Einstein International Baby Education

Einstein International Baby Education Greetings from einstein,
We appreciate your interest towards becoming a modern entrepreneur with the leading
Pre-School Brand, einstein juniors.

You can be a part of team, where we celebrate childhood, success and of course celebrate the business
certainty.einstein has been growing tremendously towards the acquistion of indian Pre-School market
with the offer of qualitative early education to the child. It’s the only preschool in india, which instills a habit a self-discovering since beginning. einstein has
been performing at par with the

global education and has been actively evolving to let our child
celebrate their childhood with indian ethnicity. We have strateically planned the growth path of einstein which shall be in peace with current early
education industry. Our business partners are growing hand-in-hand with the brand as you can read
their testimonials further.

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந...
08/02/2015

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
EINSTEIN INTERNATIONAL BABY EDUCATION

26/01/2015
14/12/2014

Greetings from einstein,
We appreciate your interest towards becoming a modern entrepreneur with the leading
Pre-School Brand, einstein juniors.

You can be a part of team, where we celebrate childhood, success and of course celebrate the business
certainty.einstein has been growing tremendously towards the acquistion of indian Pre-School market
with the offer of qualitative early education to the child.
It’s the only preschool in india, which instills a habit a self-discovering since beginning. einstein has
been performing at par with the global education and has been actively evolving to let our child
celebrate their childhood with indian ethnicity.

We have strateically planned the growth path of einstein which shall be in peace with current early
education industry. Our business partners are growing hand-in-hand with the brand as you can read
their testimonials further.

29/11/2014

என்ன சொன்னாலும் கேளுங்க... என்ன கேட்டாலும் சொல்லுங்க!

குழந்தைகளுக்கு நாம எந்த மாதிரியான வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கப்போறோம்னு பேசுறப்போ, முதலில் அவங்களிடம் என்னென்ன பண்புகளையும் குணங்களையும் உருவாக்கி வளர்க்கணும்னு பேச வேண்டியது முக்கியம். அவங்க வாழ்க்கைக்கு அதுதான் ரொம்ப அவசியம்.
வாழ்க்கைங்கிறது, எப்போதும் மலர்கள் தூவின சுகமான பாதையா இருக்கிறதில்ல. கல்லும், முள்ளும், மேடுகளும், பள்ளங்களும், அபாயகரமான வளைவுகளும், ஆபத்தான சரிவுகளும் நிறைஞ்ச ஒரு பயணம். அந்த மேடு பள்ளங்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்க, தன்னம்பிக்கை அவசியம்!
உயரம், உடல்வாகு, அடர்த்தியான முடி, கோணலான மூக்கு... இது மாதிரி, தன்னம்பிக்கைங்கிறது மரபியல் ரீதியா கடத்தப்படுற விஷயம் இல்லை. தன்னம்பிக்கையும், தைரியமும் ஆளுமை சம்பந்தப்பட்டவை.
அதை நம்மால ஒருவரிடம் உருவாக்கவும் முடியும்...
சிதைக்கவும் முடியும்.
சிலர் அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடும் எதுக்குமே கலங்காத தைரியத்தோடும் இருப்பாங்க. அது திடீர்னு வர்றதில்ல. குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்றது. அதைப் பெற்றோர்தான் வளர்க்கணும்.

