காலேஜ் முழுக்க படிக்காம சுத்தின பையன் பின்னாடி ஒரு நல்ல தொழில் பண்ணி சாதிச்சது. இப்படி வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு வாய்ப்பும், ஒரு இடத்தையும் வச்சிருக்கு.
இதுக்கு நெறய எக்சாம்பிள்ஸ் இருக்குங்க.
என்கூட டிகிரி படிச்ச ஒரு பையன், பின்னாடி அமெரிக்கா போய் செட்டில் ஆவானு அவனே நெனச்சது இல்ல.
அண்ணா யுனிவர்சிட்டில எம். இ. கிடைக்க, அந்த வாய்ப்பு விட்டுட்டு சொந்த ஊருக்கு வந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருந்த ஒரு பொண்ணுக்கு, விளையாட்டாய் செய்யப் போன காஸ்டிங் என்ற மனுஷனுடைய கைகளை வார்த்து எடுக்கக் கூடிய அந்த துறையில் மாதம் சுயமா ஒன்றரை லட்ச ரூபா சம்பாதிக்கிற வாய்ப்பு கிடைத்தது நான் பார்த்து இருக்கேன்.
அதனால திரும்பவும் சொல்ரேங்க.. இந்த பதட்டம் தேவையில்லாத ஒன்று.
ஆனா, நீங்க யோசிக்கிற மாதிரி உங்க பிள்ளைய ஒரு நல்ல ஸ்கூல்ல, பிளஸ் ஒன் அல்லது ஒரு நல்ல கல்லூரியில் டிகிரி சேர்த்துவிடுவது அப்படிங்கறது ரொம்பவே முக்கியம்.
சரி. அப்ப என்ன செய்யலாம்?
முதல்ல உங்க பிள்ளை கிட்ட அமைதியா, பொறுமையா, உட்கார்ந்து பேசுங்கள்.
மார்க் வந்தாச்சு. அவனுடைய +2 அல்லது டென்த் மார்க் என்னன்னு நமக்கு தெரிஞ்சாச்சு.
இப்போ பசங்களோட விருப்பம் என்ன? எந்த துறையே எடுத்து படிக்க விரும்புறாங்க? அப்படிங்கறது அவங்கள பேச விட்டு தெரிஞ்சுக்கோங்க.
அவங்க சொல்ற துறையை, அவங்க எப்படி தேர்ந்தெடுத்தாங்க? சும்மா சொல்றாங்களா? இல்ல, அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போறாங்க! அப்படிங்கறதுக்காக சொல்றாங்களா? இல்ல, பள்ளிகளில் யாராவது பெரிய ஆளுங்க வந்து பேசும் பொழுது அதில் இருந்து எடுத்துகிட்ட விஷயம், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், புத்தகங்கள்,கண்காட்சிகள், கல்வி அரங்கங்கள், இப்படி போன இடத்துல அவர்கள் பார்த்து, அவர்களுக்கு பிடிச்ச விஷயம்! இப்படி சொல்றாங்களா? அப்படிங்கறது நீங்க தெரிஞ்சுக்கோங்க.
பிறகு உங்களுடைய நட்பு வட்டாரம், சொந்தக்காரர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அதோட ஆசிரியர்கள், இவங்க கிட்ட எல்லாம் ஒரு சிறு ஆலோசனை பண்ணி உங்க பையனோட தேர்வு எதிர்காலத்திற்கு அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பா அமையுமா? அப்படிங்கறது உறுதி செய்து கொள்ளுங்கள்.
பையனோட தேர்வு சரியாய் இருக்கும் பட்சத்தில் அதையே நாம அவனுக்கு பிடிச்ச மாதிரி படிக்க விடலாம். இல்லாத பட்சத்தி,ல் நாம அவனுக்கு, அவன் சொல்லுகிற துறை சார்ந்து, எதிர்காலம் இருக்கக்கூடிய ஒரு புதிய துறையை வழிகாட்டி அதை அவனுக்கு புரிய வைக்கணும்.
ஏன்னா, எதையுமே வழிந்து திணிச்சோம்னா, பசங்களுக்கு அதன் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு வெறுப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கு. அதனால அவங்களுக்கு புரிய வைக்கணும். அது ரொம்ப முக்கியம்!
சரி. இந்த ஸ்டேஜ்ல, இப்போ பையன் படிக்க வேண்டிய துறைய நாம பைனலைஸ் பண்ணிட்டோம்.
அடுத்து, இந்த படிப்பு எந்த பள்ளியில் அல்லது எந்த கல்லூரியில் இருக்கு?
பையன் எடுத்திருக்கக்கூடிய மார்க்குக்கு அந்த பள்ளி அல்லது கல்லூரி கிடைக்குமா?
ஒருவேளை, கிடைக்காது! அப்படின்னா இரண்டாம் கட்ட நிலையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், என்னென்ன? இதையெல்லாம் நம்ம பார்க்கணும்.
இந்த கட்டத்தில் முக்கியமான விஷயம்! பசங்க பரிட்சை எழுத ஆரம்பிச்ச நாளிலிருந்து, இன்ன தேதி வரைக்கும் நிறைய செய்தித்தாள் விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், பள்ளிகளுக்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழியாக விளம்பரங்கள், உங்களுடைய போன் நம்பர், பையனுடைய போன் நம்பர், இது எல்லாம் எப்படியோ எடுத்து அதன் வழியாக உங்களுக்கு வரக்கூடிய கால். இது எல்லாமே, ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு துறையையும் ஒரு கல்லூரியையும் பத்தி சொல்லிக்கிட்டே இருந்திருப்பாங்க...
