வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்

  • Home
  • India
  • Coimbatore
  • வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்

வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் Dear all ,

This is Varmakalai asaan Dr. Rajendran Krishnaraj official fb page. Run by his family and student jayakumar

19/04/2026

Varmaoil for neural problems, joint pain and diabetic wounds.
For order Whatsapp 9500746379

09/04/2026

பாரடா அனுமாரைப் பூசை வேணும்
பத்திரமாய் அஞ்செழுத்துப் பூசை வேணும் ( #வர்மசூத்திரம் )

அனுமன் நடசாரி

#தமிழ்

08/04/2026

தலமும் சரமும் பட்சியின் ஆட்சியும்
வலமும் இடமுமான நாடியின் நிலையும்
மலம்தொடா சுழியும் குண்டனலி
பலமாம் பிராணணும் அறி

இன்னும் பலவுண்டு பகுத்தறி பிராணவகை
மன்னும் ஆயகலையுள் மருத்துவமாம் சிந்தாமணி
தொன்னறு குமரி தோன்றி பின்னியே
நன்னெறி தமிழர் வாழ்வில் வகையாகி
கன்னலுள் சுவையுடைத்தாற் போலே

ஆமிதுவே மறைத்துப் போற்றி வளர்த்தாரே
சாமிநிகர் ஆசான்மார் அவர்கட்கு வணக்கம்சொல்வாய்
நேமித்த மூலியெலாம் சுத்தி செய்யே
தாமிதுவாய் நோய் தீரும்

ஈங்கோர் மருத்துவமுண்டு நன்னீர் பலவாம்
தேங்கிள நீரும் தேனிரும்புடை அயநீரும்
வாங்காப் பொன்னும் நீராக்கி அதுபோலே
ஏங்கிடு ஈரலில் ஈசன் வாயு நிரப்பிடில்
தாங்கிடு மெய்யில் அமிர்தமாமே

கோனான குருமார்கள் குலங்காப்பீர் சீடமாரே
மேனாட்டு மாந்தரெல்லாம் மண்டியிட்டு காத்திருப்பார்
தேனாட்டம் அவர்கட்கு தித்திப்பீர் தெளிவீரே
மீனாடு கொடியுடை பாண்டியம்போற்றி

Varicose vein oil availableWhatsApp 9500746379
05/04/2026

Varicose vein oil available

WhatsApp 9500746379

குறளறியா சங்க காலம்.அங்கமுழுதும் நீறணிந்து திரிந்த சடைசரத்துடை சாம்பசிவம்போல் காட்சியளித்த யுவனொருவன் அடர் கானகத்துள் வே...
05/04/2026

குறளறியா சங்க காலம்.
அங்கமுழுதும் நீறணிந்து திரிந்த சடைசரத்துடை சாம்பசிவம்போல் காட்சியளித்த யுவனொருவன் அடர் கானகத்துள் வேலைக் கையில் தரித்து வேங்கையினை வேட்டையாடுவது போலாய் வேழச்சுவடுகள் பதிந்த தடத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.
ஒற்றைக் கச்சையை இடுப்பினில் முடித்து ஈரல் துடிக்க வாய் வழியே காற்றை சுவாசித்தவாறே...

சரசமாடிக்கொண்டிருந்த அரவங்கள் வெருண்டு மின்னல் நொடியில் விலகிக்கொள்ள அவன் காலடிச் சத்தங்கள் பூமியை பிளக்கும் தொடரிடி போலாய்,அதற்கொப்பான இதயத்துடிப்பும் பிரளயத்தில் சிக்கிய விருட்சமொடியும் சத்தத் தொடராய் ஒன்றையொன்று ஓசைப்போரில்....

