08/07/2017
நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது, அட்டை விளையாட்டுகள் (போர்ட் கேம்ஸ்) எதற்காக?
தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன தொழில்நுட்பங்களின்மூலம் கற்பதில் பல நன்மைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம், அதனைச் சிறப்பாகக் கண்டு அறியலாம். ஆனால், இந்தத் தொழில்நுட்பக் கருவிகளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவது நல்லதல்ல. குறிப்பாக, செல்ஃபோன்கள், ஐபேட்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால், மாணவர்களின் பாடம் பயிலும் திறனுக்குப் பாதிப்பு வரக்கூடும்.
தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல்
தொலைபேசியில் விளையாடுதல், செய்தியனுப்புதல், பேசுதல், சமூக வலைத்தளங்களில் உரையாடுதல் போன்றவற்றுக்கு மாணவர்கள் எளிதில் அடிமையாகிவிடக்கூடும், இது அவர்களுடைய கவனத்தைச் சிதறச்செய்கிறது, அவர்கள் படிக்கும் நேரத்தைக் குறைக்கிறது. நவீன தொழில்நுட்பக்கருவிகளில் நெடுநேரம் செலவிடும் குழந்தைகள் பள்ளிப்பணிகளில் குறைந்த கவனம் செலுத்துவார்கள்; இந்தக் கருவிகளை அவர்களிடமிருந்து நீக்கினால் எரிச்சலடைவார்கள். இதனால் அவர்களுடைய தூக்கமும் பாதிக்கப்படலாம்; அடுத்தநாள் அவர்களுடைய சிந்தனை மெதுவாகலாம்.
படைப்பூக்கம் குறைதல்
• முன்பெல்லாம் குழந்தைகள் ஓய்வுநேரத்தில் புத்தகம் படிப்பார்கள், பிற குழந்தைகளுடன் பேசுவார்கள், சுறுசுறுப்பான, படைப்பூக்கம் மிகுந்த விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்போது, அவர்கள் தொழில்நுட்பக் கருவிகளில் மூழ்கிவிடுகிறார்கள். இதனால் வாசிப்பது, பிறருடன் பழகுவது, விளையாடுவது போன்றவற்றுக்கு நேரம் குறைகிறது. குறிப்பாக, படைப்பூக்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகமென்பது மிகப்பெரியதுதான்; ஆனால், அது ஒரு கட்டமைப்புக்குட்பட்டது. அங்கே கற்பனைக்கு அவசியமில்லை, குறிப்புகளின் அடிப்படையில் விளையாடும் விளையாட்டுகளைப்போல் அங்கே புதுமைச்சிந்தனை தேவையில்லை. இதனால், சில குழந்தைகளின் படைப்பூக்கம் குறைகிறது, அவர்களால் தங்களைத்தாங்களே சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள இயலுவதில்லை.
நலக்கேடு அபாயம்
• நவீன தொழில்நுட்பக்கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் பலவிதமான நலப்பிரச்னைகள் வரக்கூடும். சுறுசுறுப்பற்ற வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சிக்கு இடமிருப்பதில்லை; இதனால் உடல்பருமன் அபாயம் அதிகரிக்கிறது. கணினிகள், ஐஃபோன்கள் மற்றும் வீடியோ கேம்கள் பயன்படுத்தும் பின்னொளித் திரைகளால் கண் பிரச்னைகள் வரலாம்; ஒவ்வொன்றுக்கும் உடனுக்குடன் எதிர்வினையாற்ற வேண்டியிருப்பதா ல் அழுத்தம் அதிகரிக்கலாம். தொடுதிரையில் அதிக நேரம் செலவிடுவதால், தொலைநோக்கில் நிறைய பிரச்னைகள் வரலாம் என்று மருத்துவர்களும் சிகிச்சையாளர்களும் தெரிவிக்கிறார்கள். டாப்லெட், லாப்டாப் போன்ற கருவிகள் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தருகின்றன, அவர்களுடைய சிந்தனையைத் தூண்டுகின்றன என்று பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், இப்படித் திரைகளில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் வளரும் உடல்களைப் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்களும் சிகிச்சையாளர்களும் கருதுகிறார்கள்.
மூளைச் சேதம்
தொழில்நுட்பப் பயன்பாடானது நம் மூளை அமைப்பை மாற்றிவிடுகிறது; அது எப்போதும் நல்ல மாற்றம் என்று சொல்ல இயலாது. இத்தகைய தொழில்நுட்பக் கருவிகளில் அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகளின் மூளையில் நிரந்தர சேதம் உண்டாகலாம் என்று அறிவியலாளர்கள் கவலைகொள்கிறார்கள்.