இந்த விஷயத்துல தான், நாம ரொம்ப கவனமா முடிவெடுக்கணும்.
ஏன்னா? இன்னிக்கி நம்ம எந்த ஸ்கூல்ல அல்லது எந்த கல்லூரியில் நம்ம பசங்களை சேர்த்து விடுகிறோமோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும்.
அதனால, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின், அட்மிஷன் - அப்படிங்கற பசிக்கு நம்ம பிள்ளைகள் இறையாகி விடக்கூடாது.
நாம முடிவு பண்ணி வச்சிருக்கிற கோர்ஸ் அல்லது படிப்பை மட்டும் தான் நாம கட்டாயம் படிக்கணும். நம்ம ஒரு முடிவோட போகும் பொழுது கல்லூரியில் அதைவிட இது நல்லா இருக்கும், இதைவிட அது நல்லா இருக்கும், அப்படின்னு சொல்லுவாங்க.
எதற்காகவும் நாம மனம் மாறிவிடக்கூடாது.
நான் ஏற்கனவே சொன்னபடி இங்கே சமூகத்தில் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பும், ஒரு இடமும் இருக்கு.
ஆனா, இப்ப நம்மளோட கடமை, நம்ம பிள்ளைங்க மனதளவில் விரும்பக்கூடிய, மனதில் பதிந்து இருக்கக்கூடிய படிப்பை படிக்க வைக்கிறதுதான்.
அதனால, பள்ளி, கல்லூரிகளின் விளம்பரங்களுக்கு இரையாகி விடக்கூடாது.
நீங்க நெனச்சி இருக்கக்கூடிய படிப்பை எந்தப் பள்ளி? எந்த கல்லூரி? சிறந்ததா தருது? அப்படிங்கறத ஒன்றுக்கு பலமுறை விசாரித்து தெரிந்து கொண்டு, பிறகு அந்தப் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு நீங்களே நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப், இது எல்லாவற்றையும் நீங்களே ஒரு முறை பார்க்க வேண்டும்.
வகுப்பறைகள், ஆய்வகங்கள் இவை முக்கியம் என்றால், அதை விட முக்கியம்,
ஆசிரியர்கள்.
அதனால், நீங்க தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர்கள் திறமையானவர்களா இருக்கிறார்களா?
கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்பும்,
மாணவர்கள் மீது அன்பும், அக்கறையும், கண்டிப்பும் இருக்கிறதா? என பேசி பார்க்க வேண்டும். திறமையான ஆசிரியர்கள் இல்லாமல் தரமான கல்வி சாத்தியம் இல்லை.
அதேநேரம், ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிறுவனமாக இருத்தல் அவசியம்.
இன்றைய காலகட்டத்தில், மேல்நிலை பள்ளி, அல்லது கல்லூரிகளில் தான், அதிக புகையிலை, பான் மசாலா, குட்கா பழக்கங்கள் உண்டாகிறது.
பெண் பிள்ளைகள் திசை மாறுவதும் இந்த பருவத்தில்தான்.
எனவே, தரமான கல்விக்கு நிகரான முக்கியத்துவம், ஒழுக்கத்திற்கும் தரப்பட வேண்டும்.
இவை தவிர, விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால், சரிவிகித உணவு, சுகாதாரமான தண்ணீர், விசாலமான அறைகள், சலவை வசதி, படிக்கின்ற சூழ்நிலை, விடுதியில் கண்டிப்பு இவற்றை நேரில் விசாரித்து முடிவு செய்ய வேண்டும்.
இது, தவிர கல்லூரி பேருந்து வசதி, அதற்கான கட்டணங்கள் குறித்தும் தெளிவு பெற வேண்டும்.
இறுதியில், கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம், இவைதவிர எந்த மறைமுக கட்டணங்களும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இப்படி, பல வகைகளில், பல கோணங்களில் சிந்தித்து, விசாரித்து சரியான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
சுருங்க சொல்வதானால், பாலிடெக்னிக், கலை, அறிவியல், பொறியியல். இப்படி எல்லா துறையிலும் வேலை வாய்ப்புகள், சாதிக்கும் வழிகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளின் கற்றல் திறன், உங்கள் பொருளாதார வசதி போன்றவற்றை பொறுத்து சரியான தரமான உங்கள் பிள்ளைகளுக்கு சரியான, தரமான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்.
மீண்டும் நான் இதை சொல்லி நிறைவு செய்கிறேன்.
சமூகத்தில் எல்லாருக்கும் வாய்ப்பும், இடமும் இருக்கு.
பதட்டம் வேண்டாம். நிதானமாக தேர்வு செய்யுங்கள்.
பொது நலன் கருதி,
Dr. R. ஜோதிமுருகன் Ph. D.,
விரிவுரையாளர்
இயற்பியல் துறை
சக்தி பாலிடெக்னிக் கல்லூரி
சக்தி நகர், ஆப்பக்கூடல் - 638 315
Ph.: 8660189958