13/04/2025
விசுவாவசு ஆண்டு பலனை நீங்களே கணிக்கலாம்
1. வருடம் ஞாயிற்றுக்கிழமையில் வருடம் பிறந்தால் அடுத்த வருடம் திங்கட்கிழமையில் பிறக்கும் அதற்கு அடுத்த வருடம் செவ்வாய் இப்படி கிழமை வரிசையில் வருட உதயம் இருக்கும் (லீப் வருடம் தனி)
2. இந்த வருடம் எந்த திதியில் பிறந்ததோ அதற்கு 12 வது திதியில் அடுத்த வருடம் பிறக்கும்.
3. இந்த வருடம் எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அடுத்த வருடம் 11 வது நட்சத்திரத்தில் பிறக்கும்.
4. இந்த வருடம் எத்தனை மணியில் பிறந்ததோ இதில் இருந்து 6 மணி 12 நிமிடம் கழிந்து அடுத்த வருடம் பிறக்கும்.
தமிழ் வருடம் (சித்திரம் மாத பிறப்பு) ஞாயிற்றுக்கிழமை வந்தால் அற்ப மழை
திங்கட்கிழமை வந்தால் பெரு வெள்ளம்
செவ்வாய் கிழமை வந்தால் கலக்கம்
புதன் கிழமை வந்தால் புயல் காற்று அதிகம்
வியாழக்கிழமை வந்தால் சுகம் உண்டாகும்
வெள்ளிக்கிழமை வந்தால் பெருமழை உண்டாகும்
சனிக்கிழமை வந்தால் மழை இல்லை.
ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகியவைகளில் வந்தால் கெடுதி உண்டாகும்.
உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், திருவோணம், அவிட்டம், ரேவதி, மிருகஷீரிசம், மூலம் நட்சத்திரத்தில் வந்தால் உத்தமம்.
சுவாதி, சித்திரை, ரோகினி, சதயம், புனர்பூசம், மகம், அஸ்வினி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்களில் மத்திமம்.
மற்றவை அதமம்.
நவ நாயகர்கள்:
இந்த ஆண்டின் ராஜா, மந்திரி, அர்க்காதிபதி, சசியாதிபதி, சேனாதிபதி, ர்சாதிபதி, தானியாதிபதி, நீரசாதிபதி, மேகாதிபதி
1. அந்த ஆண்டின் யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு) எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே ராஜா வாகும்
2. சித்திரை மாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே மந்திரி யாகும்.
3. ஆனிமாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே அர்காதிபதி ஆகும்
4. ஆடிமாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே சசியாதிபதி ஆகும்
5. ஆவணி பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே சேனாதிபதி ஆகும்.
6. ஐப்பசி மாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே ரசாதிபதி ஆகும்
7. மார்கழி மாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே தானியாதிபதி ஆகும்
8. தைமாத பிறப்பு எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே நிரசாதிபதி ஆகும்
9. ஆணி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் என்று நுழைகிறாரோ அந்த கிழமைக்கு உரிய கிரகமே மேகாதிபதி ஆகும்
ராஜாவுக்கான பலன்
1. சூரியன் ராஜாவாக வந்தால் மிதமிஞ்சிய மழை பெய்யும். ஆனால் அக்னிபயமும், ஆட்சியாளர்களுக்கு பதவி இறக்கமும் உண்டாகும்.
2. சந்திரன் ராஜாவாக வந்தால் அதிக மழை பெய்யும், ஆன்மீக ஈடுபாட்டில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மத வளர்ச்சி உண்டாகும்.
3. செவ்வாய் ராஜாவாக வந்தால் கடும் பஞ்சம் பட்டினி, அக்னிபயம், விபத்துகள் ஏற்படும்.
4. புதன் ராஜாவாக வந்தால் அளவான மழை, வியாபார லாபம் உண்டாகும்.
