27/09/2026
*மனவளக்கலையைக் கற்பிக்கும் ஞானாசிரியரின் கனிவான பார்வைக்கு----!*
*முழுமை நலவாழ்விற்கும் ஆன்மீக அறிவிற்கும் உள்ள தொடர்பு!*
உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும் உலக இன்பங்களைத் துய்த்து போதும் என்ற மனநிறைவோடும் வாழ்வது *முழுமை நலவாழ்வு.*
ஆறாவது அறிவைக் கொண்டு அகத்தவம் செய்து புலன் கடந்து சிந்தித்து, ஆன்மாவே(மெய்ப்பொருளே) எழுச்சி பெற்று விண் முதல் மண் வரை ஐம்பூதங்களாகி,உலகங்களாகி,
நிலவுலகில் முறையாகக்கூடி ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிர்களாக உள்ளதை அறிந்த அறிவே *ஆன்மீக அறிவு.*
ஆன்மாவை அறிந்த அறிவிற்கு, இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சியே மனித வாழ்க்கை என்பதும், இயற்கை வளங்களை வாழ்க்கை அனுபோகப் பொருட்களாக மாற்றி இயற்கையை இரசித்து இன்பமுற கடவுளே மனித சமுதாயமாக வாழும் உண்மையும் விளக்கும்.
*"ஒன்றே குலம் ஒருவனே தேவன்; யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்ற உண்மையை உணர்ந்த மனிதனுக்கு,
1)சமுதாயத்திலிருந்து தன்னை தனியாகக் கருதும் *தான் என்ற அகந்தையும் தனது என்ற பற்றும் அற்றுப் போகும்.*
2)பேராசை முதலான ஆறு தீயகுணங்களும், நிறைமனம் முதலான ஆறு நற்குணங்களாக மாற்றம் பெற்று *குணநலப்பேறு கிட்டும்.*
3)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் கடமைகளை ஆற்றும் *அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.*
4) உடல் நலம் பேணி, பொருள் வளம் பெருக்கி, நட்பு நலம் காத்து நிகழ்கால இன்பங்களைத் துய்த்து மனநிறைவு பெறும் அறிவு உள்ளுணர்வாக விளங்கும்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற *செயல் விளைவுநீதி விளங்கி விடும்.*
5)பொருள் ஈட்டும் செயலிலும், புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலும் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து அறவழியில் பொருள் ஈட்டி, தனக்கும் பிறருக்கும் துன்பம் தராமலும் பிறர் துன்பம் போக்கியும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து மனநிறைவும் அமைதியும் பெற்று *பேரின்ப வாழ்க்கையை வாழ்வார்.*
*"உடல் நலத்தோடும் பொருள் புகழ் செல்வாக்கு புலனின்பம் நான்கும் போதும் என்ற நிறைவோடும் பேரின்ப வாழ்க்கையை வாழ்வதே முழுமை நலவாழ்வு."*
முழுமை நலவாழ்விற்கு உடலுக்கு உடற்பயிற்சியும், உயிருக்கு காயகல்பப் பயிற்சியும், மனத்திற்கு அகத்தவ அகத்தாய்வுப் பயிற்சியும் அளித்து ஆன்மாவை அறியும் யோகக்கலையே மனவளக்கலை (Vethathiri SKY).
ஆன்மாவை அறிய உடலுக்கும் உயிருக்கும் மனத்துக்கும் பயிற்சிகள் அளிக்கும் போதே உடல் நலம் மேம்படும். ஆன்மாவை அறிந்ததும் உடல் நலம் காக்கும் அறிவும் மனநலம் காக்கும் அறிவும் முழுமையாக விளங்கி விடும்.
மனவளக்கலையைக் கற்று ஆன்மாவை அறிந்து அறவழியில் கடமைகளை ஆற்றி முழுமை நலவாழ்க்கையை வாழ, அருகிலுள்ள அறிவுத்திருக்கோயிலை தொடர்பு கொள்வீர்!
அன்பர்களே வாரீர்!
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
உதவிக்கு அலைபேசி எண்:
79044 02887
70109 55300