Dr. Chandrasekaran Subramaniam

Dr. Chandrasekaran Subramaniam This is a fan page created by students and is dedicated to our beloved teacher and guide! Posts writ

05/10/2025
15/01/2024

அறிவியல் தமிழ்த்தாய் வாழ்த்து
=====================

நீராறுஆறும் முக்கடல்சூழ்முக்கோணநிலப்பரப்பும்
சீரோடும்சிறப்போடும் வாழவைக்குமண்ணிதுவே!
எக்கணமும் தீயவடவரும் பக்கமுறுத் தெலுங்கரும்
காவிரி மறுக்குங் கன்னடரும் இருந்த போதுமே
எம்மொழிக்கும் தாயான தமிழ்உதித்த நிலனிதுவே
எத்திசையும்பரவ எக்கலையும் இம்மொழிவரவே!
இனிமேல் தமிழினமே! பழம்பெருமைபேசாநிகழும்
இக்கால ஏற்றபடி அறிவியல்தமிழாய் வளரனுமே!
அத்தமிழை அனைத்துலகும்போற்றிடவேஅனைவர்
அவரவர்பங்கு மொழிப்பணிக்கு வாழ்த்துதுமே!!

04/12/2021
18/09/2021

புரட்டு நிறுத்தி மண்ஆசி பெறுகவே !!
========================

புரட்டு புரட்டு எனவெறும் புரட்டு ஆசிகள் தரும்
ஆரிய ஆரூடமதை இனியேனும் விரட்டு!
கரட்டுக்கல்லில் அமர்ந்த தவக்குறு முனிகளும்
தேவாரம் பாடனும் முகக்கவசம் போட்டு!

வரட்டு சமசுகிருதப் பூசையால் தில்லைஅரனும்
திருட்டுச் செல்வரான திருப்பதி அரியும்
முரட்டு முட்டாள்தனம் உம்உரிமை எனினும் எப்
புரட்டாசியிலும் எவ்விறையுமிங்கு வாராது!

திரட்டுக் கரிமில வளி உமிழ்வால் திரண்ட பனிப்
பாறைகள்உருக அடர்ந்த வனங்களு மழியவே
புரட்டாசி மகாபிரதோசம் போனஆண்டும் முன்னும்
வரவில்லையோ? மகாசனியா? மடச்சனியா?

உருட்டு உலகமிதை காப்போம்! திருட்டு மதங்கள்
தமிழினத்துக்கு எதற்கு சைவச் சமயரே?
குருட்டுச் சனிப்பிரதோசம் இனியும் காண்போரே!
வளையக் கோளுக்கு ஏதடா ஏழரைத் திதி?

முரட்டு பக்தி தமிழ் இனத்தின்மீது திரும்பட்டும்!
திரட்டும் சக்தி செந்தமிழுக்காக சேரட்டும்!
வரட்டு மத மூடங்கள் மண்ணாகிப் போகட்டும்!!
இரட்டிப்பு எழுச்சி இத்தமிழினம் காணட்டும்!!

உலக விருத்தம்==========(மருதகிரியார்)உலகில் நாள்தோறு மனைத்தின மக்களுமடிய       உரிய வழியும் மருந்து மில்லாதாகவேமரபுவழி வ...
31/05/2021

உலக விருத்தம்
==========
(மருதகிரியார்)

உலகில் நாள்தோறு மனைத்தின மக்களுமடிய
உரிய வழியும் மருந்து மில்லாதாகவே
மரபுவழி வந்தசித்த முறைகண்டு குணப்படுத்த
கருபிணிகள் இல்லாதினி யொழியவே!

உலவிவரு கிருமிபலிகள் மிகதிமாக பரவிவருந்
தொற்று வாராது தடுத்து அவைகளை
நிரவிவரும் உயிர்க்காற்று பரிசுத்தமாய்ப் பரவவே
மரஞ்செடி கொடிகள் எனநட்டாலென்ன?

நதிகுளமு சுனையருவி உடன்சுமந்துவரும் பல
மருந்து தனிமங்கள் மனிதம் காணாதன :
நிதியென இயற்கைச் செல்வமதைப் போற்றாத
மண்ணெதுவுமிங்கு செழிப்பதில்லையே!

தடபுடவென கடகடவென வரும் புதுப்புனலை
நெறுநெறுவென பறுபறுவென படியும்
திடதிடவென திட்டாயமையு மணற்ப் படுகைகள்
குறுகுறுவென ஆனதே மிப்பிணிமூலமே!

உலகைப் படைத்தவனுக்கு கோயிலைக் கட்டாது
படைத்துலவும் பறவையினப் புழுவினமும்
கலகமிடப் பலவகை வுயிரினமும் இணைந்துவாழ
சேவலுக்கு மயிலுக்கு வாழ்த்துச் சொல்லவே!

உலகெலாம் உணர்ந்தவன்யாருமில்லைஇறை
வருக்குத் திருமணம் தேவையில்லையே!
பலகாலம்சொன்னதையேயானுபகரவரவில்லை
உலகம் குளிர்ந்தது அனைத்துயிருக்காகவே!

12/04/2021

அகன் - என் பேரன் 03.04.2021
=====================

உயிர் முதலும் உயிர் மெய் வல்லின இடையும்
தன்பதம்கடை மெய்யுங்கொண்ட அகன்
உயர்தமிழ் அகர முதலும் மெய்யியல் னகரமும்
இனப்பொருத்த மென் வல்லினக் கரகமும்
மெய் மெய்யே நிறைந்தவன் பொய்யுரைக்காக
புள்ளின அழகன்மயிலோன் குகன் இளவல்!
பயிர்வளர் வயல்போல் தயிர்கடை மத்துபோல்
தமிழ்நுட்பம் கடைய வந்த பேரன் அகனே!

நகமதுபவள முகமதுதந்த உணர்செந் தமிழாக
சரவண பவம னையதுவரு குகனே மயிலாக
சுகமதுதங்க அறிவதுதந்தஇயலுமிசையுனதாக
கசடத பறய ரலவ ழள எனுமுயிர்மெய்யில்
புகழது தங்க திறமது மிஞ்ச எனது யிர்பெயரன்
அகவது மொழிய அருந்தமிழ்பாட அகனென
திகழது எரிய எரிவது திகழ கருவது தந்த திரு
பெறுவதுயர உயர்வது பெறுக வாழியவே!!

அகனவன் பெயரவன கமகிழபங்குனி சனிஇனி
அகமது பெயர வடவள்ளிப் பாட்டனவன்!
தகனவன் தலைமுடிகண்டு முடிசூடுமூலனிவன்
திருமூலனே திருமுருகன் அருளாலேஎன
மகன்வழிப்பேரனால் இன்னுந் தமிழை நன்றாக
அருவியலாய் செய்ய எனக்குணர்த்தவே நீ
முகமது தங்க விழியது வைர விரல்எழுத்தாணி
எனக்கோவை மருத்துவமனை புதுவரவே!!

05/02/2019

Address

Deivam Nagar , Vadavalli
Coimbatore
641041

Telephone

9841983789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Chandrasekaran Subramaniam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category