16/01/2026
Science of Tamilar Jothida Chronological system: Basic udal arivu : volume-1 (Tamil)
தமிழர் சோதிட காலக்கணிதம் அமைப்பு: அடிப்படை உடல் அறிவு : தொகுதி-1(தமிழ்)
கோள்கள் - உடலின் பாகங்கள் :
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
1. பூமி
━━━━━
❖ தலை
❖ எலும்பு
❖ கைகள்
❖ விரல்கள்
❖ வலது கண்
2. நிலா:
━━━━━
❖ இடது கண்
❖ மார்பகம்
❖ உதிரம்
❖ வயிறு
❖ சிறுநீரகம்
❖ சிறுநீரகப்பை
❖ ரத்தம்
❖ திரவங்கள்
❖தொண்டை உள்பாகம்
3. செவ்வாய்:
━━━━━━━━━
❖ பற்கள்
❖ தசைகள்
❖ ரத்தத்தில் உள்ள சிகப்பு செல்கள்
❖ எலும்பு
❖ மஜ்ஜை
❖ இருதய பகுதி
❖ புருவம்
❖ விறைகள்
❖ தண்டு வடம்
❖ மூக்குத்தண்டு
4. புதன்:
━━━━━
❖ தோல்
❖ நாக்கு
❖ நபி
❖ கைகள்
❖ தோள்பட்டை
❖ கழுத்து
❖ நரம்புகள்
5. குரு :
━━━━━
❖ தொடைகள்
❖ ஆள்காட்டி விரல்
❖ மூளை
❖ மூக்கு
❖ நாசி
❖ தசை
❖ கொழுப்பு
6. சுக்கிரன் :
━━━━━━━━━
❖ கருப்பை
❖ கன்னங்கள்
❖ முகம்
❖ விந்து
❖ யோனி
❖ பிறப்பு
❖ உறுப்பு
7. சனி :
━━━━━
❖ முழங்கால்
❖ குதிகால்
❖ பாதம்
❖ இரைப்பை
8. ராகு :
━━━━━
❖ பெருங்குடல்
❖ உதடுகள்
❖ வாய்
❖ காது
❖ மலக்குடல்
❖ யோனி
9. கேது :
━━━━━
❖ ஆசனவாய்
❖ தாடி
❖ நகம்
❖ ஆண்குறி
❖ மீசை
❖ நரம்புகள்
1. காலன் வீடு:
━━━━━━━━━━
❖ தலை
❖ முகம்
2. பறவை வீடு:
━━━━━━━━━━
❖ கண்
❖ காது
❖ வாய்
❖ மூக்கு
❖ தொண்டை
3. கழுகு வீடு:
━━━━━━━━━━
❖ கழுத்து
❖ தோள்பட்டை
4. மான் வீடு:
━━━━━━━━━
❖ மார்பகங்கள்
❖ நுரையீரல்
❖ இருதயம்
5. தீபம் வீடு:
━━━━━━━━━
❖ வயிறு
❖ செரிமான உறுப்புக்கள்
6. குதிரை வீடு
━━━━━━━━━━
❖ இடுப்பு
❖ முதுகெலும்பு
7. கால தேவி வீடு:
━━━━━━━━━━━━
❖ கருப்பை
❖ வயிறு
❖ செரிமான உறுப்புக்கள்
8. தேள் வீடு:
━━━━━━━━━
❖ பிறப்புறுப்பு
❖ மலதுவாரம்
9. யானை வீடு:
━━━━━━━━━━
❖ தொடைகள்
10. காகம் வீடு:
━━━━━━━━━━
❖ கால்மூட்டு
11. பசு வீடு:
━━━━━━━━
❖ கணுக்கால்
12. மீன் வீடு:
━━━━━━━━━
❖ பாதம்
அறிமுகம்:
உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறை உயிரினத்தின் பல்வேறுசெயல்களை திறனுடன் செயல்படுத்த உதவுகிறது. உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை
❖ எலும்பு மண்டலம்
❖ தசை மண்டலம்
❖ செரிமான மண்டலம்
❖ சுவாச மண்டலம்
❖ இரத்தஓட்ட மண்டலம்
❖ நரம்பு மண்டலம்
❖ நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
❖ கழிவு நீக்க மண்டலம்
மனித உடலின் உறுப்பு மண்டலங்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் பற்றி இப்பாடத்தில் மேலும் காண இருக்கின்றோம்.
நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் சோதிடத்தின் அடிப்படை, அண்டத்தின் தாக்கமே பிண்டத்தில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதாகும். இதை ஆராய்ந்து, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் முனிவர் கோள்களை 'காலதெய்வங்களாக' கருதி, அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்புபடுத்தி, சோதிட காலக்கணிதத்தை உருவாக்கியுள்ளார். அவை. பூமி மற்றும் சூரியனை மையப்படுத்தி 12 பாகங்களாக பிரித்தும் இதே போல மனித உடலையும் 12 பாகங்களாக பிரித்து அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்பு படுத்தி உள்ளது தமிழர் சோதிட காலக்கணிதத்தை உருவாக்கி அருளிச்செய்தார்.
அண்ட-பிண்ட தொடர்பு: பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் (அண்டம்) பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை (பிண்டம்) பாதிக்கின்றன என்பது தமிழர் சோதிடத்தின் மையக் கருத்தாகும்.
ஒளிரும் பொருட்கள்:
━━━━━━━━━━━━━━
இப்புவியில் வாழும் மனிதர்கள் அன்றாடம் கண்ணுறும் பகலில் தெரியும் சூரியன், இரவில் தெரியும் சந்திரன், கோடான கோடி விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) மற்றும் கூர்ந்து நோக்கும் புலனாகும் நம் இருக்கும் பூமியும், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களுமாம்.
