24/07/2017
நாம் அதிகமா உண்ணும் உணவு, இட்லி, தோசை மற்றும் சாதம். நல்ல உணவு வகைகள் தான், ஆனால் எப்படிபட்ட தோசை, இட்லி சாப்பிடுகிறோம்?
பெரும்பாலும் நம்ம மக்கள் மாவை வீட்டில் ஆட்டுவது இல்லை, கடையில் வாங்குகிறோம். எப்படிபட்ட அரிசி கொண்டு இந்த இட்லி மற்றும் தோசை மாவு செய்யப்படுகிறது என்று தெரியுமா?? சுத்தமாக உயர்தர பொன்னி அரிசி கொண்டு இந்த தோசை மற்றும் இட்லி மாவு செய்யப்படுகிறது என்று சொன்னால் அதில் செய்யற இட்லி கூட நம்பாது. நம்ம ஊரு கூப்பன் அரிசி தான், நம்ப முடியவில்லையா பின்ன நம்ம ஊருல எத்தனை பேர் இன்னம் வீட்டில் கூப்பன் அரிசி சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். நாம ஒன்னும் ஒரிசா அல்லது பீஹாரில் இல்லை தமிழ்நாடு இன்னம் கூப்பன் அரிசி சாப்பிடுகிறார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள். மிருதுவான தோசை மற்றும் இட்லியை செய்ய என்ன என்ன கலக்க முடியுமோ எல்லாவற்றையும் கலக்கிறார்கள். அப்போ வீட்டில் ஆட்டப்படும் இட்லி மாவு நல்லதா என்றால், கெட்டது இல்லை ஆனால் நல்லது என்று சொல்ல முடியாது. சுத்தமாக உமி நீக்கப்பட்ட அரிசி(GMO modified) உளுந்து(GMO modified) இதில் செய்யப்பட்ட அரிசி மாவு எப்படி சத்து இருக்கும். கெடுதல் இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை.
எங்க ஊருல ஒரு பாட்டி இருக்கு அந்த பாட்டி 3 நேரமும் அரிசி சாதமும் மோரும் தான் சாப்பிடுவாங்க. ஆன ஒரு நோயும் இல்லை, 95 வயசுல ஆரோக்கியமா தான் இருக்காங்க. அவங்க ஓடி ஆடி வேலை செய்யராங்க, தேவையான சத்து அவங்களுக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால் நாம அப்படி இல்லை அமர்த்த இடத்தில் தான் வேலை செய்கிறோம் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான உணவு பொருள்களை உண்ணும் போது மட்டுமே அது நடக்கும்.
முதலில் நாம் வயறு முட்ட உண்ணும் பழக்கத்தை விட வேண்டும். பசி அடங்கும் வரை சாபிட்டால் போதும், வயறு நிரம்ப வேண்டும் என்று அவசியம் இல்லை. சத்து இல்லாத உணவை வயறு முட்ட உண்டலும் பயனில்லை, சத்தான உணவை நாலு பருக்கை சாபிட்டால் போதும்.
சாமை தோசை(அடை) மாவு.
மிகவும் எளிமையானது ஆனால் உங்க அவசரத்துக்கு 2 நிமிடத்தில் தயாராகாது. 2 நிமிடத்தில் சாபிட்டால் 4 நிமிடத்தில் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும். உணவு என்பது ஒரு கலை, ரசித்து சமைக்க வேண்டும் ருசித்து சாப்பிட வேண்டும்.
சாமை தோசை மாவை தேவையான தண்ணீர் கொண்டு கலக்க வேண்டும், மாவை கலக்குவதற்கு கைகளை உபயோகபடுத்துங்க, கரண்டிகளை அல்ல. பிறகு 6 மணி நேரம் காத்திருக்கவும்(சிறிது புளிக்க வேண்டும்). பிறகு பெரிய வெங்காயம், மிளகாய் அல்லது மிளகு, கொத்துமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு தோசை போன்று ஊற்றவும், சத்தான, ருசியான சாமை அடை அல்லது தோசை ரெடி.
இத்துடன் தேங்காய் சட்னி கொண்டு சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.
(தோசை சுடுவதற்கு, தேங்காய் எண்ணை அல்லது கடலெண்ணெய் பயன்படுத்தவும், வெறும் தண்ணியில் ருசி வராது)
Order your millet ready mix items in only at http://beonly.in/