18/06/2026
🎓 முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா – 17.06.2026 🎓
17.06.2026 அன்று, RVS Polytechnic College-இல் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்கும் வகையில் மாணவர் சேர்க்கை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் மு. நடராஜன் அவர்கள் தலைமை தாங்கி, மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, அனைத்து துறைத் தலைவர்களும் தங்களது துறைகளின் சிறப்பம்சங்கள், கல்வி சாதனைகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், மாணவர் முன்னேற்ற செயல்பாடுகள் மற்றும் பல்வேறு சாதனைகளை புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.
"இன்றைய அறிமுகம், நாளைய சாதனைகளுக்கான முதல் படி."
புதிய கனவுகளுடன் இணைந்த மாணவர்களுக்கு RVS குடும்பத்தின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🌟