இதில் பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி கோள்கள் சுய ஒளி அற்றவை இருப்பினும் இவை சூரியனிடமிருந்து பெற்ற ஒளியைப் பிரதிபலிப்பதால் அவையும் ஒளிா்பவையாகக் கருதப்படுகின்றன. ஆதலால் கோள்களும் தமிழர் சோதிட காலக்கணிதத்தின் உறுப்புக்கள் ஆகின்றன. இருளிடம், ஒளியிடத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் சோதிட காலக்கணிதம் இதன்படி வெயிலில் வெளியில் நாம் நிற்க அல்லது வெளியில் வெளியில் வேலைகள் செய்ய சூரிய ஒளியால் நமது உடல் உஷ்ணமாவதும் அதாவது உடலில் சூடேறுவது-சூடாவது, உடலின் நிறம் மாறுவது கண்கூடாக பார்த்து உணர முடிகிறது. இவ்வொயின் தாக்கத்தால் ஓரிரு நாட்களில் ஒரு சிலருக்குத் தோல் நோய்களும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களும் தோன்றுகின்றன எனவே எவ்வொளி ஆயினும் ஜோதி அதன் வலிமைக்கு ஏற்ப உயிரினங்களிலும், ஜடப்பொருள்களின் மீதும் தனியோரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. இந்த உண்மையை இருளிடம், ஒளியிடத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழர் சோதிட காலக்கணிதத்தில் லிருந்தது அறிய முடிகிறது.
இயற்கையின் இணையற்ற இவ்வுண்மையை மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. இன்றைய அறிவியல் அறிவினால் சோதனைகள் பலவற்றின் வாயிலாகத் தெனிவாக்கப்பட்டு வருகிறது. தவிர்க்க இயலாத இயற்கையின் இடர்பாடுகளில் சிக்கித் தவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் தொல்லைகளிலிருந்து ஆறுதல் பெறவும், அதிலிருந்து மீளவும் கண்ட வழித்துணையே தமிழர் சோதிட காலக்கணிதம். இது வாழ்க்கை அல்ல. எனினும் வாழ்க்கையைத் தகவமைப்புக்கும் பல கோட்பாடுகளை தன்னுள் கொண்டுள்ளது.
மனித உடலில் தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை என சூட்சுமப் பொருள்களின் (திசுக்களின்) கட்டமைப்பால் உருவானது என்றும் மனித உடலை பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த பன்னிரெண்டு பிரிவுகளில் ஏற்படும் விளைவுகள், தாக்கங்கள் பற்றிய பலன் தமிழர் சோதிட காலக்கணிதம் கூறுகிறது, மென்மையான இத்திசுக்கள் ஒளிக்கதிர்களின் தாக்கங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது ஆகிறது. இச்செயலால் நம்மை ஆட்கொள்ளும் விண்மீன்களும், கோள்களும் நமக்கு காலதெய்வங்களாக காலத்தின் இறைகளாகின்றன.
நமது உடலை இயக்கும் உயிர், கண்களுக்கும், அறிவியல் கருவிகளுக்கும் புலப்படாத நிலையில் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது என்பது தமிழர் சோதிட காலக்கணிதத்தின் தந்தை சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரின் கூற்று. உயிரற்ற உடல் சிதைவதையும், உயிருள்ள உடல் வளர்வதையும் காணும்போது உடல், உயிர் என்ற ஒன்று உள்ளதை அனைவரும் அறிய முடிகிறது.
உடல் உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதும் மூளையைத் தனியொரு பொருட்களாகக் கருதவேண்டியுள்ளது. ஏனெனில் மூளை விருப்பப்படி நிறைவேற்றும் இயக்கங்களையும் ( இச்சை செயல்களையும்) விருப்பம் இன்றியே (தன்னிச்சையாக) செயல்படும் செல்களாக மூச்சுவிடுதல், இதய இயக்கம், இரத்தவோட்டம், விழிப்புணர்வு ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கிறது. இதன் இயக்கத்தை மனம் அல்லது சித்தம் எனக் கூறுவர்.
இப்பிரபஞ்சம், அதன் இயக்கம், உயிர் இவற்றின் சேர்க்கை மற்றும் பிரிவு ஆகிய அனைத்தையும் காலத்திற்கு உட்பட்டதாகவும், காலத்தை வழிநடத்தும் காலதெய்வங்களுக்கு உட்பட்டதாகவே அறிகிறோம். வரைமுறையுடன் இயங்கும் அனைத்தையும் இன்னதென்று பிரித்து உணர முடியாததொரு சக்தி இயக்குகிறது. இச்சக்தியையே இறை அல்லது பரம்பொருள் (அனைத்தையும் விஞ்சிய பொருள்) அல்லது இயற்கை எனப் பலவாறாக அவரவர் சிந்தனைக்கேற்ப அழைக்கின்றோம். இவ்வறிமிகம் படலத்தில் கூறியபடி தமிழர் சோதிட காலக்கணிதப் பட்டப்படிப்பு, அண்டம் (பிரபஞ்சம்) அதில் தோன்றிய பிண்டம் ( உயிர்) இவற்றைப் பாதிக்கும் காலம், இவை அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் சக்தி காலதெய்வங்கள் (இறை) மற்றும் இவை தொடர்பான செய்திகள், கணக்கீடுகள், பயன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது
நன்றி
இந்து சமய கல்வி அறக்கட்டளை
(பதிவு எண்: 47/2023)
வெற்றி வேல் நகர், மேல்நாரியப்பனூர், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.