Tnpsc Power

Tnpsc Power TNPSC தேர்வு மற்றும் பல்வேறு அரசு வேலை ச?

Gr 04 Application Open: 30.03.2022Last date to Apply: 28.04.2022Exam Date: 24.07.2022Total Vacancies: 7382ALL the best.
29/03/2022

Gr 04 Application Open: 30.03.2022

Last date to Apply: 28.04.2022

Exam Date: 24.07.2022

Total Vacancies: 7382

ALL the best.

அரசுப் பணிக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு:-தமிழ்நாடு அரசு , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை , மாநில தொ...
04/07/2021

அரசுப் பணிக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு:-

தமிழ்நாடு அரசு , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை , மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ( TNPSC ) நடத்தப்படும் Group -2 தேர்விற்கு 05.07.2021 திங்கட்கிழமை முதல் கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது .

Greetings from State Career Guidance Centre

We are pleased to inform you that we are starting an online free coaching class for TNPSC Group 2 aspirants

Kindly register for the classes with the following Google Form link

https://forms.gle/41jp7fzcAcUdPwZC7

Also join our WhatsApp group made specifically for this class with the following link

https://t.me/joinchat/qXrHpiYNQShmNTc1

https://chat.whatsapp.com/GXBNSe0MmX9JSJIy99sPup
Regards
Team SCGC.

The whatsapp group is full.. please contact the group creater... They will give a new group link... All the best

நல்வாழ்த்துக்கள் ஸார்💐💐💐
07/05/2021

நல்வாழ்த்துக்கள் ஸார்💐💐💐

*ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS) தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!👇*    ...
10/12/2020

*ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS) தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!👇* பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளமான http://www.civilservicecoaching.com சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் நாளை (11/12/2020) காலை 10 மணி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.28 மாலை 6 மணியுடன் முடிகிறது.

நுழைவுத்தேர்வு:

பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியுடையவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 24/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்கிறது. நுழைவுத்தேர்வு ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் இருக்கும் (Objective type). தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு தேர்வாணையப் பயிற்சி மையத்தில் 6 மாத காலம் இலவசத் தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்! பயிற்சியில் சேர தேவையான கல்வித் தகுதி👇

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது அடுத்த ஆண்டு ஆக.1-ம் தேதி அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கவேண்டும்.

வயது வரம்பு: இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பகுதிநேரப் பயிற்சியும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.

பயிற்சிக் கட்டணம்

பயிற்சிக் காலம் முழுவதும் முற்பட்ட வகுப்பினருக்கு ஆயிரம் ரூபாய் மற்ற பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவும் இலவசமாக வழங்கப்படும். பகுதிநேரப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது. ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக ரூ.3000/- செலுத்த வேண்டும்.

பயிற்சிக்கான மொத்த இடங்கள்:

விடுதியில் தங்கிப் பயிற்சி பெற 225 பேருக்கு அட்மிஷன் போடப்படும். அவர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். இதில் வகுப்புவாரியாகத் தாழ்த்தப்பட்டோர் 110 இடங்கள் (ஆதிதிராவிடர் 92, அருந்ததியர் 18), பழங்குடியினர் 3 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40, பிற்படுத்தப்பட்டோர் 54, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 7, முற்பட்ட வகுப்பினர் 4 என மொத்தம் 225 பேர்.

பகுதி நேர வகுப்பில் சேருவோருக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 100. இதில் தாழ்த்தப்பட்டோர் 49 (ஆதிதிராவிடர் 41, அருந்ததியர் 8), பழங்குடியினர் 1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18, பிற்படுத்தப்பட்டோர் 24, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 3 , மாற்றுத்திறனாளிகள் 3, முற்பட்ட வகுப்பினர் 2.

சிவில் தேர்வு எழுத ஆர்வம் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், வெளிமாவட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

அளிக்கவேண்டிய சான்றிதழ்கள்:

தேர்வானவர்கள் 5 சான்றிதழ்களைக் கட்டாயம் அளித்தால் மட்டுமே பயிற்சியில் சேர அனுமதி.

ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ மற்றும் திருப்பி அளிக்கக்கூடிய டெபாசிட் தொகை ரூ.3000 கட்ட வேண்டும்.

குறிப்பு: இந்தப் பயிற்சி மையத்தில் இதற்கு முன் முழு நேரப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை.

இவ்வாறு அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை தங்கும் வசதி
02/11/2020

ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி

மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை தங்கும் வசதி

https://www.hindutamil.in/news/vetrikodi/news/587183-free-ias-workshop.html
06/10/2020

https://www.hindutamil.in/news/vetrikodi/news/587183-free-ias-workshop.html

இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வை நேற்று இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளையோர் எழுதி இருக...

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வுக்கு விண்ணப்ப...
17/09/2020

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 978 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்(மாவட்டம், மாநகரம், ஆயுதப்படை) 685(ஆண்கள்), 3099(பெண்கள், திருநங்கைகள்) மொத்தம் 3784 பணியிடங்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர்கள் 6545(ஆண்கள்).
சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் 112(ஆண்கள்), 7(பெண்கள்) என 119 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் தீயணைப்பாளர்கள் 458(ஆண்கள்) பணியிடங்கள் மற்றும் இது தவிர 72 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 10,978 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 1.7.20 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 1.7.2002 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவோ, 1.7.1996 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும். இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே
(www.tnusrbonline.org) விண்ணப்பிக்க முடியும். இதர வழியில் விண்ணப்பபடிவம் மற்றும் தட்டச்சு படிவம் மூலமாக விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணையவழி வாயிலாக விண்ணப்பித்தல் பணி வருகிற 26ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. எழுத்து தேர்வு 37 மாவட்டங்களில் நடைபெறுகிறது. எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்களும், உடற் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண், சிறப்பு மதிப்பெண்கள் 5 மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். எழுத்து தேர்வில் குறைந்தப்பட்சம் 28 மதிப்ெபண்கள் பெற வேண்டும். தேர்வு தொடர்பான மேலும் விவரங்கள் அடங்கிய தகவல்களை www.tnusrbonline.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 1.30 லட்சம் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

6th Std Sem 1 Geography  உங்களுக்கு தெரியுமா? பகுதி வினா
25/04/2020

6th Std Sem 1 Geography உங்களுக்கு தெரியுமா? பகுதி வினா

11/04/2020
 #ஆறாம்  #வகுப்பு  #வரலாறு  #முதல்  #பருவம்  #உங்களுக்கு  #தெரியுமா? #தகவல்பேழை..
31/03/2020

#ஆறாம் #வகுப்பு #வரலாறு #முதல் #பருவம்
#உங்களுக்கு #தெரியுமா?
#தகவல்பேழை..

Address

Cheyyar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tnpsc Power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category