Hidhaaya Islamic College for Women

Hidhaaya Islamic College for Women

Share

Hidhaaya Community College
approved by Bharathiar University

11/12/2025

*அன்பிற்கினிய ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி மூன்றாண்டு ஆலிமா படிப்பு முடித்த மாணவிகளுக்கும், மதிப்பிற்குரிய பெற்றோர்களுக்கும்...*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

கருணையாளன் அல்லாஹ்வின் அருளால் *கடந்த 15 ஆண்டுகளாக நமது கல்லூரி* சிறப்பான முறையில் சமூக நலனில் அக்கறை கொள்ளும் ஆழ்ந்த அறிவும், விரிவான பார்வையும் கொண்ட *திறன் மிக்க ஆலிமாக்களை உருவாக்கி வருகிறது.*

இன்று நமது கல்லூரியில் பயின்ற பல ஆலிமாக்கள் பல்வேறு நிறுவனங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் இஸ்லாமிய சேவையை வழங்கி வருகிறார்கள். _அல்ஹம்துலில்லாஹ்._

இதோ... சமூகத்தை மறுகட்டமைப்பு செய்திட புதிய ஒளிக்கீற்றாக அடுத்த தலைமுறை ஆலிமாக்கள் உருவாகி நிற்கின்றனர். அவர்களின் கல்விப் பயணத்தின் உச்சநிலை—பட்டமளிப்பு விழா—நடைபெற உள்ளது.

*_இன்ஷா அல்லாஹ்.._ வருகின்ற 2026 ஜனவரி 26 ஆம் தேதி மாலை, நமது கோவையில் ஹிதாயாவின் "ஆறாவது பட்டமளிப்பு விழா" நடைபெற உள்ளது.*

_மாணவிகளே, பெற்றோர்களே! இந்த கல்வித் திருவிழாவிற்கு தாங்கள் முன்னரே மனதளவில் தயாராகிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்._

நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் துறைத் தலைவர் (HOD) _ஆலிமா. சலீனா பாரி_ அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

_மிகச்சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடந்தேறிடவும், புதியதாக பட்டம் பெற்றிட இருக்கும் மாணவிகள் தங்கள் வாழ்வில் இன்னும் அதிகமான சாதனைகள் புரிந்திடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திடுங்கள்._

கருணையாளன் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, நம்மை சுவனத்தில் ஒன்றினைப்பானாக, ஆமீன்.

- *P.S. உமர் ஃபாரூக்*
தலைவர்,
ஹிதாயா கல்வி அறக்கட்டளை

Photos from Hidhaaya Islamic College for Women's post 11/12/2025

*கோவை ஹிதாயா சமுதாயக் கல்லூரியில் புதிய கல்விப் பரிமாணம் – Diploma in Teaching & Learning துவக்கம்!*

கல்வி கற்றிட வயதோ, வேலையோ, சூழலோ தடையாக அமைந்திடக் கூடாது, கல்வியின் மூலமாக எளியவர்களுக்கு புதிய வாயில்களைத் திறந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது பயணத்தை தொடங்கியது *ஹிதாயா சமுதாயக் கல்லூரி.* இன்று, அந்த பயணம் பல மாணவிகளின் வாழ்வில் வசந்த காலத்தை உருவாக்கியிருக்கிறது.

*இந்த வளர்ச்சிப் பயணத்தில் அடுத்த பாய்ச்சலாக, Diploma in Teaching and Learning என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.* _பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இப்பாடத்திட்டம் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒன்றாகும்_.

*இப்பாடத்திட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2025 - இன்று ஹிதாயா கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் _Dr. புனிதவள்ளி_ அவர்கள் பங்கேற்று புதிய பாடத்திட்டத்தை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.*

துவக்க நிகழ்வை, ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் சேர்மன் *_திரு. P.S. உமர் ஃபாரூக்_* அவர்கள் தனது வழிகாட்டும் தலைமையுரையால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஹிதாயா சமுதாயக் கல்லூரியின் முதல்வர் *_திரு. M. சலீம்_* அவர்கள் துவக்கவுரையில் பாடத்திட்டத்தின் நோக்கமும் எதிர்கால திட்டங்களையும் விளக்கினார்.