ஹா...மெல்ல விளங்கியது....அவ்விருட்டுவனத்தில் தூரத்தே வானத்திலேகிய ஒளிப்பந்து.ஆம் பறக்கும் தட்டு.வானுயிர்களின் வேட்டைக்காடாய் ஒதுங்கியிருக்கும் நாவலந்தீவின் எச்சத்திட்டாய் அக்குறுந்தீவில்,காதலியைக் கடத்திக்கொண்டு நடு இரவில் மர்ம உயிர்கள்....இதோசற்றுமுன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சிறு மாந்தர் குழாமிலிருந்த மடந்தை அவளை...
கெட்ட சொப்பனத்தின் மையத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனை மையல் அவளின் வாயைப்பொத்திய அருவருப்புக் கரங்களின் முட்குத்தல் சருமத்தின் நெடி தாங்காது அபலைக் குரலெலுப்புமுன் முனகல் மட்டும் வெளிப்பட,மந்திக்கூட்டத்தின் மந்தகாச சமிக்ஞையோ என விழிக்க....தரதரவென இழுபடு சப்தம்....வாயு வேகத்தில் ஆரணங்கவளை இழுத்துச் சென்ற உருவம் கணநேரத்தில் விழிகள் விட்டு மறைந்தது...

ஓசை ஒலித்த திசையில் ஓடிய அவன் எதிரே ஓங்கார வெடிப்பாய் மேல் எழுந்த விண்கலத்தைப் பார்த்து குறிதவறாது எறிந்தனன் வேலை..

ப்ச்ச்...உலோக சப்தங்கள் உராய்ந்து தெறித்து தொலைவில் காணாது மறைந்தது அவ்வாயுதம்...

கண்ணீர் உகுத்து இயலாமையின் தேம்பலுடன் மண்டியிட்டு தரையினை ஓங்கி ஓங்கி குத்தியவாறே வாய் அரற்றி காடதிர. பெருங்குரலெழுப்பினான்...

தொடரும்...

#தமிழ் #தமிழ்க்கவிதை

Shout out to my newest followers! Excited to have you onboard! Palani Samy, Srinivasan Singer
31/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Palani Samy, Srinivasan Singer

17/12/2022

திரிபுர சிவத்து அருளது பெய்யும்
தரித்திட்ட அவனது மதியது முழுதாய்
விரிந்திட்ட வானில் சித்தர் வலமாய்
உரித்திடு பாடம் உத்தரவாயே

நெய்யினு நன்மை எள்ளிட்ட எண்ணெய்
கொய்திட்ட வனமலர் உள்ளிடு பொருளே
தெய்திடு வேரெலாம் புள்ளென இருத்தி
பைய்யப் பொருத்தினேன் பாரீரே

தருத்தோல் உரித்து தகைந்திட்ட புடத்தில்
பருப்பிலா கடுக்காய் குங்கிலிய மெனவே
சருகிடை நடந்து அரவம்ஆனை பலவும்தாண்டி
பொருத்திய அனைத்தும் மருந்தாமே

நூற்றெட்டு கணிதம் அறிந்திட வேணும்
போற்றிடு அகத்தியன் ஆசியும் பேண
வேற்றிலா மருத்துவம் ஆரிது பகர்வார்
கூற்றுவன் நோயெலாம் ஓடிப்போமே

மருந்தென நுகர்ந்திட தைலம் இதுவாய்
அருந்திட ஆனைரசமது உண்டென கூறு
புரிந்திட இயலா உயிரியல் அணுத்திரள்
சொரிந்திடு மேனியில் சோர்விலையாமே

17/12/2022

சித்தர் மருந்து-இது
சிவனார் அருளிய அருமருந்து
அண்ட சராசரமாய் அனுக்க ஆற்றலாம்
அறிய இயலா அகத்திய ஞானத்து

அம்ச அணுவியல் ஆன்ம அறிவியல்
வம்சம் தழைக்க தரணியிலே தங்கியதே
தேரையன் தெளிவாய் தேர்ந்தெடுத்த
தீக்கணக்கு திருப்பானை தனைதீண்ட

முந்தை முனிவராம் எந்தை முன்னோர்
முடிவுறுத்த மூலியெல்லாம் முறையிட்டு
முக்காலம் மூப்பறுக்க அப்பன் அருளால்
நூற்றெட்டு பட்டைகளை நூதனமாய் இட்டேனே