தகவல் தொடர்பு குறைதல்
குழந்தைகள் தொழில்நுட்பக் கருவிகளில் அதிகக் கவனம் செலுத்துவதால், பிறருடன் உரையாட அதிக நேரமிருப்பதில்லை. சிறிய குழந்தைகள் பிறருடன் கலந்து பழகுவது அவசியம். அவர்களுடைய சமூகத் திறன்கள் வளரவேண்டும், புதிய நண்பர்களைச் சந்திக்கவேண்டும், பேசவேண்டும். இது அவர்களுடைய வளர்ச்சிக்கு முக்கியமானது, நன்மை தருவது. ஒருவேளை அவர்கள் பிறருடன் பழகாமல் வளர்ந்தால், அவர்களுக்குப் பிறருடன் பேசுவது பிடிக்காமலே போகலாம், நண்பர்கள் இல்லாத குழந்தைகளாக அவர்கள் ஆகிவிடலாம்.
வருமுன் காப்பதே நல்லது என்று பெரியோர்கள் சொல்வார்கள். சிறு குழந்தைகளுக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகள் அவசியமே இல்லை. நாமெல்லாம் வளர்ந்தபோது இந்தக் கருவிகள் இல்லையே, நாம் நன்றாகதானே வளர்ந்தோம்? ஆகவே, அவர்கள் இயல்பாக வளரட்டும், பொம்மைகள், ரிமோட் கார்கள், புதிர்கள், படப்புத்தகங்கள், போர்ட் கேம்ஸைப் பயன்படுத்தட்டும். இது அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி தரும்!
குழந்தைகளை நவீன தொழில்நுட்பக் கருவிகளிலிருந்து விடுவிக்க வருகிறது, eCAVE….
நன்மைகள்
போர்ட் கேம்ஸின் நன்மைகள்
• எல்லா வயதில் உள்ள மாணவர்களும் போர்ட் கேம்ஸ் விளையாடலாம்; இதன்மூலம் அவர்கள் அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம். போர்ட் கேம்ஸ் அவர்களுக்குச் செயல்பாடுகளை வழங்கி ஊடாடலை உருவாக்கும் ஒரு முக்கியமான கருவியாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் ஆர்வத்துடன் விளையாடுவதற்கான சூழலை உருவாக்குகின்றன; அத்துடன், ஆபத்தில்லாத, மகிழ்ச்சியான, அதேசமயம் போட்டியுணர்வும் கொண்ட சூழலை வழங்குகின்றன, உள்ளடக்கத்தின்மீது கவனம் செல்கிறது, கற்றுக்கொண்டவை வலியுறுத்தப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுகளில் தவறு செய்யும் குழந்தைகள் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, தவறுகளும் நல்லவையே. இதிலுள்ள பலகையே ஒரு காட்சி பிம்பத்தை உருவாக்குகிறது, விவரங்களுடன் இணைய உதவுகிறது. விளையாட்டு அம்சங்கள், உரையாடல்கள் மற்றும் சக அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பிரச்னைகளைத் தீர்த்தல், உள்ளடக்கங்களைப்பற்றி உரையாடல் போன்றவை கற்றலை ஊக்குவிக்கின்றன. விளையாட்டுகள் கற்றலை வலியுறுத்தும்வகையில் வடிவமைக்கப்படுகின்றன; கற்றவை மனத்தில் நிற்பதை உறுதிப்படுத்துகின்றன.
• குழந்தைகள் இவற்றை விரும்பி விளையாடுகிறார்கள்; குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து விளையாடுவதற்கான நல்ல வாய்ப்புகள் இவை. குழந்தைகள் வயதானவர்களுடன் விளையாடும்போது, அவர்கள் வேறு பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்: வெல்வது எப்படி, தோற்றாலும் கண்ணியத்துடன் இருப்பது எப்படி, நல்ல பழக்கங்கள்.
• சிறந்தபொழுதுபோக்கு
• குழுப்பணி
• தரமானகுடும்பநேரம்
• மாறிமாறிவிளையாடுவது
• முன்னோக்கிச்சிந்திப்பது
இதற்கெல்லாம் மேலாக... மகிழ்ச்சி! கொண்டாட்டம்
சுருக்கமாகச் சொன்னால், விளையாட்டே மகிழ்ச்சிதான். அந்த ஆனந்தம் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கட்டுமே
இவ்விளையாட்டுகள் வளர்க்கும் திறன்கள்
• கேள்வி கேட்கும் திறன்
• பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்த்தல்
• உணவு மற்றும் ஆரோக்கியம்
• உணர்வு மேலாண்மை
• தமிழ் மொழித்திறன் மற்றும் இலக்கணம்
• சரியான முடிவெடுத்தல்
• எதிர்கால திட்டமிடல்
• பேச்சுத்திறன்
• வார்த்தை விளையாட்டு
• காட்சி தகவலியல்
• வாக்கியத்தில் அமைத்தல்
• நடிப்புத்திறன்
வழங்கப்படுபவை
தகவல் தொடர்புத் திறன்களுக்கான 200 போர்ட்கேம்ஸ்,
தமிழ்மொழியில் 200 போர்ட்கேம்ஸ்,
வாழ்க்கைத் திறன்களுக்கான 200 போர்ட்கேம்ஸ்...
எல்லாக் கல்வித் திட்டங்கள்... எல்லாப் பாடத் திட்டங்களுக்கும் பொருந்தும்