பின்னர், ஹிதாயாவில் பயின்று தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி துறையின் பிரபலமான பிரிவுகளில் பணிபுரிந்து வரும் *முன்னாள் மாணவிகள் தங்கள் success stories-ஐ பகிர்ந்துகொண்டனர்.* அவர்களின் அனுபவங்கள், புதியதாக சேரும் மாணவிகளுக்கு ஒரு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது.

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துறைத் தலைவர் *ஆலிமா. சலீனா பாரி* அவர்கள் முன்னிலையில் ஹிதாயா சமுதாயக் கல்லூரி முதன்மை ஆசிரியர் *திருமதி. பெனாசிர்* அவர்கள் இந்நிகழ்வை சிறப்புற ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் ஹிதாயா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

14/11/2025
14/11/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*

நமது ஹிதாயா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் (05.11.2025) அன்று *கிராத் போட்டி* நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
இந்த போட்டியில் 3 ஆண்டு மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் இந்த போட்டியானது அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது

மாணவிகள் திருக்குர்ஆனை சரளமாக ஓதுவதற்காகவும்
தஜ்வீத்துடன் ஓதுவதற்காகவும் இந்த போட்டியின் மையகருத்தாக இருந்தது.

இந்தப் போட்டியின் நடுவர்களாக நமது ஹிதாயா கல்லூரியின் முன்னாள் மாணவிகள் *ஸாஹிரா 12Hc
சஞ்சிதா 15HC
குருஷித்12HC
பர்ஸானா
அபாபில்21HC
ஷம்னா19HC
அஸ்மிதா 22HC
ஆயிஷா சுமையா12HC ஆகியோர்கள் வருகை தந்திருந்தார்கள்

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பாக இந்த போட்டியை நடத்தித் தந்த ஹிதாயா முன்னாள் மாணவிகள் அனைவருக்கும் ஹிதாயா கல்லூரியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

03/10/2025

In sha allah

Photos from Hidhaaya Islamic College for Women's post 18/09/2025

*ஹிதாயா முன்னாள் மாணவியர் சங்கத் தேர்தல் இனிதே நிறைவுற்றது.*

கோவை *ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் மாணவியர்கள் சங்கத் தேர்தல்* 13 செப்டம்பர் 2025 அன்று ஹிதாயா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக, _இஸ்லாமிய பார்வையில் பொறுப்புகளின் முக்கியத்துவம்_ குறித்த உரையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மனிதவள மேம்பாடு செயலாளர் _*மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி*_ அவர்கள் வழங்கினர். அதன் பின், ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் இணைச் செயலாளர் *_ஆசிரியர். சலீம்_* அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

முன்னாள் மாணவியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

*தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:*

*தலைவர்* – ஆலிமா. குர்ஷித் ஹாதியா (12HC)

*செயலாளர்* – ஆலிமா. சாஹிரா ஹாதியா (13HC)

*துணைத் தலைவர்* – ஆலிமா. சன்பியா ஹாதியா (14HC)

*இணைச் செயலாளர்* – ஆலிமா. ஆயிஷா அபாபீல் ஹாதியா (21HC)

*இணைச் செயலாளர்* – ஆலிமா. ஷம்னா ஹாதியா (17HC)

புதிய பொறுப்பாளர்களுக்கு, ஹிதாயா கல்வி அறக்கட்டளை பொருளாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளரான *_திருமதி. ஜஹீனா அஹமது_* அவர்கள் பேட்ஜ் அணிவித்து பொறுப்புகளை வழங்கினார்.

நிறைவு உரையில், ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் தலைவர் *_ஜனாப். P.S. உமர் ஃபாரூக் சாஹிப்_* அவர்கள், முன்னாள் மாணவியர்கள் கல்லூரிக்கும் சமூகத்திற்கும் பயனளிக்கக்கூடிய முன்னுதாரணமான இஸ்லாமிய அறிஞர்களாக வளர வேண்டும் எனக் கூறி வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துறைத் தலைவர் *_ஆலிமா. சலீனா பாரி_* அவர்கள், மேலும் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் *_Dr. அப்துல் ஹக்கீம்_* அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Coimbatore