5. குரு ராஜாவாக வந்தால் பக்தி பெருக்கமும் ஆலய வழிபாடுகளும் ஏற்படும்
6. சுக்ரன் ராஜாவாக வந்தால் பெண்கள் முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை, போதுமான மழை உண்டாகும்.
7. சனி ராஜாவாக வந்தால் பிறர்க்கு அடிமைபடல், அரசாங்கத்தால் தொல்லைகள், கவுரவ குறைவு, மிதமான மழை உண்டாகும்.
மந்திரிக்கான பலன்கள்
1. சூரியன் மந்திரியானால் மக்களுக்கு பொருள் இழப்புகள், துன்பங்கள், ஸ்திரமில்லாத ஆட்சி முதலியன உண்டாகும்.
2. சந்திரன் மந்திரியானால் அதிக மழை, விவசாய லாபம், உண்டாகும்
3. செவ்வாய் மந்திரியானால் பஞ்சம், பட்டினி, சொற்ப மழை உண்டாகும்
4. புதன் மந்திரியானால் அதிக மழை, மழையால் சேதம், விவசாய விருத்தி, அக்னிபயம் முதலியன உண்டாகும்
5. குரு மந்திரியானால் சுகம் விருத்தியாகும். பயிர்களால் லாபமும், உரிய காலங்களில் மழையும் உண்டாகும்.
6. சுக்கிரன் மந்திரயானால் மக்கள் சுகமாக இருப்பர், நீர்ப்பாசனம் மேன்மை பெறும், தன, தானிய விருத்தி உண்டாகும்
7. சனி மந்திரியானால் மக்களுக்கு பல வழிகளிலும் நிம்மதி குறைவும் உண்டாகும், பெறும் விபத்துகள் நிகழும், அற்பமான மழை பெய்யும்.
சேனாபதிக்கான பலன்கள்
1. சூரியன் சேனாபதியானால் மழை குறையும், ஸ்திரமற்ற அரசியல் நடக்கும்.
2. சந்திரன் சேனாபதியானால் பெண்கள் முன்னேற்றம் அடைவர், மழை அதிகம் பெய்யும், மக்கள் சுகமோடு வாழ்வர்.
3. செவ்வாய் சேனாபதியானால் அண்டை நாட்டோடு பகை உருவாகும். யுத்தம் ஏற்படும்.
4. புதன் சேனாதிபதியானால் கலைகள் விருத்தியாக்கும், அறிஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.
5. குரு சேனாதிபதி ஆனால் நாட்டில் சமாதானமும் நல்வளமும் நிலவும், நிர்வாக சீர்திருத்தமும், நீதிக்குத்தக்க மரியாதையும் ஏற்படும்
6. சுக்கிரன் சேனாதிபதியானால் விவசாயம் மேன்மை அடையும், என்றாலும் அண்டை நாட்டோடு உறவுகள் மோசமடையும்.
7. சனி சேனாதிபதியானால் அரசுக்கு எதிரான போராட்டம், கிளர்ச்சி, இயந்திர உற்பத்தி, கருப்பு நிற தானிய அபிவிருத்தி உண்டாகும்.
சசியாதிபதிக்கான பலன்கள்
1. சூரியன் சசியாதிபதியானால் மக்கள் நோயால் அவதிப்படுவர், நல்ல மனமுள்ள பொருட்கள் விருத்தியடையும்.
2. சந்திரன் சசியாதிபதியானால் தன, தானிய விருத்தியும் அதிக மழையும், அதிகமான மகிழச்சியும் உண்டாகும்.
3. செவ்வாய் சசியாதிபதியானால் மழை குறைவாகவே பெய்யும், புஞ்சை செழிக்கும்.
4. புதன் சசியாதிபதியானால் மழை குறைவாகவே பெய்யும், புயலால் பயிர்கள் சேதமடையும்.
5. குரு சசியாதிபதியானால் மஞ்சள், அரிசி, மற்றும் தானியங்களின் மகசூல் அதிகமாக இருக்கும்.