நம்ம குழந்தைக்கு, தடைக்கற்களே இல்லாத ஒரு வாழ்க்கையை, நிச்சயமா நம்மால கொடுக்க முடியாது. ஆனா, தடைகள் உருவாகிறப்போ அதையெல்லாம் சந்திச்சு, தீர்வு கண்டுபிடிச்சு, அதைத் தாண்டி வரத் தேவையான தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கலாமே! அதுதான் நாம அவங்களுக்குக் கொடுக்கும் பெரிய சொத்து.
வீடோ, நிலமோ, பேங்க் பேலன்ஸோ... வேறு என்ன சொத்தா இருந்தாலும், அது அவங்களை விட்டுப் போக வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எந்தச் சொத்து போனாலும், தன்னம்பிக்கை இருந்தா போதும், இழந்ததை மீண்டும் சம்பாதிச்சுக்கலாம்! அதனால ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே, 'இது உன்னால் முடியாது’, 'இது உனக்குத் தெரியாது’னு சொல்லி வளர்க்காம, 'உன்னால இது முடியும்; முயற்சி பண்ணு’னு சொல்லி, நம்பிக்கையை ஊட்டி வளர்க்கணும்.
குழந்தைகள் நம்ம வார்த் தைகளைப் பின்பற்ற, அவங் களுக்கு முதல்ல நம்ம மேல நம்பிக்கை வரணும். 'நாம என்ன சொன்னாலும் கேட்கிறதுக்கு அம்மா, அப்பா இருக்காங்க! நமக்கு என்ன பிரச்னைனாலும் நம்ம அம்மா, அப்பாகிட்ட சொல்லலாம்!’கிற நம்பிக்கை, அவங்களுக்குள்ள ஆழமா இறங்கணும்.
பக்கத்து வீட்டுக் குழந்தை மாதிரி நம்ம குழந்தையை வளர்க்கிறதிலும், 'குழந்தை வளர்ப்பு’ பத்தின புத்தகத்தைப் படிச்சிட்டுக் குழந்தை வளர்க்கிறதிலும் அந்தப் புரிதல் வராது.
குழந்தை பேசத் தொடங்கினதிலிருந்து, அவங்ககிட்டே நாம பேச ஆரம்பிக்கணும். அவங்க என்ன சொன்னாலும் கேட்க ணும்... என்ன கேட்டாலும் சொல்லணும்! நாம என்ன தான் பிஸியா இருந்தாலும், சாய்ஸே இல்லைங்க... அதைப் பண்ணித்தான் ஆகணும்!
இதுக்கு, நாம செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். எவ்வளவு வேலையா இருந்தாலும், நம்ம குழந்தை ஏதாவது சொல்ல வரும்போது, நம்ம வேலையை ஒரு விநாடி நிறுத்திட்டு, குழந்தை என்ன சொல்ல வருதுனு கவனிக்கணும்.
அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம்ங்க!
ஒருவேளை வேலை மும்முரத்தில், 'சும்மா தொணதொணக்காத... அம்மாவுக்கு வேலை இருக்கு!’னு சொல்லி அந்தப் பிஞ்சு மனசைப் புறக்கணிச்சா, அது வேற எங்கே போய் தன் மனசை, கேள்வியை, குழப்பத்தை, சந்தேகத்தை, கோபத்தைச் சொல்லும்? இப்படியான சமயங்களில் குழந்தைகள் நம்மிடம் வரும்போது, நாம் பார்க்கிற வேலை எவ்வளவு முக்கியமானதா இருந்தாலும், ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் எடுத்துக்கிட்டு, 'கண்ணா... அம்மா இப்போ வேலையா இருக்கேன். ஐ’ம் வெரி ஸாரி. இந்த வேலையை முடிச்சுட்டு வந்துடறேன். நீயும் நானும் ஜாலியா பேசலாம்... சரியா?’னு கேட்கனும்.
இதை நீங்களும் ஃபாலோ பண்ணிப் பார்க்கலாம்! இந்த அணுகுமுறையால் குழந்தை சமாதானமாகி, 'ஓகேம்மா!’னு சொல்றதோட, 'அம்மா வேலை முடிஞ்சதும் நம்மகிட்ட பேசுவாங்க. நாம் சொல்றதைக் கேட்பாங்க!’ங்கிற அந்த ஆழமான நம்பிக்கை அதனுள் இறங்கும். அதை விதைக்கிறதுதான் பெற்றோரின் தலையாயக் கடமை. இப்படி இல்லாம, ஒவ்வொரு முறை குழந்தை நம்மைத் தேடி வரும்போதும் அதைப் புறக்கணிச்சுட்டு வேற வேலை பார்த்தோம்னா... குழந்தை அதிகமான மனஅழுத்தத்துக்கு ஆளாகும். இல்லேன்னா, 'என் பேச்சையா கவனிக்க மாட்டேங்கிற?’னு மூர்க்கமாகும் (aggressive). எதையாவது போட்டு உடைச்சு அல்லது அழுது, கத்தி, ரகளை பண்ணி, நம்ம கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்ப முயற்சிக்கும் (attention seeking). இது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுக்க தொடரும்.
இப்போ, சொல்லுங்க... ஒரு குழந்தையை, அதாவது நம்ம வருங்காலத்தை ஆரோக்கியமா வளர்த்தெடுக்கிறதுக்கு, ஒவ்வொரு நாளும் சில நிமிஷங்கள் ஒதுக்கணும்…… நியாயம்தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!
EINSTEIN INTERNATIONAL BABY EDUCATION

29/11/2014

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!!

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.
சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார்
-மனநல மருத்துவர் மீனாட்சி.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.
படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.
அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.
அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.
படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் -

EINSTEIN INTERNATIONAL BABY EDUCATION
PRESCHOOL SPECIALIST

GROUP OF MIRACLE MEDIA/MINARVA EDUCATIONAL TRUST
29/11/2014

GROUP OF MIRACLE MEDIA/MINARVA EDUCATIONAL TRUST

GROUP OF MIRACLE MEDIA/MINARVA EDUCATIONAL TRUST
29/11/2014

GROUP OF MIRACLE MEDIA/MINARVA EDUCATIONAL TRUST

Address

Avarampalyam Road
Coimbatore
641044

Opening Hours

Monday 9:30am - 12:30pm
Friday 9:30am - 12:30pm

Telephone

9894297037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Einstein International Baby Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Einstein International Baby Education:

Shortcuts

Share

Category