Makkal Noolagam மக்கள் நூலகம்

Makkal Noolagam மக்கள்  நூலகம் மக்கள் நூலகம்

Makkal Noolagam
11/04/2018

Makkal Noolagam

fb.com/themakkalnoolagam
26/04/2017

fb.com/themakkalnoolagam

நடிகர் சிவக்குமார் அட்வைஸ்நாலரை மணிக்கு விழிப்பு. ஒன்றரை மணி நேரம் வாக்கிங். வாக்கிங் இல்லாத நாட்களில், வீட்டிலேயே எட்டு...
07/03/2015

நடிகர் சிவக்குமார் அட்வைஸ்

நாலரை மணிக்கு விழிப்பு. ஒன்றரை மணி நேரம் வாக்கிங். வாக்கிங் இல்லாத நாட்களில், வீட்டிலேயே எட்டு வகையான யோகா. ராத்திரி ஒன்பது மணிக்குக் கட்டாயம் தூங்கப் போய்விடுவேன்.

பேரக் குழந்தைகள்தான் சுறுசுறுப்புக்குக் காரணம். காலை 7.20 பெசன்ட் நகர் சூர்யா வீட்டுக்குப் போய், பேத்தியை பிக்கப் பண்ணி, ஸ்கூல்ல கொண்டுவிடுவேன். திரும்பி வந்து 8.45க்குப் பேரனைக் கொண்டுபோய் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். தனிமை, மனஅழுத்தம்னு சொல்றவங்க, குழந்தைகளோட நேரம் செலவழிச்சா, சந்தோஷம் தானா வந்துடும்.

நிறைய சிறுதானியங்கள் சாப்பிடுறேன். காலையில் சிறுதானியக் கஞ்சி, ஆவியில் வேகவைச்ச ஏதாவது ஒரு டிஃபன். லஞ்சுக்கு மூன்று சப்பாத்தி, நிறையக் காய்கறி, வரகு அரிசி சாதம் ஒரு கரண்டி. சாயங்காலம் பப்பாளி, மாதுளை, பாதி ஆப்பிள். இரவுக்கு இரண்டு இட்லி, ஒரு தோசை, இடியாப்பம் தேங்காய்ப்பால்னு லைட்டா சாப்பிடுறேன். டீ, காபி குடிக்கிறது இல்லை. நிறையத் தண்ணீர் குடிக்கிறேன்.

மனசை லேசா வைச்சுக்க நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறேன். சொற்பொழிவுக்குத் தயார் பண்றது, எழுதறதுனு என்னை எப்பவும் பிஸியா வைச்சுக்கிறதால சோர்வு பக்கத்திலயே வர்றது இல்லை.
-
மக்கள் நூலகம்
facebook.com/themakkalnoolagam.com
facebook.com/makkalnoolagam

வாசிப்பது பற்றி..எழுத்தாளர் சுஜாதா அவர்கள்..தினம் பத்து நிமிடமாவது படியுங்கள் .தினம் படிக்க வேண்டியது முக்கியம்.மனசுக்கு...
02/03/2015

வாசிப்பது பற்றி..எழுத்தாளர் சுஜாதா அவர்கள்..

தினம் பத்து நிமிடமாவது படியுங்கள் .தினம் படிக்க வேண்டியது முக்கியம்.

மனசுக்குள் படியுங்கள்.

ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகங்கள் வைத்துக்கொண்டு படிக்கலாம்.

எல்லோருடைய முதல் புத்தகங்களைப் படியுங்கள் . இருபது விழுக்காடு Fiction , எண்பது Non fiction.

படிக்கக் வேண்டிய புத்தகங்களின் பட்டியல் வைத்திருங்கள்.

வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் கியூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.

நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

வாசிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை ...
02/03/2015

வாசிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான்.
நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.
-
மக்கள் நூலகம்,
நடுப்பாளையம் பிரிவு,
கோயம்த்தூர்-641402.
9894544778
[email protected]

02/03/2015

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). ஏதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
-
மக்கள் நூலகம்,
நடுப்பாளையம் பிரிவு,
கோயம்த்தூர்-641402.
9894544778
[email protected]

02/03/2015

வாசிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான்.

நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.

“ உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சி...
02/03/2015

“ உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் ”

02/03/2015
27/02/2015

புத்தகத்தை வாசிப்போம் - நேசிப்போம் - சுவாசிப்போம்.

Address

243, Sigaram Makkal Maiyam, Pappampatti Post
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Noolagam மக்கள் நூலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Makkal Noolagam மக்கள் நூலகம்:

Shortcuts

Share

Category