இனிய காலை தொட்டு நல்மதியம் நாசூக்காய்
நாடினேன் நரன் காணா கானக மூலிநூறை
முத்தாப்பாய் முணுமுணுத்தேன் மூலந்திரம் தனை

தயவாய் வந்தார் தன்வந்தரி நம்வசமாய்
நங்வங் யங்சிங் மங்கெனவே மந்தரித்தேன்
மகிமையுடனே மகிழ்ந்திட்டார் பிறைமதி மகாதேவன்

இரசவாதி ரசனை போகன் போதித்தான் பொறுமையுடை
இசைபாடி விசைநடந்தேன் விந்தைவேர் கொணர
பாழ் உடலை பாதுகாக்க பைந்தமிழ் மருந்துண்டு
பதறாதீர் மானுடரே பக்குவமாய் செய்திட்டேன்

பாங்கான வனப்பூக்கள் வகையாக சேகரிக்க
சேனம் அமர் புரவியுடன் புலிப்பாணி
அருள்கூர்ந்தார்
அன்றைதினம் ஆகாயம் அதிரடியாய் இடிஇடிக்க இன்பமென்னவே இலைகட்கெலாம்.....

மாறி மாறி மாரி பெய்ய மனம்நிறைந்தேன் மாலை நேரத்தே....
மாசறு சித்தன் சிவவாக்கியன் ஆக்கிட்டான்
அறிவுப் பொழுதாய் அந்திப் பொழுதை

இதோ இங்கே இல்லத்து முன்பே
இனியசீடன் இணையுடனே இருட்டிரவில்
இயல்பாய்செய்தேன் வர்மத் தைலம் வாழ்வாங்கு
வாழி வாழி வர்மக்கலை வையத்துள் தனிச்சிறப்பாய்......

தமிழ் எனும்  கரை காணமுடியாத பெரு நீர்பரப்பை உள்ளடக்கிய அறிவு தேசத்தினுள் இன்றைய கல்விக்கு எட்டாத பல சூட்சுமங்களை நம் முன...
21/08/2021

தமிழ் எனும் கரை காணமுடியாத பெரு நீர்பரப்பை உள்ளடக்கிய அறிவு தேசத்தினுள் இன்றைய கல்விக்கு எட்டாத பல சூட்சுமங்களை நம் முன்னோர் தம் குரு சீடன் வழியாக பயிற்றுவித்தனர்...

இன்றைக்கு நாம் ராமாயணம் ,மஹாபாரதத்தில் பல செவியுறுகிறோம். பல உள்ளன.அதுவும் மஹாபாரதமெனில்...அப்பப்பா எத்தனை எத்தனை....

சரி விசயத்திற்கு வருவோம்....இராமாயணத்தை பற்றி சொல்லவேண்டுமானால் இராமாயணத்தை சுருங்க சொல்லின் இராமன் பிறந்தான் இராவணன் அழிந்தான் என்று கதையை சொல்லிடலாம்...
இடத்தில் இராமன் என்பதன் பொருள் இரா மண் என்றே பொருளாம்...அதாவது ஆள்வதற்கு மண் இல்லமால் காட்டுக்கு அனுப்ப பட்டவன் என்றும்...இராவணன் என்றால் வண்ணம் இல்லாதாவன் என்று சொல்லலாம்...அதாவது நிறம் இல்லாதவன் என்று கூறிடலாம்...நிறம் இல்லை என்றால்..வெள்ளை நிறமில்லாது கருப்பு நிறமுடையவன் என்று பொருள்...