6. சுக்கிரன் சசியாதிபதியானால் நறுமணப் பொருட்கள் உற்பத்தி அதிகமிருக்கும்.
7. சனி சசியாதிபதியானால் அற்ப மழையும், பஞ்சமும், பட்டினியும் உண்டாகும்.
தானியாதிபதி பலன்கள்
1. சூரியன் தானியாதிபதியானால் சுமாரான மழையும், தண்ணீர் பற்றாக்குறையும், விவசாய நஷ்டமும் ஏற்படும்.
2. சந்திரன் தானியாதிபதியானால் மாலை அதிகமாக பெய்யும். தானிய உற்பத்தி மிகுந்திருக்கும், பணப் பெருக்கம் உண்டாகும்.
3. செவ்வாய் தானியாதிபதியானால் நாட்டை புஞ்சை செழிக்கும், செந்நிற தானியங்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
4. புதன் தானியாதிபதியானால் நாட்டை ஆள்பவர்களுக்கு ஆகாது. தானிய உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
5. குரு தானியாதிபதியானால் அதிக மழை பெய்யும், பாசன குளங்கள், அணைகளில் நீர் நிரம்பியிருக்கும், மக்கள் மகிழச்சியோடு இருப்பர்.
6. சுக்கிரன் தானியாதிபதியானால் விவசாயம் மேன்மையடையும், விலைவாசி குறையும்.
7. சனி தானியாதிபதியானால் கரிசல் காட்டில் பயிர் உற்பத்தி அதிகமாக இருக்கும். உளுந்து போன்ற கருப்பு நிற தானியங்கள் அதிகமாக விளையும்.
அர்காதிபதிக்காண பலன்கள்
1. சூரியன் அர்காதிபதியானால் மழை அற்பமாகும், பஞ்சம், பட்டினி உண்டாகும், விலைவாசி உயரும், நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடும்.
2. சந்திரன் அர்காதிபதியானால் சகல தொழில்களும் விருத்தியடையும், பொருளாதார முன்னேற்றம், செழிப்பு, மன மகிழச்சி உண்டாகும்.
3. செவ்வாய் அர்காதிபதியானால் அற்ப மழை புழுதிக்காற்று, பொருட்சேதம் உண்டாகும்.
4. புதன் அர்காதிபதியானால் அதிக மழை பெய்யும், தன, தானிய விருத்தி உண்டாகும். கலைகள் செழிக்கும்.
5. குரு அர்காதிபதியானால் மழை அதிகம் பெய்யும், விவசாயம் விருத்தியடையும்.
6. சுக்கிரன் அர்காதிபதியானால் விவசாயம் சிறப்பாக நடக்கும்.
7. சனி அர்காதிபதியானால் மழை குறைவாகப் பெய்யும், ஆட்சியாளர்களிடம் நீதி, நேர்மை இருக்காது.
மேகாதிபதிக்கான பலன்கள்
1. சூரியன் மேகாதிபதியானால் பஞ்சம், பட்டினி, தண்ணீர்த் தட்டுப்பாடு, மக்கள் கலகம் முதலியன உண்டாகும்.
2. சந்திரன் மேகாதிபதியானால் பருவ மழை சரியான காலத்தில் பெய்யும், அதிக மழை விவசாயம் செழிக்கும்.
3. செவ்வாய் மேகாதிபதியானால் கடும் புயல் வீசும். தானிய விருத்தி உண்டாகும்.
4. புதன் மேகாதிபதியானால் புயலுடன் கூடிய கடும் மழை பெய்யும், நாடி செழிக்கும்.
5. குரு மேகாதிபதியானால் போதிய மழை பெய்யும், நீர்ப்பாசனம் சிறந்து விளங்கும்.
6. சுக்கிரன் மேகாதிபதியானால் நிறைவான மழை பெய்யும், மகிழச்சி, உடல் ஆரோக்கியம், சுகம் உண்டாகும்.