மஹாபாரதத்தை சுருங்க சொல்லவேண்டுமெனில் ஒரு வாக்கியத்தில் சொல்லிடலாம்...பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்று..இதன் உள்ளர்த்தம் என்னவெனில் வியாசமுனிவர் மஹாபாரதத்தை இயற்ற நினைத்த போது அவரது கதை சொல்லும் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத விநாயகரால் தான் முடியும் என்று தீர்மானித்து..அவர் விநாயகரை வேண்ட அவ்வாறே விநாயகரும் ஒப்பு கொண்டு வியாசர் சொல்ல விநாயகர் எழுத முயற்சிக்க எழுதுகோல் அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாது முனை உடைந்துவிட தன தந்தத்தையே எழுதுகோலாக்கி நிறைவு செய்தார் என்று கூறப்படுகிறது. அவ்வாறே குரங்காய் முடிந்தது எனில் அனுமன் அர்ஜுனன் தேரில் கோடியாய் வீற்றிருந்து பாண்டவர்கள் வெற்றி பெற்றவுடன் தேர்க்கொடியிலிருந்து மறந்தேகியவுடன் மஹாபாரதம் முடிந்தது எனவாம்...

இதில் உள்ள ஒரு மிகப்பெரும் தமிழ் மருத்துவ சூட்சுமம் என்னவெனில்..பிள்ளையார் என்பது யானை..குரங்கு என்பது குரங்கே..அதாவது யானை காட்டில் என்னவெல்லாம் உண்ணும்? இலை தழைகள் தானே...அதுவும் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடக்கும் யானைக்கு நிறைய பழங்கள் இலைகள் என உண்டு அவற்றை அரைகுறையாக சாணமாய் தள்ளிவிடும்.
இங்கே தான் நம் தமிழ் மருத்துவ பொக்கிஷம் கிடைக்கிறது...அந்த சாணத்தை வைத்து உயிர் காக்கும் மருத்துவ செய்முறைகள் செய்தனர் நம் முன்னோர்...அதற்கு யானை ரசம் என்றும் யானை கிழி என்றும் பலவாறு வர்ம மருத்துவத்தில் உபயோகப்படுகிறது...

உங்களுக்கு சிறுவயதில் யானைச்சாணத்தை மிதித்த அனுபவம் உண்டா? அவ்வாறு குழந்தை பருவத்தே யானைச் சாணத்தை மிதித்தவர்களின் கால்களுக்கு பித்த வெடிப்பு வராது...உண்மை..
எவ்வாறெனில்..யானை உண்ணும் தாவரங்களின் சாரும்,யானையின் வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலமும் சேர்ந்து யானைச் சாணத்தை ஒரு உயர் மருந்து பொருளாக்கி விடுகின்றன...அதுவே நம் உயிர் காக்கும் மிக அருமையான சொத்தாக நம் தமிழ் முன்னோர் கையாண்டனர்...இன்றைக்கு எந்த நவீன மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலும் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலவே இயலாது...
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்....இறந்தாலும் ஆயிரம் பொன் என பழமொழியில் தான் எவ்வளவு அர்த்தங்கள்.....யானையின் முழு உடலும் அவ்வளவு இயற்கையின் ஒட்டு மொத்த நிறைவு...

அடுத்த பதிவில் தொடரும்......நன்றி வணக்கம்.

தமிழ் ஒரு மிகப் பழமையான மொழி.அத்தமிழ் பேசிய பண்டைத் தமிழர் உருவாக்கிய,மற்றும் பயன்படுத்திய கலைகள் மிக நுணுக்கமானவை,இக்கா...
25/12/2020

தமிழ் ஒரு மிகப் பழமையான மொழி.அத்தமிழ் பேசிய பண்டைத் தமிழர் உருவாக்கிய,மற்றும் பயன்படுத்திய கலைகள் மிக நுணுக்கமானவை,இக்கால ஆய்வு முறைகளுக்கும் அப்பால் ஆழமாயும்,பேரண்டம் போல விரிந்தும் புலன்களுக்கு அகப்படா நுண்தன்மையாகவும் இருந்தன.

இன்று நாம் காணக்கூடிய அவர்தம் படைப்பாக்கங்களின் விழுமிய் எச்சங்களையே நாம் நுகர்கின்றோம்.
விரித்துக் கூறின்,கணிதமும்,உடலியலும்,மருத்துவமும்,சிற்பக்கலை,கட்டிடக்கலை,ஓவியக்கலை,போன்ற எண்ணிலங்கா கலைகளை வெறுமனே இன்றைய விஞ்ஞானம் கொண்டு நோக்கின் அது கடலில் மிதக்கும் பனிப்பாறையின் முகப்பு அளவாய் மட்டும் காண்பது போலே.

எடுத்துக்காட்டாக பழந்தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட தாவர வகைகள்,கனிமத் தாதுக்கள்,விலங்கு பறவைகள் ஊர்வன போன்ற உடற்கூறுகள் முதலா அதன் வெளிப்படு திரவங்கள் வரை யாவும் மருந்து உற்பத்திக்கான திரவியங்களாய் பற்பல சூத்திரங்களாயும்,விகித கலப்புகளாயும் கலக் கணக்கிற்கேற்ப பிணிகளை அகற்ற தயாரிக்கப்பட்டு பயன்பட்டன.

அவற்றை கூராய்ந்து பார்க்கையில் உயிர்சார் அணுவியல் கலந்த வேதியியல் மறைஞானங்கள் புலப்படலாம்.

எண்ணென்ப,ஏனை எழுத்தென்ப என கடைச்சங்க காலத்து திருவள்ளுவர் இயம்பியுள்ளமை காலத்தை முன்னோக்கி பயணித்தால் முற்சங்க காலத்து தொல்காப்பியமும் எண்ணதிகாரம்,எழுத்ததிகாரம் என விரிதல் கண்கூடு.

அதற்கும் முன்னர் இன்றும் கிட்டா அகத்தியம் முதலான பல நூல்களில் என்னவெல்லாம் விளம்பப்பட்டதோ,அவை தற்காலத்து ஆய்வர்களின் கையில் அகப்பட வேண்டும் என்பதே எம் அவா.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய தமிழ்க்குடி என இன்றைக்கு பகிரப்படும் சொல்லாடலில் ஒரு திருத்தம் உள்ளது,அது வாளொடு அல்ல வாலொடு என்பதே சரி.வால் என்பது இங்கே அறிவை,ஞானத்தை குறிக்கும் சொல்.வாலறிவன் துணை என்றொரு சொல் வள்ளுவத்திலே கூறப்பட்டதை அறிவோமமல்லவா..அந்த வாலொடு என்பது திரிந்து வாளொடு என்றாயிற்று....
அதுபோலே சித்தர் என்ற சொல் முற்காலத்தில் அறிவர் என்றே அழைக்கப்பட்டது.

இன்றைக்கு வடவர் மட்டுமன்றி உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் பலரும் நம் பழந்தமிழறிவை நுகர்வோரே.காப்பியங்கள் முதல் இலக்கிய இலக்கண மரபுகள் என யாவும் தமிழில் இருந்து கிளைத்ததுவே...

காப்புரிமை சட்டத்தின் துணைகொண்டு சரியான சான்றுகளோடு நம் வாதத்தை சர்வதேச நீதிமன்றத்தில் முன் வைத்தால் தமிழர்க்கு கொடுக்கப்பட வேண்டிய ஈவுகள் பல்லாயிரம் கோடி அமெரிக்க செலாவணிகளாகும்...

உலகிற்கு வேளாண்மை முதல் நீர் மேலாண்மை தொழில் இணைவுகள் என எண்ணிலடங்கா வாழ்வியல் பயன்பாடுகளை ஈந்தளித்த தமிழர்க்கோர் ஓர் நடுவமின்றி பிரிந்து இயங்குவது சொல்லொணாத் துயரே.

ஆற்றாமையில் உங்கள் அன்பு ஆசான் இராசேந்திரன் கிருட்டிணராசு.

Address

34/2, Pari Nagar Edayar Palayam
Coimbatore
641025

Telephone

0919500746379

Website

Alerts

Be the first to know and let us send you an email when வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்:

Shortcuts

Share

Category