7. சனி மேகாதிபதியானால் அற்ப மழை பெய்யும், உளுந்து போன்ற கருப்பு நிற தானியங்கள் விருத்தியாக்கும்.
ரசாதிபதிக்கான பலன்கள்
1. சூரியன் ரசாதிபதியானால் ஆடு, மாடுகள் விருத்தியடையும், எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருக்கும், புதுவகையான திரவங்கள் கண்டுபிடிக்கப்படும்.
2. சந்திரன் ரசாதிபதியானால் புதுப்புது திரவங்களின் உற்பத்தி அதிகரிக்கும்
3. செவ்வாய் ரசாதிபதியானால் புதுவகையான திரவப்பொருட்கள் விருத்தியாக்கும்
4. புதன் ரசாதிபதியானால் மருத்துவ துறைக்கு சங்கடங்கள் வரும், மருந்துகளுக்கு தட்டுப்பாடு வரும்.
5. குரு ராசாதிபதியானால் திரவப்பொருட்கள் மிக மலிவான விலைக்குக் கிடைக்கும். புதுப்புது திரவப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படும்.
6. சுக்கிரன் ரசாதிபதியானால் போதிய மழை பெய்யும், திரவப் பொருட்கள் அபிவிருத்தியடையும்.
7. சனி ரசாதிபதியானால் உயர்குடிமக்களுக்கு கவுரவ குறைவு ஏற்படும். திரவப்பொருள்கள் வீணாகும்.
நீராசாதிபதிக்கான பலன்கள்
1. சூரியன் நீராசாதிபதியானல் வாணிபம் அபிவிருத்தியடையும். ஆடை அணிகலன்கள், நவரத்தினங்கள் விருத்தியாக்கும்.
2. சந்திரன் நீராசாதிபதியானல் சுகங்கள் பெருகும், அணிகலன்கள் அபிவிருத்தியாக்கும்.
3. செவ்வாய் நீராசாதிபதியானல் சிகப்பு நிற ரத்தினங்கள் அபிவிருத்தியடையும்.
4. புதன் நீராசாதிபதியானல் பணப் பெருக்கம் ஏற்படும், விவசாயம் விருத்தியாகும், தாதுப் பொருள் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
5. குரு நீராசாதிபதியானால் தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தினங்களின் விற்பனை அதிகரிக்கும்.
6. சுக்கிரன் நீராசாதிபதியானல் ஆடை, ஆபரண உற்பத்தியும் விற்பனையும் அபிவிருத்தியாக்கும்.
7. சனி நீராசாதிபதியானல் இரும்பு பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும், கருப்பு நிறப் பொருட்களுக்கு பற்றாக்குறை உண்டாகும்.
உப நாயகர்கள்
1. ராஜா – குதிரைக்கு அதிபதி
2. மந்திரி – யானைக்கு அதிபதி
3. அர்காதிபதி – பறவைகளுக்கு அதிபதி
4. மேகாதிபதி – மரம், செடி கொடிகளுக்கு அதிபதி
5. சசியாதிபதி – குடிமக்களுக்கு அதிபதி
6. சேனாதிபதி – பசுக்களுக்கு அதிபதி
7. ரசாதிபதி – சர்ப்பங்களுக்கு அதிபதி
8. தான்யாதிபதி – ஒட்டக்கங்களுக்கு அதிபதி
9. நீராசாதிபதி – கிரகங்களுக்கு அதிபதி
விசுவாவசு ஆண்டின் நாயகர்கள்
இந்த வருட ராஜா – சனி
இந்த வருட மந்திரி – சூரியன்
இந்த வருட அர்காதிபதி - சூரியன்
இந்த வருட சசியாதிபதி - குரு
இந்த வருட சேனாதிபதி – சூரியன்
இந்த வருட ரசாதிபதி – சனி
இந்த வருட தானியாதிபதி – செவ்வாய்
இந்த வருட நீராசாதிபதி – குரு
இந்த வருட மேகாதிபதி – சூரியன்